நீங்கள் அறியாத ஃபோம் மெத்தைகளின் சுற்றுச்சூழல் கெடுதல்கள்!

Foam mattresses are environmentally damaging
Foam mattresses are environmentally damaging
Published on

முன்பெல்லாம் மெத்தைகள் இலவம் பஞ்சினால் தயாரிக்கப்பட்டன. பின்னர் நுரை (ஃபோம்) மெத்தைகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. விலை குறைவாக இருந்ததால் மக்கள் அவற்றை அதிகளவில் வாங்க ஆரம்பித்தனர். ஃபோம் மெத்தைகளை உபயோகிப்பது நாகரிகத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டு, இலவம் பஞ்சு மெத்தைகளின் பயன்பாடு குறைந்தது.

மனிதர்களுக்கு செயற்கை நுரை மெத்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள்: பொதுவாக, செயற்கை நுரை மெத்தைகள் முதன்மையாக பெட்ரோலியத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. அவை சில காலம் பயன்படுத்திய பின்பு சுருங்கும் தன்மை கொண்டவை. நுரை மெத்தைகள் குளோரோபுளோரோ கார்பன்கள், டோலுயீன், ஃபார்மால்டிஹைட், பென்சீன், மெத்திலீன் குளோரைடு, டிரைகுளோரோ எத்தேன் மற்றும் நாப்தலீன் போன்ற கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளியிடுகின்றன. இதனால் செறிவு இழப்பு, தலை சுற்றல், மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, மனச்சோர்வு மற்றும் இதயத்துடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும். குழப்பம், நினைவாற்றல் இழப்பு, குமட்டல், பசியின்மை மற்றும் நிறத்தை பார்க்கும் திறன் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். நுரை மெத்தைகளின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு இதன் உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பலவிதமான உடல்நலத் தீங்குகளை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
விலங்குகளை கல்லாக மாற்றும் அதிசய நேட்ரான் ஏரி!
Foam mattresses are environmentally damaging

சுற்றுச்சூழல் பாதிப்பு: பிரிக்க முடியாத பெட்ரோலியம் சார்ந்த பொருட்களால் நுரை மெத்தை தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் சீரழிவு, வாழ்விட அழிவு மற்றும் மாசுபாட்டுக்கு பங்களிக்கிறது. நுரை மெத்தைகள், குறிப்பாக பாலியூரிதீன் நுரையால் செய்யப்படுபவை. வாழ்நாள் முழுவதும் பல சுற்றுச்சூழல் தாக்கங்களை இவை ஏற்படுத்தும்.

ரசாயன உமிழ்வுகள்: நுரை மெத்தைக்கான உற்பத்தி செயல்முறை அபாயகரமான ரசாயனங்களை காற்றில் வெளியிடும். இவை காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும். பல நுரை மெத்தைகள் நீண்ட காலம் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு ரசாயனங்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. இது நச்சுத்தன்மையும் வாய்ந்தது. இவை பழையதாகி குப்பையில் எறியப்படும்போது மண் மற்றும் நீர் ஆதாரங்களில் கசிந்து கேட்டை உண்டாக்குகின்றன.

மக்காத தன்மை: குப்பைத் தொட்டிகளில் எறியப்படும் பழைய நுரை மெத்தைகள் பல ஆண்டுகளுக்கு மக்காமல் நிலப்பரப்பை சேதப்படுத்தும். நீண்ட காலக் கழிவுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இது மைக்ரோபிளாஸ்டிக்கை உருவாக்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆப்பிரிக்காவின் பிளவு: ஒரு கண்டத்தின் பிரிவும், புதிய கடலின் உருவாக்கமும்!
Foam mattresses are environmentally damaging

நீர் மாசுபாடு: நுரை மெத்தைகளின் உற்பத்தி, நீர் மாசுபாட்டிற்கு பங்களிக்கிறது. உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் அருகில் உள்ள நீர் ஆதாரங்களை மாசுபடுத்துகிறது. மேலும், குடிநீர் விநியோகத்தையும் பாதிக்கிறது.

நுண்ணுயிர் மாசுபாடு: நுரை மெத்தைகள் அகற்றப்படும்போது நுண்ணுயிர்களை உதிர்த்து விடும். இந்த மைக்ரோஃபைபர்கள் கடல்கள் மற்றும் நீர் வழிகளில் கலக்கும்போது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. மேலும், அவற்றின் உணவுச் சங்கிலியில் பாதிப்பை உண்டாக்குகின்றன.

கார்பன் தடம்: நுரை மெத்தைகளின் உற்பத்தி செயல்முறை பொதுவாக உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஆற்றலின் காரணமாக குறிப்பிடத்தக்க கார்பன் தடத்தை உள்ளடக்கியது. இது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒரே செடியில் மேலே தக்காளி, கீழே உருளைக்கிழங்கு: இதென்ன அதிசயம்?
Foam mattresses are environmentally damaging

செயற்கைக் கூறுகள்: சில நுரை மெத்தைகளில் இயற்கையான பொருட்களிலிருந்து பெறப்படாத செயற்கை அடுக்குகள் அல்லது கலவைகள் உள்ளன. இந்த செயற்கை கூறுகள் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கழிவுகளுக்கு மேலும் பங்களிக்கின்றன.

மாற்றுகள்: இந்த சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக, பல நுகர்வோர் இயற்கையான பொருட்களிலிருந்து (லேடெக்ஸ், பருத்தி அல்லது கம்பளி போன்றவை) செய்யப்பட்ட ஆர்கானிக் மெத்தைகள் போன்ற மாற்று விருப்பங்களுக்கு திரும்புகின்றனர். இது பொதுவாக குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றுகள் பெரும்பாலும் சிறந்த நிலைத்தன்மையை வழங்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com