

1. பகாளாபாத் தயாரிக்க சாதம் வேக வைக்கும்போதே ஒரு கப் அரிசிக்கு ஒரு டீஸ்பூன் அவல் சேர்த்து வேகவைத்தால் சுவையோ சுவை.
2. முருங்கைக்கீரையைச் சமைக்கும் போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைத்தால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.
3. தயிர்வடைக்கு மாவு அரைக்கும் போது சிறிது தயிரை விட்டு அரைத்தால் வடை மிருதுவாக இருக்கும்.
4. எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்தும் ரசம் வைக்கலாம். இது நாவுக்கு ருசியைத் தருவதுடன் காய்ச்சலையும் விரட்டும்.
5. இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பதற்காக சர்க்கரைப் பாகு தயாரிக்கும் போது சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் பாகு இலகுவாக இருக்கும்.
6. புட்டு செய்யும்போது பச்சை வாசம் வராமல் இருக்க புட்டுக்கு அரைத்த மாவை வாணலியில் வறுத்து வேக வைக்க வேண்டும்.
7. அவகோடா பழத்தை வெட்டிய உடனே பயன்படுத்தாமல் இருந்தால், உட்புறத்தில் சிறிது எண்ணைய் தடவி எடுத்து வையுங்கள். பழத்தின் உட்புறம் கறுத்துப் போகாமல் இருக்கும்.
8. கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை மையாக அரைத்து பிரட் ஸ்லைஸில் ஒரு புறம் தடவி நெய் விட்டு டோஸ்ட் செய்தால் தனிச்சுவையைத் தரும்.
9. முட்டை வறுவல் செய்யும்போது, அசைவ வாசம் வராமல் இருக்க கொத்தமல்லியைக் கசக்கி, கிளறும்போது சேர்த்தால் வாசம் நீங்கி விடும்
10. கூட்டுக்கு உளுந்து தாளிப்பதை விட வேர்க்கடலையை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டால் கூட்டு சுவை மிகுந்து இருக்கும்.
11. சேப்பங்கிழங்கை ரோஸ்ட் செய்யும்போது ஒரு டீஸ்பூன் ரவையைச் சேர்த்து ரோஸ்ட் செய்தால் மொறுமொறுப்பாக இருப்பதுடன் கிழங்கும் ஒன்றோடொன்று ஓட்டவும் செய்யாது.
12. ஊறுகாய்களை மாதம் ஒருமுறை செய்து ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் மிகக் குறைந்த அளவு உப்பு போட்டால் போதும்.
13. அடை செய்யும்போது கடலைப் பருப்புக்கு பதிலாக ஒரு டம்ளர் கொள்ளுப்பயறை ஊறவைத்து அரைத்து அடை வார்த்தால் சுவை மிகுந்த அடை தயார்.
14. ரவா லட்டு செய்யும்போது, கொஞ்சம் அவலை மிக்ஸியில் ரவை போல் பொடித்துச் சேர்த்து நெய்யில் வறுத்து பால் பவுடர் சேர்த்து லட்டு பிடித்தால் லட்டின் சுவையே அலாதிதான்.
15. சப்பாத்தி மாவைப் பிசைந்து ஈரத்துணியில் சுற்றி அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்.
16. பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும் போது, பருப்பை வாசனை வரும்படி வறுத்த பிறகு செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.
17. தட்டைக்கு மாவு பிசையும்போது வறுத்து திரித்த கறிவேப்பிலைப் பொடியை சேர்த்துப் பிசைந்தால் நல்ல மணமாக இருக்கும்.
18. குலோப் ஜாமூன் செய்ய மாவு உருட்டும்முன் கைகளில் சிறிது எண்ணைய் தடவிக் கொண்டு மாவை உருட்டினால், ஜாமூன் நன்கு பொரியும்.
19. பச்சை சோளத்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தோசை, இட்லி மாவுடன் கலந்து அரைத்து சுவையும், சத்தும் மிகுந்த தோசை, இட்லி செய்யலாம்.
20. பூந்திக்கு மாவு பிசையும்போது கடலை மாவுடன், சிறிது அரிசி மாவும் சேர்த்துக் கலந்து பிசைந்தால் பூந்தி உப்பி வரும்.
21. வாழைக்காயை பயன்படுத்தியதும் அதன் தோலை வீணாக்காதீர்கள். அதை வேகவைத்து சுவையான துவையல் செய்யலாம்.
22. சாதம் கொதிக்கும்போது இரண்டு துளி எலுமிச்சம் பழச் சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
23. ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப்பொடித்து வைத்துக் கொண்டு லட்டு, பர்ஃபி, அல்வா செய்யும்போது ஒரு சிட்டிகை சேர்த்துக் கொண்டால் செய்யும் பட்சணங்களின் மணமும், ருசியும் தூக்கலாக இருக்கும்.
24. பச்சை வேர்க்கடலையுடன் அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் தோசையின் சுவையே அலாதிதான்.
தினசரி உணவு முதல் பண்டிகை பலகாரங்கள் வரை வீட்டிலேயே சுவையையும் மணத்தையும் மேம்படுத்த உதவும் நடைமுறை சமையல் குறிப்புகள் வாசகர்களின் கைவசமாகும்.