தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்: ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், பார்வை நேரம், கட்டணம்!

மன்னர்கள் காலத்தில் தனிப்பட்ட பயன்பாட்டில் இருந்த தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் அரிய ஓலைச்சுவடிகள் மற்றும் ஓவியங்கள் குறித்த தகவல்கள்.
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம் (Thanjavur Maharaja Serfoji's Sarasvati Mahal Library) தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றாகும்.

அரசு உடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த தஞ்சை சரசுவதி மஹால் நூலகம், பெரியகோவிலைப் போலவே தஞ்சாவூரின் தனி அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோவிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

பார்வையாளர்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள புத்தகங்களைக் காணலாம்; மேலும், நூலக வளாகத்திலேயே அமர்ந்து புத்தகங்களை வாசிக்கவும் முடியும். இந்த நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கடந்த காலம்:

சரஸ்வதி மஹால் நூலகம், கி.பி. 1535 முதல் 1675 வரை தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரச நூலகமாகத் தொடங்கப்பட்டது. 1675-ல் தஞ்சாவூரைக் கைப்பற்றிய மராட்டிய மன்னர்கள், உள்ளூர் கலாச்சாரத்தை ஆதரித்ததுடன், 1855-ஆம் ஆண்டு வரை இந்த அரச நூலகத்தை மேலும் மேம்படுத்தினர். மராட்டிய மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர் இரண்டாம் சரபோஜி (கி.பி. 1798–1832) ஆவார்; இவர் கலை மற்றும் பல்வேறு அறிவுத் துறைகளில் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார்.

அவர் இந்த நூலகத்தை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; வட இந்தியாவில் இருந்த புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்வி மையங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் பல நூல்களைச் சேகரிக்கவும், வாங்கவும், பிரதிகளை எடுக்கவும் பல பண்டிதர்களைப் பணியமர்த்தினார். இந்த நூலகத்திற்கு, மராட்டிய மன்னர்களில் சிறந்த புரவலராகத் திகழ்ந்தவரின் நினைவாகவே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மன்னர் காலத்தில் மன்னரும், மன்னரின் குடும்பத்தினரும் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த நூலகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1918-ம் ஆண்டு அக்.5-ம் தேதி பொது நூலகமாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நூலகம், தன்னிடம் உள்ள அரிய கையெழுத்துப் பிரதிகளைப் பதிப்பிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு, அனைத்து ஆவணங்களையும் மைக்ரோஃபிலிம் (microfilm) வடிவில் பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது. மேலும், நூலகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், நூலகக் கட்டிடத்திற்குள்ளேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான இந்த அருங்காட்சியகம், பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பழங்கால கையெழுத்துப் பிரதிகள், சித்திரங்கள் கொண்ட கையெழுத்துப் பிரதிகள், மூல வரைபடங்களின் அச்சிடப்பட்ட பிரதிகள், நிலவரைபடத் தொகுப்புகள் (அட்லஸ்கள்), தஞ்சாவூர் பாணி காகித ஓவியங்கள், கேன்வாஸ் ஓவியங்கள், மரப்பலகை ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களின் உருவப்படங்கள் மற்றும் சார்லஸ் லெ-பிரன் (Charles Le-Brun) தயாரித்த முக அமைப்பியல் விளக்கப்படங்கள் (physiognomy charts) போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய நூல்கள்:

* இந்த நூலகத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவில் தோன்றிய பிற மொழிகளில் எழுதப்பட்ட பனை ஓலைச்சுவடிகள் மற்றும் காகித ஆவணங்களின் அரிய தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
வரலாற்றுச் சான்றுகளின் பொக்கிஷமாய் திகழ்ந்த யாழ் நூலகம்!
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்

* இலக்கியம், இசை, அரியவகை மூலிகைகள், மருத்துவம் பற்றிய குறிப்புகளும், ஆன்மிகம், ஜோதிடம், ஓவியங்கள் உள்ளிட்டவை குறித்த நூல்களும் உள்ளன.

* இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, இந்தி மொழிகளில் 49,000-க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளும், 23,169 காகிதச் சுவடிகளும், 6,426 புத்தகங்கள் மற்றும் இதழ்களும், 70,000-க்கும் அதிகமான அரிய வகை அச்சு நூல்களும், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுத்தப்பட்ட 3 லட்சம் மராத்தி எழுத்தான மோடி எழுத்துக்களால் எழுதப்பட்ட ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

* இங்கு 60,000-க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளன.

* சரஸ்வதி தேவியின் சிலை, 'ராம பட்டாபிஷேகம்' குறித்த பிரம்மாண்டமான ஓவியம், விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிறிய ஆனால் மிக நேர்த்தியான ஓவியங்கள், தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களின் உருவச் சித்திரங்கள் மற்றும் இரண்டாம் சரபோஜி மன்னரின் இரண்டு பிரம்மாண்டமான ஓவியங்களைக் காணலாம்.

* பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா நூலும், கிரந்த எழுத்தில் 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட முழுமையான வால்மீகியின் இராமாயண சுவடிகளும் உள்ளன.

* 17, 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த, தென்னிந்திய மராட்டிய மரபுடன் தொடர்புடைய 3,076 மராத்தி கையெழுத்துப் பிரதிகள் இங்கு உள்ளன.

தஞ்சை சரஸ்வதி மஹால்
தஞ்சை சரஸ்வதி மஹால்image credit- Wikipedia

* இந்த மராத்தி கையெழுத்துப் பிரதிகளில் பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளன; சில மட்டும் தெலுங்கு எழுத்து வடிவில் பனை ஓலைகளில் எழுதப்பட்டுள்ளன.

* இவை தவிர, பெரும்பாலும் பனை ஓலைகளில் எழுதப்பட்ட 846 தெலுங்கு கையெழுத்துப் பிரதிகளும், 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 22 பாரசீக மற்றும் உருது மொழி கையெழுத்துப் பிரதிகளும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

* ஆயுர்வேத அறிஞர்களின் மருத்துவக் குறிப்புகள், நோயாளிகளின் மருத்துவ வரலாறு மற்றும் நேர்காணல்கள் அடங்கிய ஆவணங்கள் 'தன்வந்தரி' எனும் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* மராட்டிய அரச ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த 1,342 ஆவணக் கட்டுகளும் இங்கு உள்ளன. இந்த அரச ஆவணங்கள் மராத்தி மொழியின் 'மோடி' எழுத்து வடிவில் (தேவநாகரியின் விரைவாக எழுதக்கூடிய வடிவம்) எழுதப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் பார்வை நேரம் மற்றும் கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இதையும் படியுங்கள்:
வரலாற்றைப் பாதுகாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்: நீங்கள் அறியாத அரிய தகவல்கள்!
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்

பார்வை நேரம் (Timings) :

காலை நேரம்: 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

மதிய இடைவேளைக்குப் பிறகு: மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை (வார இறுதியில் சில நேரம் மாற்றம் இருக்கலாம்)

விடுமுறை நாட்கள்: பொதுவாக புதன்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்க்குதலாக வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் திறந்திருக்கும்.

நுழைவுக் கட்டணம் (Entry Fee):

நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட அனைவருக்கும் நுழைவுக் கட்டணம் ரூ.50 மட்டுமே. (வெளிநாட்டினருக்கு ரூ. 100 அல்லது ரூ. 200 வரை மாறுபடும்).

கேமரா அல்லது புகைப்படம் எடுப்பதற்கான கட்டணம் இடத்தின் நிர்வாகம் மற்றும் அரண்மனை வளாகப் பகுதிகளுக்கு ஏற்ப ரூ. 30 முதல் ரூ. 50 வரை வசூலிக்கப் படுகிறது. சில குறிப்பிட்ட அருங்காட்சியகப் பகுதிகளுக்கு உள்ளே புகைப்படம் எடுப்பதற்குத் தடை அல்லது தனித்தனிக் கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன.

பொதுமக்களின் பார்வைக்காக பல்வேறு ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், மன்னர்கள் போரின்போது பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை உள்ளூர் சுற்றுலா பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை நாள்தோறும் தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பென்னிங்டன் நூலகம்: தமிழ்நாட்டின் பழைமையான தனியார் நூலகத்தின் சுவாரஸ்யமான தகவல்கள்!
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நூலகம் இன்றைக்கும் மக்களுக்குத் தேவையான குறிப்புகளைக் காலம் கடந்தும் வழங்கி வருகிறது.