வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மொறுமொறு ஸ்நாக்ஸ்: அசத்தலான 5 ஈவினிங் ஸ்டார்ட்டர் ரெசிபிகள்!

பனீர் டிக்கா முதல் கோபி மஞ்சூரியன் வரை மாலையில் சுடச்சுட செய்து அசத்த எளிய 5 வழிகள்.
ஸ்டார்ட்டர்
ஸ்டார்ட்டர்Gemini image
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

ப்பொழுது நம் கலாச்சாரத்தில் பந்திகளில் தொடக்க உணவுகள் பரிமாறப்படுவது வழக்கத்தில் உள்ளது. (பஃபே / விருந்து பந்தியில் வைக்கப்படும் தொடக்க உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள்) விருந்தினர்களைக் கவரக்கூடிய சிறந்த தொடக்கமாக அவை பரிமளிக்கின்றன. அதுபோல் நாமும் வீட்டில் செய்து அசத்த சுவையான 5 தொடக்க உணவு ரெசிபிகள் இதோ:

1. பனீர் டிக்கா:

தேவையான பொருட்கள்:

பன்னீர் துண்டங்கள் -ஏழு

பெரிய வெங்காய இதழ்கள் -ஏழு

குடமிளகாய் ஒரே அளவாக நறுக்கியது -ஏழு துண்டுகள்

தயிர் -கால் கப்

இஞ்சி பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு -ஐந்து சொட்டுகள்

உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு

கரம் மசாலா - இரண்டு பிஞ்ச்

செய்முறை: தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து விழுது தயாரிக்கவும். இதில் சதுரமாக நறுக்கிய பனீர், குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். குச்சிகளில் (Skewers) பனீர் மற்றும் காய்கறிகளை மாற்றி மாற்றிச் செருகி, தோசைக் கல்லில் சிறிதளவு நெய்/எண்ணெய் விட்டு பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.

2. காளான் மிளகு வறுவல் :

தேவையான பொருட்கள்:

நறுக்கிய காளான் -ஒரு கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -ஒன்று

தக்காளி பொடியாக நறுக்கியது- ஒன்று

இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள்- இரண்டு சிட்டிகை

மிளகு தூள்- ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள்- ஒரு டீஸ்பூன்

தாளிக்க - கடுகு, சோம்பு, கருவேப்பிலை

உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதில் நறுக்கிய காளான், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும் (காளானே தண்ணீர் விடும்). நீர் வற்றியதும் தாராளமாக இடித்த மிளகுத்தூள், மல்லித்தூள் தூவி சுருள வதக்கி இறக்கவும்.

3. வெஜ் கட்லெட்:

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி அனைத்தும் வேக வைத்தது -ஒரு கப்

நறுக்கிய பச்சை மிளகாய் -இரண்டு

கரம் மசாலாத்தூள் -அரை டீஸ்பூன்

சோள மாவு -ஒரு டேபிள் ஸ்பூன்

ரஸ்க் தூள்- கால் கப்

நறுக்கிய மல்லித்தழை- ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை நன்றாக மசித்துக் கொள்ளவும். இதில் நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா, உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துப் பிசையவும்.

இக்கலவையை சிறிய வடை போல தட்டி, சோளமாவு (Cornflour) கரைசலில் முக்கி, ரஸ்க் தூளில் (Breadcrumbs) புரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

4. கிரிஸ்ப்பி பேபி கார்ன்:

தேவையான பொருட்கள்:

நீளவாக்கில் அரிந்த பேபிகார்ன்- 10

மைதா, சோள மாவு தலா- ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

ஸ்டார்ட்டர்
ஸ்டார்ட்டர்Gemini image

செய்முறை: பேபி கார்னை நீளவாக்கில் வெட்டி, கொதிநீரில் 2 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

சமைக்கும் முறை: மைதா, சோளமாவு, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாகக் கலக்கவும். இதில் பேபி கார்னை முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை அளவை உயர்த்தாத 5 ஆரோக்கிய கோதுமை ரவை ரெசிபிகள்!
ஸ்டார்ட்டர்

5. கோபி மஞ்சூரியன் :

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் துண்டுகள் -ஒரு கப்

மைதா, சோள மாவு தலா -ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

சாஸ் வகைகள் தலா -ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு -அரை டீஸ்பூன் இஞ்சி -அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் -அரை டீஸ்பூன்

வெங்காயம், குடைமிளகாய் தலா -கால் கப்

உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை: காலிஃபிளவர் பூக்களை உப்பு, மஞ்சள் போட்ட கொதிநீரில் 3 நிமிடங்கள் போட்டு வடித்து எடுக்கவும். மைதா, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு கலந்த மாவில் காலிஃபிளவரை முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டின் அசல் சுவை... இந்த 5 உணவுகளின் செய்முறை ரகசியம் தெரியுமா?
ஸ்டார்ட்டர்

கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் வதக்கவும். இதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் ஊற்றி, பொரித்த காலிஃபிளவரைச் சேர்த்து அதிக தீயில் பிரட்டி இறக்கவும்.

இப்பொழுது எல்லாம் விருந்துக்காக வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஸ்டார்ட்டாக என்ன பாட்டி செய்திருக்கிறீர்கள் என்று தப்பாமல் தவறாமல் கேட்பதுண்டு. அவர்களுக்கு இதுபோல் செய்து கொடுத்து அசத்தலாம்.

கடைகளில் வாங்கும் தேவையின்றி வீட்டிலேயே மிகக் குறைந்த நேரத்தில் குழந்தைகளுக்கும் விருந்தினர்களுக்கும் உணவக சுவையில் மொறுமொறுப்பான 5 வகை ஸ்டார்ட்டர்களை சுலபமாகச் செய்து அசத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com