

எந்த ஊரு சென்றாலும் அது நம்ம ஊரு போல வருமா ?
சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு 'சோற நாடு'ஆகிப் பின், 'சோழ நாடா'கியது என்பர்.
இங்கே செவி வழி கேட்ட, உணர்ந்த செய்திகளை பதிவிடுகிறேன்.
குடந்தையைச் சுற்றி உள்ள சிற்றூர்களின் பெயர்கள் அதற்கான காரணங்களை ஆராயும்போது ஒரு ஒற்றுமையை காணமுடிகிறது.
‘பழையாறை’:
சோழ நகரத்திற்கு ‘பழையாறை’ தலை நகரமாக விளங்கி இருக்கிறது. அதற்கு ஆதாரமாக அரண்மனைக்காரத் தெரு, ஆரியப்படையூர், காவல்காரன் தெரு, பம்பப்படையூர் போன்ற பெயர் உடைய தெருக்களும், கிராமங்களும் கோயில் நகரை அலங்கரிக்கின்றன.
மேலும் சில விவரங்கள்:
‘மாதுளம் பேட்டை’ என்பது “மகாதளம் பேட்டை” என்ற சொல்லின் மருவுதல் எனக் கொள்ளலாம்.
மகா தளம் பேட்டை அருகில் ஆனைக்காரன்பாளையம் உள்ளது.
இதுவே யானை படைக்கான தளமாகவும் இருந்து இருக்கக்கூடும். எனவே, நம் முன்னோர்கள் பல படைகளை அமைப்பதற்கு மகா தளம் அமைத்து அதை “பேட்டை” என்று அழைத்தனர்.
மேலும் குடந்தையையின் வரலாற்று, தொழில் மற்றும் வணிகச் சான்றுடைய அடையாளங்கள்:
1. பழைய அரண்மனைத்தெரு,
2. கம்பட்ட (நாணயம், நிதி தொடர்புடைய) விஸ்வநாதர் தெரு,
3. பஞ்சுக்காரத் தெரு,
4. நெல்லுக்கடைத் தெரு,
5. வேம்படித் தெரு (பித்தளை வியாபாரம்)
6. காசுக்காரத் தெரு,
அந்தணர்கள் குடியிருப்பு பகுதிகள்
A. சோலையப்பன் தெரு,
B. பக்த புரித்தெரு,
C. வேத பாடசாலை போன்றவை.
அரசலாற்றங்கரையில் நெசவாளர்கள் குடியிருப்பு நடந்து இருக்கிறது.
அங்கே ‘சவுராஸ்டிரா மக்கள்’ அதிகம் வாழும் பகுதி. அவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்ததுதான் - 'ராஜ ராஜேந்திரப் பேட்டை கூட்டுறவு சங்க பண்டகசாலை.'
ஆக, சோழ மன்னர்கள் 'குடிகளாக மக்களை' பிரித்து அவர்கள் செய்யும் தொழிலை வைத்து குடி அமர்த்தினர் என்று சொல்லலாம்.
ஆரிய படையூர் என்ற சிற்றூரில் 'சோழன் மகாதேவின் சிலை' இருப்பதாக கூறுகின்றனர்.
உடையாளுர் - பட்டீஸ்வரம் போகும் வழியில் சில சிவன் கோயில்களை பார்க்கலாம் - பாழடைந்த நிலையில்!
அவைகள் யாவும் ஊர் 'பிரபுக்கள் மற்றும் நிழக்கிழார்' வாழ்ந்து மறைந்த நினைவுச்சின்னங்கள்.
இது மந்திரிகள் போன்றோரையும் உள் அடக்கும். அவர்கள் ராஜராஜ சோழனிடம் (ராஜாவிடம்) பணியாற்றியதற்கு மரியாதை நிமித்தமாக உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.
மேலும் பல உதாரணங்கள்:
இன்றும் ‘திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள தென்னத்தோப்பில் குட்டிக் கோயில்களை பார்க்கலாம்’ - இவை யாவும் ஆதீன கர்தாக்கள் மறைவுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்கள்.
**********************
அறம் செய்ய விரும்பு
தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
நான் இருக்கிறேன்; ஆதலால் நான் நானாக இருக்கிறேன் - இருத்தலியல் கோட்பாடு.
நான் சிந்திக்கிறேன்; அதுவே நானாக இருக்கிறேன் - கருத்தியல் கோட்பாடு.
இந்த பிரபஞ்சம் (எல்லா உயிர்கள் உட்பட) பொருளால் ஆனது - பொருள்முதல் வாதம்.
வாழ்வியல் தத்துவம், கோட்பாடுகளை கடந்து நம்மிடையே வாழ்ந்து, நமக்கு அறத்தையும்; சத் சித் ஆனந்தத்தையும்; வாழ்கையை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் யார் என்றால்:-
ஏசு பிரான்,
முகம்மது நபிகள்,
புத்த பிரான்,
பிரம்மாக்கள், சிவ யோகிகள், பெருமாள் புகழ்பாடும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் வள்ளலார் வரை...
Judaism, Sikhism, Jainism, zenism போன்ற இன்ன பிற மதங்களும் ஒன்றையே போதிக்கிறது; அது யாதெனில்...
சுயம் தவிர்
இதன்மூலம் நம் மூல மந்திரமான நாம் நம் கடமையை செய்வோம்;
1. குடும்பத்திற்கு,
2. சமூகத்திற்கு,
3. நாட்டிற்கு,
4. உலகிற்கு.
'பலன்' பற்றி பிரபஞ்சம் தீர்மானிக்கும்!
இதற்கு பொருளோ, பணமோ தேவை இல்லை. மனம் ஒன்றே போதுமானது.
மனதில் சிறு மாற்றம் - 'மரங்களை பாதுகாப்பது' - அது நம்மை வாழ வைக்கும்.
இந்த பிரபஞ்சம் எல்லா உயிர்களாலும் இயக்கப்படுகிறது என்கிற உண்மையை உணர தவறினால் நாளை மனித இனம் அழிவை சந்திக்கும்.
இருப்போம்;
செயல் புரிவோம்;
எல்லாம் 'அவன்' செயல்.
அந்த 'செயல்' - நல்வினையாக மாற நம் சிந்தனையை ஒன்று இணைப்போம்.
உலக சகோதரத்துவத்தையும், உலகலாவிய அறத்தையும் போற்றுவோம்.