வெண்மையான உறுதியான நகங்கள் வேண்டுமா? இதோ வழிகள்!

Beauty tips in tamil
Want stronger nails?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

* லுமிச்சம் பழம் வைட்டமின் சி நிறைந்தது. இது நகங்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உகந்தது.

* தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டில் சூடு செய்து நகங்களுக்கு மசாஜ் செய்யலாம்.

* ரஞ்சு சாற்றில் நகங்களை ஊறவிட்டு பிறகு நீரினால் துடைத்தால் நகங்கள் உறுதி பெறும்.

* லிவ் எண்ணெய் சூடாக்கி நகங்கள் மற்றும் நகங்களில் எங்காவது கீறல் ஏற்பட்டிருந்தால் அந்த இடங்களில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு பிறகு மசாஜ் செய்யுங்கள்.

* கீரை வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* கங்களில் கறைபடிந்தால் சிறு குச்சியில் ஹைட்ரஜன் பெராக்சைடு முக்கி கறைபட்ட இடத்தில் தடவ வேண்டும்..

* லுமிச்சம்பழ தோலின் அடிப்பாகத்தை நகங்களில் வைத்து தேய்த்தால் நகங்கள் நிறமாகும்; நகங்களில் இருக்கும் கறைகளும் போய்விடும்..

* ரு கப் சுடுநீரை எடுத்து லேசாக ஆறியதும் அதில் பாதி எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அதற்குள் கை விரல்களை முக்கி எடுக்க, நகங்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

இதையும் படியுங்கள்:
கால் கருமையை நிரந்தரமாகப் போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்!
Beauty tips in tamil

* கங்களில் தேங்காய் எண்ணெயை தடவி விட்டு சிறிது நேரம் கழித்து நகங்களை வெட்டினால் அழகாக வெட்டலாம்.

* ருதோன்றி இலையை அரைத்து இரவில் படுக்கும் முன்பு விரலில் கட்டி வந்தால் விரலில் தோல் உரிவது நிற்கும். அதனுடன் நகமும் சிவப்பாகி அழகு தரும்.

-ஆர்.ஜெயலட்சுமி

logo
Kalki Online
kalkionline.com