அழகிப் போட்டியில் மகுடம் சூடக் காத்திருக்கும் தமிழகப் பெண்கள்!

மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தேஜாவின் வெற்றி, தமிழகத்தில் அரசுப் பயிற்சி மையத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.
அழகிப் போட்டி
அழகிப் போட்டி
நான்சி மலர்

கொங்கு பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் பட்டதாரியான நான்சி மலர், கோரா (Quora) வாயிலாக எழுத்துலகில் காலடி வைத்து சுவாரசியமாக எழுதக் கற்றவர். கல்கி ஆன்லைன் ஊடகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிப்பீடு, சமூக வலைதளம், எடிட்டிங் மற்றும் எழுத்துப்பணியில் நிபுணத்துவம் பெற்றவர். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, பயணம், சுற்றுச்சூழல் குறித்த இவரது கட்டுரைகளும் கல்கியில் வெளியான சிறுகதைகளும் வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளன.

Updated on: 

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்குப் புதிய பாதைகளை அமைத்துத் தருவதற்காகவும் அழகிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் போட்டியாளர்களின் நளினம், பேச்சாற்றல், அறிவுத்திறன், நிதானம், ஆளுமை, சமூக அக்கறை போன்ற திறமைகள் சோதிக்கப்படுகின்றன.

​ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளர்கள், திரைத்துறையினர் மற்றும் கொடையாளர்களால் 'மிஸ் இந்தியா' அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டன. 1964 முதல் 'தி டைம்ஸ் பெமினா' இதழாலும், 2024 முதல் 'கிளமானந்த்' குழுமத்தாலும் இப்போட்டிகள் நடத்தப்பட்டு, சர்வதேச அளவிலான போட்டிகளுக்குப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

​அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்று மகுடம் சூடுபவர்களுக்குத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள், விளம்பரத் தூதுவர், மாடலிங் ஒப்பந்தம், நகைகள், இலவசப் பயிற்சி, வெளிநாட்டுப் பயணம் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, இளம் பெண்களுக்கு இப்போட்டிகளில் பங்குபெற வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரிக்கிறது.

​

இந்தியா அளவில் கேரளா, மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 79 ஆண்டுகளில் 1952, 1977, 1991, 2018 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

​தமிழகத்தில் அழகிப் போட்டிகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததும், குடும்பத்தாரின் ஆதரவு இல்லாததும், அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்கள் இல்லாததும், போலிப் பயிற்சி மையங்கள் செய்யும் பண மோசடிகளுமே இளம் பெண்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளத் தயங்குவதற்குக் முக்கியக் காரணங்களாக உள்ளன.

அழகிப் போட்டி
அழகிப் போட்டி

​இந்நிலையில், அக்டோபர் 29 அன்று டெல்லியில் நடந்த 'மிஸ் யூனிவர்ஸ்' போட்டியில், கும்பகோணம் அருகிலுள்ள எஸ். புதூரைச் சேர்ந்த பி.எஸ்சி நர்சிங் மாணவியும், வீரப்பன் அவர்களின் மகளுமான தேஜா இரண்டாம் இடம் பிடித்துத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் அழகிப் போட்டிகளில் கிராமப்புறப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல; நம்முடைய வெற்றி நாம் எடுக்கும் முயற்சியைப் பொறுத்தே அமைகிறது என்பதைத் தேஜா சாதித்துக் காட்டியுள்ளார்.

​

இதையும் படியுங்கள்:
பியூட்டி பார்லர் என்ற பெயரில் நடக்கும் பகீர் மோசடிகள்... உஷாராகும் நேரம் வந்துவிட்டது!
அழகிப் போட்டி

போதிய வழிகாட்டுதலும் பயிற்சியும் இல்லாமலேயே தமிழ்நாட்டுப் பெண்களால் இந்த அளவுக்குச் சாதிக்க முடிகிறது என்றால், சரியான பயிற்சி மையமும், வழிகாட்டுதலும் இருந்தால் நிச்சயமாக அவர்களால் சர்வதேச அளவில் எளிதாக வெற்றி வாகை சூட முடியும் என்பதில் ஐயமில்லை. அங்கீகாரமற்ற போலி மையங்களின் பண மோசடிகளைத் தடுத்து, ஆர்வமுள்ள பெண்களை ஊக்குவிக்க அரசுப் பயிற்சி மையம் கட்டாயம் தேவைப்படுகிறது.

​

அழகிப் போட்டி
அழகிப் போட்டி

நம்முடைய தமிழக அரசு இதற்கு உதவ வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் அரசு வழிகாட்டும் பயிற்சி மையம் அல்லது கல்லூரி அமைப்பதன் மூலம், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உள்ளிட்ட பல்வேறு துணைத் தொழில்கள் உருவாகும். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.

இதையும் படியுங்கள்:
எந்த ஆடை உங்கள் உடலுக்கு பொருந்தும்? கண்ணாடி முன் நின்று 5 வடிவங்களை அடையாளம் காணுங்கள்!
அழகிப் போட்டி

பெண்களும் இந்தப் புதிய பாதையின் மூலம் தைரியமாகவும், சுதந்திரமாகவும் தங்கள் கனவுகளை அடைவார்கள். அரசு ஆதரவு தந்தால், பெற்றோர்களின் ஆதரவும் பெண்களுக்கு நிச்சயம் கிடைக்கும். பெண்களின் முன்னேற்றம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

​எனவே, பெண்களின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இந்த முயற்சிக்கு ஆதரவு தந்து அரசுப் பயிற்சி மையத்தைத் தமிழ்நாட்டில் அமைத்தால் பெண்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருப்பதோடு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும்.

அழகிப் போட்டிகளில் கிராமப்புறப் பெண்களும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும், போலிப் பயிற்சி மையங்களின் ஆபத்திலிருந்து விடுபட அரசுப் பயிற்சி மையம் ஏன் அவசியம் என்ற தெளிவையும் இந்தப் பதிவு தருகிறது.