குழந்தைப் பருவ கார்ட்டூன் உலகம் நிஜமாகும்போது: ஜப்பானில் நோபித்தா வீடு... இந்தியரின் வீடியோ வைரல்!

டோரேமான் கார்ட்டூனின் நோபித்தா வீட்டை ஒத்திருக்கும் ஜப்பான் வீடு: இந்திய இளைஞரின் 6000 கிமீ பயண வீடியோ மில்லினியல்ஸ், ஜென் Z ரசிகர்களுக்கு குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டெடுக்கிறது
japanese-nobita-house
japanese-nobita-house
Updated on

நம் இந்தியாவைச் சேர்ந்த  ஒருவர் ஜப்பானுக்குப் பயணம் செய்து, டோரேமான் கார்ட்டூனில் வரும் நோபித்தாவின் உலகத்தை ஒத்திருப்பதாகக் கருதப்படும் ஒரு வீட்டையும் தெருக்களையும் படம் பிடித்தார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்தக் காணொளி, பார்வையாளர்களிடையே ஒருவித ஏக்க அலையைத்தூண்டியது.

அந்த வீடு நிஜமாகவே பார்ப்பதற்கு நோபித்தாவின் பரிச்சயமான வீடைப் போலவே  இருந்தது. அமைதியான சுற்றுப்புறத் தெருக்கள், மற்றும் பள்ளிக்குச் செல்லும் அந்தப் புகழ்பெற்ற நடைப்பயணம் ஆகியவை விசித்திரமான முறையில் நிஜமாகவே தோன்றின; ஏதோவொரு வகையில் உள்ளே நுழைந்துவிடக்கூடிய ஓர் இடம் போலவே அவை இருந்தன. சமீபத்தில், ஒரு இந்தியர் குழந்தைப் பருவத்தின் மிகவும் பிரியமான கார்ட்டூன் களங்களில் ஒன்றான இந்த இடத்தைப் பார்வையிட விருப்ப பட்டு பயணம் செய்திருக்கிறார்.

சார்த்தக் சச்தேவா என்கிற  Indian content creator, டோரேமான் கார்ட்டூனில் வரும் நோபிடா நோபியின் வீட்டின் நிஜ வடிவம்போல் தோற்றமளிக்கும் இடத்தைப் பார்வையிடுவதற்காக ஜப்பானுக்கு மேற்கொண்ட தனது பயணத்தின் காணொளியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்தக் காணொளியில், சச்தேவா கேமராவைத் தன்னை நோக்கித் திருப்பியவாறு, "இந்த வீட்டைப் பார்ப்பதற்காக நான் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு 6000 கிலோமீட்டர் பயணம் செய்தேன்" என்று பார்வையாளர்களிடம் உற்சாகமாகக் கூறினார். பின்னர், கார்ட்டூனில் வரும் நோபித்தா மற்றும் டோரேமானின் புகழ்பெற்ற வீட்டை போன்று மிகவும் ஒத்திருப்பதாக அவர் கூறிய அந்த வீட்டை வெளிப்படுத்தியபோது, ​​அந்தக்காணொளி ஒரு அமைதியான குடியிருப்புப் பகுதியின் காட்சிகளுக்கு மாறியது.

அந்தப் பகுதியைச் சுற்றி நடந்தவாறே, அந்த நிகழ்ச்சியின் நீண்டகால ரசிகர்கள் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய, பரிச்சயமான தோற்றமுடைய விவரங்களை அவர் சுட்டிக்காட்டினார். அருகிலிருந்த ஒரு சாலையை நோக்கி சைகை காட்டி, அந்த அனிமேஷன் தொடரில் நோபித்தா பள்ளிக்குச் செல்லும்போதோ அல்லது விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் போதோ "சரியாக இதே சாலையில்" எண்ணற்ற முறை நடந்து செல்வதை பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

அந்த வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்த சச்தேவா அவர்கள் அதற்கு “நிஜ வாழ்க்கையில் டோரேமான் இருக்கும் இடங்கள்!” என்று அழகான தலைப்பையும் கொடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
யூரோப் சுற்றுலா (9) - விழுந்து எழுந்த அனுபவமும், வேறு பல இடையூறுகளும்...
japanese-nobita-house

இந்தப் பதிவு இணையத்தில், குறிப்பாகப் பள்ளி முடிந்ததும் டோரேமான் பார்த்து வளர்ந்த மில்லினியல் மற்றும் ஜென் Z தலைமுறைப் பார்வையாளர்களிடையே, விரைவாகப் பழைய நினைவுகளைத் தூண்டியது. பல பயனர்கள் அந்தக் கார்ட்டூன் தங்கள் குழந்தைப் பருவத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்ததாக ஒப்புக்கொண்டதோடு மட்டுமில்லாமலா அந்த வீட்டை நேரில் பார்த்தது எதிர்பாராத விதமாக உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும் கூறினார்கள்.

ஒரு சிலர் இந்த இடமானது  தங்களின் பயண விருப்பப் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டதாகவும் கூறினார்கள். மேலும், ஒரு சிலர், தாங்களும் ஒருநாள் இதைப் போலவே குழந்தைப் பருவ ஏக்கத்தை நேரடியாக அனுபவிக்கவேண்டும் என்றும் விரும்பினார்கள்.

இன்னும் சிலர், தாங்கள் வளர்ந்தபோது கற்பனை செய்தபடியே அந்தப் பகுதி இருந்ததாகக் கூறி, நோபித்தா, டோரேமான், ஷிஜுகா, ஜியான் மற்றும் சுனியோவின் சாகசங்களைப் பார்த்து மணிக்கணக்கில் செலவழித்ததையும் ஆனந்தத்தோடு  நினைவு கூர்ந்தார்கள்.

பலர் அந்தக் காணொளியை, பயணம் மற்றும் கடந்த கால நினைவுகளின் ஒரு கச்சிதமான கலவை என்றும் வர்ணித்தார்கள். அனிமேஷன் நிகழ்ச்சிகள் மாயா ஜாலமாகவும், விசித்திரமான ஆறுதலையும் அளித்த தங்களின் எளிமையான குழந்தைப்பருவ நாட்களுக்கு அது தங்களை மீண்டும் அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் கூறினார்கள்.

logo
Kalki Online
kalkionline.com