கரண்டிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு ரகம்...

சமையலறைப் பயன்பாட்டில் 9 வகையான கரண்டிகள்!
spoons
spoons
mm

சமையலறையில் உணவுத் தயாரிப்பின் போது, கலக்க, கிளற, பரிமாற என்று பல வழிகளில் பயன்படுத்தும் கருவியாக கரண்டி இருக்கிறது. இந்தக் கரண்டி பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பல்வேறு பொருட்களால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, ஒரு வீட்டின் சமையலறைக்கு 9 வகையான கரண்டிகள் தேவையானதாக இருக்கின்றன. இருப்பினும், நமக்குத் தேவையான கரண்டிகளை மட்டும் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1. மரக்கரண்டி (Wooden Spoon):

Wooden Spoon
Wooden Spoon

மரக்கரண்டி பொதுவாக மேப்பிள், பீச் அல்லது ஆலிவ் போன்ற கடினமான மரங்களால் உருவாக்கப்படுகிறது. இது மென்மையான, வட்டமான கிண்ணம் மற்றும் நீண்ட கைப்பிடியைக் கொண்டுள்ளது. மரக்கரண்டிகள் சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளில் கிளறுதல், கலக்குதல் மற்றும் தேய்த்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் பாத்திரங்களில் இக்கரண்டிகள் மென்மையாக இருப்பதால், ஒட்டாத மற்றும் மென்மையான மேற்பரப்புகளில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கின்றன. மரக்கரண்டிகள் அமில உணவுகளுடன் வினைபுரிவதில்லை என்பதால், பொருட்களைக் கலப்பதற்கு பெரிதும் பயன்படுத்துகின்றன. மரக்கரண்டிகள் நுட்பமான வேலைகளுக்கு சிறிய தேக்கரண்டி முதல் பெரிய தொட்டிகளில் சமைக்க பெரிய கிளறல் கரண்டிகள் வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

2. துளையிடப்பட்ட கரண்டி (Slotted Spoon):

Slotted Spoon
Slotted SpoonImg credit: always sunday store

துளையிடப்பட்ட கரண்டி, திடப்பொருட்களைத் தக்க வைத்துக் கொண்டு திரவங்கள் வெளியேற அனுமதிக்கிறது. இது பொதுவாக துருப்பிடிக்காத எஃகு அல்லது வெப்ப எதிர்ப்புப் பொருட்களால் உருவாக்கப்படுகிறது. கொதிக்கும் நீர், சூப்கள் அல்லது பொரியல் எண்ணெய் போன்ற சூடான திரவங்களிலிருந்து உணவுகளை அகற்ற உதவுவதாக இருக்கின்றன. அதிகப்படியான திரவம் இல்லாமல் காய்கறிகள், பாஸ்தா மற்றும் பாலாடை போன்ற உணவுகளைப் பரிமாறவும் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பலவகையான ரசப்பொடி தயாரிப்பது எப்படி? - எளிய சமையல் குறிப்புகள்!
spoons

இக்கரண்டிகளில் பெரியவை பரிமாறுவதற்கு ஏற்றதாகவும், சிறியவை நுரை நீக்குதல் அல்லது சாஸ்களில் இருந்து விதைகளை அகற்றுதல் போன்ற துல்லியமான பணிகளுக்கு ஏற்றதாகவும் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

3. கம்பிக் கரண்டி (Bar Spoon):

Bar Spoon
Bar Spoon

கம்பிக் கரண்டி என்பது ஒரு நீண்ட கைப்பிடி கொண்ட கரண்டியாகும். அதில் ஒரு முறுக்கப்பட்ட தண்டு மற்றும் ஒரு முனையில் ஒரு சிறிய கிண்ணம் அல்லது வட்டு இருக்கும். இது பொதுவாக பழச்சாறுகளைக் கலக்கப் பயன்படுகிறது. இக்கரண்டிகள் பழச்சாறுகளில் உள்ள பொருட்களை கிளறி, கலக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கரண்டியின் முறுக்கப்பட்ட தண்டு எளிதாகக் கிளற வசதியாக இருக்கிறது மற்றும் பார்வைக்கு ஈர்க்கும் விளக்கக் காட்சியைத் தருவதாகவும் இருக்கிறது. பொதுவாக 12 அங்குல நீளம் கொண்டவைகளாக இருக்கின்றன. பல்வேறு பழச்சாறு வகைககளுக்கு ஏற்ற வகையில் கரண்டியின் அளவு மற்றும் கைப்பிடி வடிவமைப்பில் வேறுபாடுகள் இருக்கும்.

4. நூலப்பக் கரண்டி (Spaghetti Spoon):

Spaghetti Spoon
Spaghetti Spoon

நூலப்பக் கரண்டி, நீண்ட நூலப்ப இழைகளை எளிதாகப் பிரிக்கவும், பரிமாறவும் வசதியாக, முட்கள் அல்லது முனைகளைக் கொண்ட கிண்ணத்தைக் கொண்டுள்ளது. இக்கரண்டிகள் நூலப்பம் அல்லது பாஸ்தா வடிவங்களைக் கொண்ட உணவுகளைப் பரிமாறுவதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கிண்ணம் அதிகப்படியான தண்ணீர் அல்லது சாஸை வெளியேற்றும் வகையில் அமைந்திருக்கின்றன. மேலும், நூலப்பத்தைச் சுழற்றி பானையிலிருந்து எடுக்க உதவுகிறது. இக்கரண்டிகள், நீண்ட கைப்பிடிகள் மற்றும் தாராளமாகப் பரிமாறுவதற்கு பெரிய கிண்ணங்களுடன் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சாக்லேட் பிரவுனி: இனிமையான சுவை, எளிதான செய்முறை!
spoons

5. கலவைக் கரண்டி (Mixing Spoon)

Mixing Spoon
Mixing Spoon

கலவை கரண்டி என்பது நீண்ட கைப்பிடி மற்றும் தட்டையான, வட்டமான அல்லது கூர்மையான முனையைக் கொண்ட ஒரு பல்துறைக் கருவியாகும். இது பொதுவாக துருப்பிடிக்காத எஃகு அல்லது வெப்ப எதிர்ப்புப் பொருட்களால் உருவாக்கப்பட்டது. இக்கரண்டிகள், கலவைக் கிண்ணங்கள் அல்லது சமையல் பாத்திரங்களில் பொருட்களைக் கிளறுதல், கலத்தல் மற்றும் மடிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இக்கரண்டிகள் ஆழமான பாத்திரங்களில் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் நீண்ட கைப்பிடிகள் மற்றும் சரியான கலவைக்குப் பெரிய கிண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு நீளம் மற்றும் தேவையான வடிவங்களில் கிடைக்கின்றன.

6. நூலோட்டுக் கரண்டி (Basting Spoon):

Basting Spoon
Basting Spoon

நூலோட்டுக் கரண்டி என்பது ஆழமான கிண்ணத்தையும், நீண்டக் கைப்பிடியையும் கொண்டிருக்கிறது. இது பொதுவாக துருப்பிடிக்காத எஃகு அல்லது வெப்ப எதிர்ப்புப் பொருளால் ஆனது. இக்கரண்டிகள் சமைக்கும் போது இறைச்சி, கோழி மற்றும் காய்கறிகள் மீது ஜூஸ், சாஸ்கள் அல்லது ஊறுகாய்கள் போன்றவைகளைத் தெளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு திரவத்தை உறிஞ்சுவதற்கு பெரிய கிண்ணங்கள் மற்றும் வசதியான பிடி மற்றும் நீண்ட கைப்பிடிகள் என்று பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

7. பாஸ்தாக் கரண்டி (Pasta Spoon):

Pasta Spoon
Pasta Spoon

பாஸ்தாக் கரண்டி என்பது சமைத்த பாஸ்தாவை பரிமாறுவதற்கும், பிரிப்பதற்கும் ஏற்றதாக முட்கள் அல்லது முனைகள் கொண்ட கிண்ணத்தைக் கொண்டுள்ளது. இக்கரண்டிகள் நூலப்பம் மற்றும் பிற நீண்ட பாஸ்தா வடிவங்களை பரிமாறுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கிண்ணம் அதிகப்படியான தண்ணீர் அல்லது சாஸை வெளியேற்றும். மேலும் நீண்ட பாஸ்தாவைச் சுழற்றி பாத்திரத்தில் இருந்து எடுக்க உதவுகிறது. ஆழமான பாத்திரங்களில் எட்டுவதற்கு நீண்ட கைப்பிடிகள் மற்றும் தாராளமாகப் பரிமாறுவதற்கு பெரிய கிண்ணங்கள் என்று பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

8. கூர்மையானக் கரண்டி (Pointed Spoon):

Pointed Spoon
Pointed Spoon

கூர்மையான கரண்டி என்பது முனை கூர்மையாக அமைந்ததாகும். கிளறுதல் மற்றும் சிறிய அளவிலான பொருட்களை மாற்றுதல் போன்ற துல்லியமான பணிகளுக்கு இது ஏற்றதாக அமைகிறது. இக்கரண்டிகள் உணவுகளை சுவைக்கவும், சுவையூட்டலைச் சரிசெய்யவும், சாஸ்கள், சூப்கள் மற்றும் இனிப்பு வகைகளில் பொருட்களைக் கிளறிச் சேர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சிறியவை சுவைப்பதற்கும் பெரியவை கிளறிப் பரிமாறுவதற்கும் என்று பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

9. அகப்பைக் கரண்டி (Ladle Spoon):

Ladle Spoon
Ladle Spoon

அகைப்பைக் கரண்டி என்பது ஆழமான, வட்டமான கிண்ணத்தையும் நீண்ட கைப்பிடியையும் கொண்டுள்ளது. இது பொதுவாக துருப்பிடிக்காத எஃகு அல்லது வெப்ப எதிர்ப்புப் பொருட்களால் ஆனது. சூப்கள், குழம்புகள், சாஸ்கள் மற்றும் இறைச்சிக் குழம்புகள் பரிமாறப் பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு திரவத்தை எளிதாகப் பிடித்து மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, குடைந்தெடுப்பதற்கேற்ற வகையில் பெரிய கிண்ணங்களும், வசதியான பிடி மற்றும் நீண்ட கைப்பிடிகளும் கொண்டு பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மாலை நேரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான ஹேண்ட்வோ பைட் ரெசிபி!
spoons

சமையல் கரண்டியைத் தேர்ந்தெடுக்கும் போது, அதன் பொருள், அளவு மற்றும் நோக்கம் மற்றும் பயன்பாட்டைக் கவனிக்க வேண்டும். அத்துடன் துருப்பிடிக்காத எஃகு மற்றும் வெப்பத்தைத் தாங்கும் பொருட்களாலான கரண்டிகளாகத் தேர்வு செய்தல் நல்லது. இவை நீடித்த உழைப்பைக் கொண்டிருப்பதுடன், சுத்தம் செய்திட எளிதானதாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com