தினமும் அதே இட்லி தோசையா... 10 நிமிடத்தில் ரெடியாகும் 6 சூப்பர் ஹெல்தி உணவுகள் இதோ!

healthy-breakfast-ideas
healthy-breakfast-ideas
Published on

காலை நேரம் வந்துவிட்டாலே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மினி போர் நடப்பது போலத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைக்குக் கிளம்பும் அந்த டென்ஷனில், பலரும் காலை உணவைச் சரியாகச் சாப்பிடுவது கிடையாது. இன்னும் சிலர் வேறு வழியில்லாமல் ஏதோ ஒரு துரித உணவை லஞ்ச் பாக்ஸில் அடைத்துக்கொண்டு அலுவலகம் ஓடுவார்கள். 

ஆனால் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்க நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது மிக மிக அவசியம். நேரமும் மிச்சமாக வேண்டும் அதேசமயம் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காக, மிக எளிதாகச் செய்யக்கூடிய 6 அட்டகாசமான டிபன் ஐடியாக்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா!

ஓட்ஸ் என்றாலே நோயாளிகள் சாப்பிடும் உணவு என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள். ஓட்ஸில் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளைச் சேர்த்து ஒரு சூப்பரான உப்புமா செய்யலாம். இது வெறும் பத்து நிமிடங்களில் தயாராகிவிடும். இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது பெரிதும் உதவும்.

2. சத்தான அவல் கிச்சடி!

அவல் எப்போதுமே செரிமானத்திற்கு சுலபமான ஒரு உணவாகும். சிவப்பு அவலை வைத்து அதில் நிறைய வேர்க்கடலை மற்றும் காய்கறிகளைச் சேர்த்து கிச்சடி அல்லது உப்புமா போலத் தாளித்து சாப்பிடலாம். இது செய்வதற்கு ரொம்பவே எளிமையானது மற்றும் உங்களின் மதிய உணவு வரை உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் இது தாராளமாகக் கொடுக்கும்.

3. கோதுமை பிரட் பனீர் சாண்ட்விச்!

காலையில் சமைக்க சோம்பேறித்தனமாக இருந்தால் இந்த சாண்ட்விச் ஒரு செம சாய்ஸ். இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு நடுவே, துருவிய பனீர், வெங்காயம், தக்காளி மற்றும் கொஞ்சம் மிளகுத்தூள் வைத்து டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். பனீர் அதிக புரதச்சத்தை கொடுப்பதால் உங்களின் தசைகள் எப்போதுமே வலுவாக இருக்கும்.

4. சப்பாத்தி வெஜிடபிள் ரோல்!

முதல் நாள் இரவே சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்துவிட்டால் காலை வேலை ஈஸியாக முடிந்துவிடும். சப்பாத்தியைச் சுட்டு, அதனுள்ளே முட்டைக்கோஸ், கேரட் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை லேசாக வதக்கி வைத்து ரோல் போலச் சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக்கொள்ளலாம். இதை அலுவலகத்தில் வைத்து சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தூக்கத்தை கெடுக்கும் தூக்கமின்மை! காரணம் என்ன? தூக்க நிபுணர் தரும் விளக்கம்...
healthy-breakfast-ideas

5. சிறுதானிய தோசை!

வழக்கமான அரிசி மாவு தோசைக்கு ஒரு நாள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு, ராகி, கம்பு அல்லது சோளம் போன்ற சிறுதானியங்களில் செய்த மாவில் தோசை ஊற்றிப் பாருங்கள். இது உடலுக்கு இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை அதிக அளவில் அள்ளிக் கொடுக்கும். தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியோடு சேர்த்துச் சாப்பிட்டால் இதன் ருசி வேற லெவலில் இருக்கும்.

6. முளைகட்டிய பயிறு சாலட்!

அடுப்பையே பற்ற வைக்காமல் ஒரு டிபன் செய்ய வேண்டும் என்றால் இந்த சாலட் தான் பெஸ்ட் ஐடியா. முளைகட்டிய பச்சைப்பயிறு, கொஞ்சம் மாதுளை முத்துக்கள், துருவிய கேரட் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, மேலே எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டால் ஒரு சூப்பரான டிபன் ரெடி. இது பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருப்பதோடு வைட்டமின் சத்துக்களையும் வாரி வழங்கும்.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் ஏன் எண்ணெய் குளியல் அவசியம்? காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்!
healthy-breakfast-ideas

வேலைப்பளுவைக் காரணம் காட்டி ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதை நாம் உடனே நிறுத்த வேண்டும். முதல் நாள் இரவே காய்கறிகளை நறுக்கி வைப்பது போன்ற சின்னச் சின்ன முன் ஏற்பாடுகளைச் செய்து வைத்துக்கொண்டால் காலை நேர சமையல் ஈஸியாகிவிடும். எந்த ஒரு ஹோட்டல் உணவுகளும் நமது வீட்டுச் சாப்பாட்டிற்கு எப்போதுமே ஈடாகாது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com