மரணத்தோடு போராடும் தமிழர்களின் சங்கு குளித்தல் தொழில்: கடலடி உலகத்தின் திகிலூட்டும் ரகசியங்கள்!

மூச்சடக்கி ஆபத்தான கடலின் ஆழத்தில் சங்குகளைச் சேகரிக்கும் தமிழக மீனவர்களின் ஆபத்தான வாழ்வியல் பின்னணி.
சங்கு குளித்தல் - Tamil Nadu Fishermen
சங்கு குளித்தல் - Tamil Nadu FishermenAI Image
Updated on

மிழகத்தின் தூத்துக்குடி, ராமநாதபுரம் கடலோரங்களில் பாரம்பரியமாக நடைபெறும் சங்கு குளித்தல் தொழில், முத்து நகரம் என அழைக்கப்படும் மன்னார் வளைகுடா வரலாற்றை தாங்கி நிற்கிறது. பால் சங்கு, வலம்புரிச் சங்கு போன்றவை இந்து, புத்த மதங்களில் புனிதமாக கருதப்படுகின்றன. ஆபத்தான சூழலில் உயிரை பணயம் வைத்து கடலடியில் இறந்த சங்குகளை சேகரிக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பும் மருத்துவ வசதியும் அவசியம்.

சங்கு குளித்தல் அல்லது சங்கு எடுத்தல் என்பது கடலின் ஆழத்தில் மூழ்கி கடலின் அடியில் உள்ள இயற்கையான சங்குகளை சேகரிக்கும் ஒரு பாரம்பரியமான தமிழ் தொழில் ஆகும்.

இது தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான தூத்துக்குடி ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பரவலாக காணப்படும் பழங்கால தொழிலாகும்.

மீனவர்கள் எந்தவித நவீன கருவிகள் இல்லாமல் மூச்சை அடக்கிப் பிடித்துக்கொண்டு கடலில் அடி ஆழத்திற்கு சென்று சங்குகளை எடுத்து வருவார்கள். சங்குகள் கைவினைப் பொருட்கள் செய்ய அணிகலன்கள் தயாரிக்க மற்றும் வழிபாடுகளுக்கு பயன் படுத்தப் படுகிறது. தற்போது மீன்பிடி வருகை கடல் வளம் குறைதல் போன்ற காரணங்களால் தற்போது இந்த தொழில் குறைந்து வருகிறது.

தூத்துக்குடி கடல் பகுதியில் பண்டைய காலம் முதல் முத்து குளித்தல் சங்கு குளித்தல் தொழில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதி முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. 1961க்கு பிறகு மன்னார் வளைகுடா பகுதியில் முத்து குளித்தல் நடைபெறவில்லை ஆனால் சங்கு குளித்தல் இன்று வரை நடைபெற்று வருகிறது

சங்கு குளிப்போர் டெர்பி நல்லா பாைரம் derbi nalla pairam எனப்படும் பால் சங்கை குறிவைத்துதான் கடலுக்குள் செல்கிறார்கள். இந்த வகை சங்குகள் இந்து மற்றும் புத்த மதத்தில் புனிதம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. சங்கு குளிப்போர் பால் சங்குகளை உயிரோடு கடலுக்கு அடியில் இருந்து எடுத்து வருவார்கள். அதன் சதைப்பகுதியை மாமிசமாக பயன்படுத்திவிட்டு சங்கை மட்டும் விற்பனை செய்வார்கள்.

சங்கு குளித்தல் - Tamil Nadu Fishermen
சங்கு குளித்தல் - Tamil Nadu FishermenAI Image

தற்போது உயிருள்ள சங்குகளை மீனவர்கள் குறிவைப்பது இல்லை. சேற்றில் புதைந்து கிடக்கும் இறந்த சங்குகள்தான் மீனவர்களின் குறியாக உள்ளது. இறந்த சங்குகளை பாலிஷ் செய்வது எளிது என்பதால் வியாபாரிகள் இதனை பெரிதும் விரும்புகிறார்கள். சங்கு குளித்தலில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கடலில் 20 மீட்டர் ஆழம் வரை மூச்சை பிடித்துக்கொண்டு நீந்தி சென்று சங்கு குளிப்பார்கள்.

தற்போது படகில் ஏர் கம்ப்ரசர் பொருத்தி 100 மீட்டர் வரை செல்லும் நீண்ட குழாய் மூலம் சுவாசம் பெற்று சங்கு குளித்து வருகின்றனர். இரும்பு சங்கிலி உடன் இணைக்கப்பட்ட முகமூடி மற்றும் துடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். கடலுக்கு அடியில் சேற்றில் இறந்த சங்குகளை எடுக்க கரண்டிகளை பயன்படுத்துகின்றனர்.

இவர்களை டீ கம்ப்ரஷன் சிக்னஸ் என்ற நோய் தாக்குகிறது. இதற்கான சிகிச்சை கொச்சியில் மட்டுமே அளிக்க முடியும். மத்த இடங்களில் கிடையாது. எனவே தற்போது சங்கு குளித்தல் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகிறது. ஸ்கூபா டைவிங் மூலம் சங்கு குளித்தல் ஆபத்து குறைவு ஸ்கூபா டைவிங்கில்

முறையே முகமூடி கண்ணாடி ஆக்சிஜன் மாஸ்க் அணிவதால் எந்த பாதிப்பும் இல்லை. இதற்கான வழிமுறைகளை மீன்வளத்துறை வகுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
யுனெஸ்கோ வியந்த ராஜஸ்தானின் கல்பேலியா: ஒரு துளி விஷமும், நளினம் பொங்கும் நடனமும்!
சங்கு குளித்தல் - Tamil Nadu Fishermen

ராமநாதபுரம் பகுதியில் மன்னார் வளைகுடா பகுதிகளில் சங்கு குளித்தல் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கன்னிராஜபுரம், நரிப்பையூர், மூக்கையூர், ஏர்வாடி, கீழக்கரை,

திருப்புல்லாணி, பாம்பன் மண்டபம், தனுஷ்கோடி, தேவிபட்டணம், தொண்டி, நம்புதாழை, போன்ற பகுதிகளில் சங்கு குளித்தல் பிரதானமாக நடைபெற்று வருகிறது.

பால் சங்கு கச்சத்தீவு பகுதிகளில் அதிகம் கிடைக்கும். இதில் வலம்புரிச் சங்கு அதிக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. வலம்புரிச் சங்குகளை பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள். பால் சங்கு, கோவேரி சங்கு, சக்கரை சங்கு, குழி சங்கு, யானை முள்ளி சங்கு, என பல வகைப்படும். மன்னார் வளைகுடா பகுதியில் சங்கு மூக்குடன் காணப்படும். பாக் ஜலசந்தியில் மூக்கு இல்லாமல் சங்குகள் காணப்படும்.

இதையும் படியுங்கள்:
யுனெஸ்கோ வியந்த ராஜஸ்தானின் கல்பேலியா: ஒரு துளி விஷமும், நளினம் பொங்கும் நடனமும்!
சங்கு குளித்தல் - Tamil Nadu Fishermen

சங்கு குளிப்பவர்கள் மொத்தமாகத்தான் ஒரே நேரத்தில் கடலில் இறங்குவார்கள். இது மீனவர்களின் பாரம்பரிய தொழிலாக இருந்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதிகளில் மாட்டு தலை சங்குகள் கிடைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 271 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடற்கரை அமைந்துள்ளது.

ராமநாதபுரம் தூத்துக்குடி இடையே கடல் பரப்பில் 21 தீவுகள் உள்ளது. கடலின் அடியில் களிமண் கொண்ட நிலப்பரப்பில்தான் அதிக அளவில் சங்குகள் கிடைக்கும். இப்படியாக சங்கு குளிப்பவர்கள் ஆபத்தான நிலையில் தான் இந்த வேலையை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை ஆகும்.

logo
Kalki Online
kalkionline.com