ஓராண்டு உழைப்பில் மலரும் கைவினை! காஷ்மீர் சால்வைகளின் வியப்பூட்டும் உலகம்!

சோஸ்னி எம்பிராய்டரி முதல் கனி நெசவு வரை காஷ்மீர் சால்வைகளின் தனித்துவம்.
பஷ்மினா சால்வை - Kashmir Pashmina
பஷ்மினா சால்வை - Kashmir Pashmina
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

முன்பெல்லாம் காஷ்மீர் சுற்றுலா செல்பவர்கள் தம் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி காஷ்மீர் சால்வைகளை வாங்கி வருவது வழக்கம். உலகின் மிக மென்மையான மற்றும் விலை உயர்ந்த சால்வைகளுக்குப் பெயர் பெற்ற ஊர் காஷ்மீர் (குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்). இந்த வகை சால்வைகளை நெய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதை நெய்யும் முறை, அதன் தனிச்சிறப்புகள் பற்றி இப்பகுதியில் காண்போம்.

இந்த சால்வைக்கு தேவையான மிக முக்கியமான மூன்று இவைதான்.

பஷ்மினா:

லடாக்கின் சாங்தாங்கி மலை ஆடுகளின் மிக மெல்லிய உரோமத்திலிருந்து தயாரிக்கப்படும் உயர்தர, மென்மையான நூலும் அதனால் நெய்யப்படும் சால்வையுமே பஷ்மினா.

கனி நெசவு நுட்பம்:

சாதாரண நாடாக்களுக்குப் பதிலாக 'கனி' எனப்படும் மரக் குச்சிகளைக் (Bobbins) கொண்டு, துணியை நெய்யும்போதே வண்ண நூல்களை இழைகளோடு சேர்த்துப் பின்னும் முறை.

சோஸ்னி – ஊசி எம்பிராய்டரி நுட்பம்:

ஏற்கெனவே நெய்யப்பட்ட மெல்லிய சால்வைத் துணியின் மீது, மிக மெல்லிய ஊசியையும் வண்ண நூல்களையும் கொண்டு கைகளால் தைக்கப்படும் நுணுக்கமான எம்பிராய்டரி (Needle Embroidery) முறை. இதில் பூக்கள், பறவைகள், பைஸ்லி வடிவங்கள் ஆகியவை துணி நெய்யப்பட்ட பிறகு மேலே தைக்கப்படுகின்றன.

இந்த மூலப் பொருள் ஆனது மனிதனின் தலைமுடியைவிடப் பல மடங்கு மெல்லியது. இந்த மெல்லிய நூலால் நெய்யப்படுவதால், இது மிக மிக லேசாக இருக்கும். ஒரு முழுமையான பஷ்மினா சால்வையை ஒரு சின்னஞ்சிறு விரல் மோதிரத்திற்குள் (Ring Test) நுழைத்து வெளியே எடுத்துவிட முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

அப்படி எடை குறைவாக இருந்தாலும், அதை அணிந்திருப் பவர்களுக்கு நல்ல கதகதப்பைக் கொடுத்து, கடும் குளிரையும் தாங்கும் அபாரமான வெப்பத்தைத் தக்கவைக்கும் திறன்கொண்டது என்பதுதான் அதன் மற்றும் ஒரு தனிச்சிறப்பு.

இதையும் படியுங்கள்:
நம்ப முடியாத தெய்யம் சடங்குகள்: முகமூடிக்கு பின்னால் நடக்கும் அந்த ஆன்மிக மாற்றம் என்ன?
பஷ்மினா சால்வை - Kashmir Pashmina

கைவேலைப்பாடுகள்: இதில் போடப்படும் 'சோஸ்னி' (Sozni) எனப்படும் நுணுக்கமான ஊசி வேலைப்பாடுகள் மற்றும் 'கனி' (Kani) எனப்படும் மரக்குச்சிகளைக்கொண்டு நெய்யப்படும் பூ வேலைப்பாடுகள் உலகப் புகழ்பெற்றவை. ஒரு கனி சால்வையை நெய்து முடிக்க சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கூட ஆகும்.

காஷ்மீரின் புகழ்பெற்ற கனி (Kani) சால்வைகள், 'கனி' (Kani) எனப்படும் சிறிய மரக் குச்சிகளைக் (Bobbins) கொண்டு நெசவு செய்யும்போதே வண்ணப் பூக்களையும் வடிவமைப்புகளையும் இணைத்து உருவாக்கப்படும் அரிய கைத்தறிப் படைப்புகளாகும். இவற்றின் சிறப்பே, சால்வை நெய்யப்படும்போதே அந்த ஓவியங்களும் சேர்ந்து உருவாவதில்தான் இருக்கிறது.

கனி சால்வைகள் நெய்யப்படும் விதம்:

கனி மரக் குச்சிகள் (Kani Bobbins): வழக்கமான நெசவு நாடாக்களுக்குப் பதிலாக, சிறிய மரக்குச்சிகளில் வெவ்வேறு வண்ண நூல்களைச் சுற்றி வைத்துக் கொள்வார்கள். வடிவமைப்பில் எத்தனை வண்ணங்கள் வருகின்றனவோ, அத்தனை மரக்குச்சிகள் நெசவாளரின் கையில் இருக்கும் (சில சிக்கலான சால்வைகளுக்கு நூற்றுக்கணக்கான குச்சிகள் கூடப் பயன்படும்).

பஷ்மினா சால்வை - Kashmir Pashmina
பஷ்மினா சால்வை - Kashmir Pashmina

சங்கேதக் குறிப்பு – 'தாலிம்' (Talim): நெசவாளர்கள் நேராகப் படத்தைப் பார்த்து நெய்வதில்லை; 'தாலிம்' (Talim) எனப்படும் சங்கேத மொழியில் எழுதப்பட்ட காகிதக் குறிப்புகளைப் பார்த்துக் கணக்கிட்டு நெய்வார்கள். எந்த இடத்தில் எந்த வண்ணக் குச்சியை எத்தனை நூலிழைகளுக்குக் கீழே அல்லது மேலே விட வேண்டும் என்ற கணிதக்குறிப்புகள் அதில் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தமா? இரண்டு ஊசிகள் போதும்... உங்கள் மனதை மாற்றும் கைவினைப் பின்னல் கலையின் சக்தி!
பஷ்மினா சால்வை - Kashmir Pashmina

துணி நெசவும் வடிவமைப்பும் ஒரே நேரத்தில்: நூலைக் கோத்து, மரக் குச்சியை இழுத்து, பின்னர் கனமான மரக்கத்தியால் ('பூஜ்' - Pooj) நூல்களை இறுக்கமாக அழுத்தி வரிசையாக அமைப்பார்கள். இதில் தவறு நேர்ந்தால், அந்த வரிசை முழுவதையும் பிரித்து மீண்டும் முதலில் இருந்து நெய்யவேண்டும்.

கனி சால்வைகளின் தனிச்சிறப்புகள்

பல்நோக்குக் காலம் மற்றும் பொறுமை: ஒரு சாதாரண கனி சால்வையை நெய்து முடிக்க 3 முதல் 6 மாதங்கள் ஆகும். முழுமையாக வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த மிக நுணுக்கமான சால்வையை உருவாக்க ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்கள் கூட ஆகலாம்.

நெசவு மற்றும் எம்பிராய்டரி: குறிப்பாக எம்பிராய்டரி செய்யப்படும் எந்த துணியிலும் அதன் பின்புறம் முண்டு முடிச்சுகள் காணப்படும். ஆனால் இந்த சால்வையை நெய்த பிறகு மேலே தைக்கப்படும் 'சோஸ்னி' (Sozni) எம்பிராய்டரி போலல்லாமல், கனி சால்வையின் வடிவமைப்புகள் துணியின் இழைகளிலேயே பின்னிப் பிணைந்திருக்கும். இதனால் இருபுறமும் ஒரே மாதிரியான நேர்த்தி காணப்படும். இந்த நேர்த்தி தான் இதன் தனி சிறப்பு.

புவிசார் குறியீடு (GI Tag): எந்த ஒரு கலையும் வளர வேண்டுமானால் அதற்கு புவிசார் குறியீடு மிக அவசியம். அதுதான் அந்த கலையை செய்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். அந்த விதத்தில் காஷ்மீர் கனி சால்வைகள் தனித்துவமான பாரம்பரியக் கைவினைக் கலையாக அங்கீகரிக்கப்பட்டு புவிசார் குறியீடு (Geographical Indication) பெற்றுள்ளன.

முகலாய மன்னர்கள் காலத்திலும், அதற்கு முன்பிருந்தும் காஷ்மீர் கனி சால்வைகள் அரச குடும்பத்தினரும் உயர்குடியினரும் விரும்பி அணிந்த பெருமை கொண்டவை.

"மரக்குச்சிகளைக் கொண்டு சங்கேதக் குறிப்புகளின் அடிப்படையில் இழைக்கு இழை வண்ணங்களைப் பின்னி உருவாக்கப்படும் காஷ்மீர் கனி நெசவு, கணிதத் துல்லியமும் கைவினைப் பொறுமையும் இணையும் உலகின் அரிய நெசவுக் கலையாகும்."

இதையும் படியுங்கள்:
5000 லிட்டர் தண்ணீரை சேமிக்கும், 400 வயதான சென்னையின் அதிசய மரம் பற்றி தெரியுமா?
பஷ்மினா சால்வை - Kashmir Pashmina