
நீர் நிலைகள் மற்றும் வளமான நிலப்பரப்புகளில் வளரும் நறுவிலி மரங்கள் நெடு நெடுவென 100 அடிகள் வரை வளரக் கூடியவை. பலா மர இலைகளைப் போன்று நீண்ட வடிவத்தில் உருண்டை வடிவ இலைகளைக் கொண்ட நறுவிலி மலர்களின் மலர்கள் கொத்து கொத்துகளாகக் காணப்படும். இதன் பழங்கள் கோலிகுண்டு போன்று வெளிர் நிறமாக இருக்கும்.
நறுவிலியின் பயன்கள்:
உடல் வெப்பநிலையை சமன்படுத்தும். இரத்தத்தில் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்தும்.
சளி, ஜலதோஷம், இருமல் மற்றும் தொண்டைக் கட்டு பிரச்னைகளை தீர்க்கும். பித்த வியாதிகளைப் போக்கும்.
செரிமானத்தைத் தூண்டி பிற மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்து உடலைப் புத்துணர்வாக்கும். சரும வியாதிகள் மற்றும் கண் பாதிப்புகளை சரி செய்யும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றி உடலை வளமாக்கும். வயிற்று உறுப்புகளை நன்கு செயல்பட வைக்கும்.
நறுவிலியின் இலைகள், காய்கள், பழங்கள், தண்டுகள் மருத்துவ குணம் நிறைந்தவை.
நறுவிலி இலையின் பயன்கள்:
இதன் இலைகளை காய வைத்து தூளாக்கி சிறிது தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து கால் லிட்டர் ஆனதும் ஆற வைத்து குடிக்க, சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.
இதன் இலை சாறெடுத்து மிளகு சேர்த்து சூடாக்கி தேன் கலந்து பருகி வர சுவாச பாதிப்புகள், மூச்சிறைப்பு, சளி, தொண்டை பாதிப்புகள் சரியாகும்.
நறுவிலி மூலிகைத் தண்ணீரை தினமும் பருகி வர இரத்தத்தில் கொழுப்புகள் நீங்கி சுத்தமாகும்.
இம்மர இலைகளை அரைத்து சருமத்தில் தடவ, நச்சுக் கிருமியால் ஏற்படும் பாதிப்புகள் மறைந்து சருமம் வனப்பூடன் திகழும்.
பட்டாம்பூச்சிகள் பிறக்கும்போது லார்வா என்ற புழுக்கள் நிலையில் அதன் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் போன்ற உணவானது இந்த நறுவிலி மரத்தின் இலைகளே.
பால் தரும் பசுக்களுக்கு ஊட்டச்சத்தான உணவு இந்த நறுவிலி இலைகளே.
தலைமுடியை சிக்கெடுக்க எருளி எனும் சீப்பு இந்த நறுவிலி மரத்திலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது.