நாவில் கரையும் ஆந்திரா ஸ்பெஷல் உருளைக்கிழங்கு தட்டைக் கொழுக்கட்டை!

தித்திக்கும் கொழுக்கட்டைகளுக்கு பை பை சொல்லுங்கள்; காரசாரமான இந்த அட்டகாசமான ஸ்நாக்ஸை இன்றே ட்ரை பண்ணுங்க!
கொழுக்கட்டை செய்முறை
கொழுக்கட்டை செய்முறைAI image
Updated on

ஆந்திரா ஸ்பெஷல் பொட்டட்டோ ஸ்டஃப்டு, தட்டைக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு 2

பச்சரிசி 1 கப்

கடுகு ¼ டீஸ்பூன்

எள் விதைகள் 1 டீஸ்பூன்

சில்லி ஃபிளேக்ஸ் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 இணுக்கு

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் ¾ டீஸ்பூன்

சீரகம் ½ டீஸ்பூன்

பெரிய வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்

கரம் மசாலா பவுடர் ½ டீஸ்பூன்

தண்ணீர் 1¼ கப்

உப்பு தேவையான அளவு.

எண்ணெய் தேவையான அளவு

கொழுக்கட்டை செய்முறை

அரிசியில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம். ஊறவிடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, உரித்து மசிய நசுக்கிக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய்களை பொடிசா நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சீரகத்தைப் போட்டு சிவக்கவிடவும். பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா பவுடர் சேர்த்து நன்கு கலந்துவிடவும். பிறகு அதனுடன் நசுக்கிய உருளைக் கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

பின் ஊற வைத்த அரிசியை, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, எள் விதைகள் சில்லி ஃபிளேக்ஸ் கறிவேப்பிலை ஆகியவற்றைப் போடவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அரிசிமாவு கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அரிசி மாவு கரைசலில் கட்டி விழாமல் கிளறி உப்புமா பதத்திற்கு கெட்டியாகி வரும்போது இறக்கி ஆறவிடவும். பின் அதிலிருந்து சின்ன கொய்யாக் காய் அளவிற்கு மாவை கிள்ளியெடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டை போல் தட்டிக்கொள்ளவும். அதன் நடுவில் உருளைக் கிழங்கு கலவை சிறிது எடுத்து வைத்து மூடி மீண்டும் வட்ட உருவில் தட்டைகளாக்கிக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
பொட்டுக்கடலையில் இவ்வளவு சுவையான உணவுகளா? மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!
கொழுக்கட்டை செய்முறை

எல்லா மாவையும் இதே முறையில் தட்டைகளாக்கி, பின் இட்லிப் பாத்திரத்தில் அடுக்கி ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆந்திரா ஸ்பெஷல் பொட்டட்டோ ஸ்டஃப்டு தட்டைக் கொழுக்கட்டை ரெடி. காலை அல்லது மாலை நேரங்களில் கார சட்னி தொட்டு சாப்பிட அருமையான ஸ்னாக்ஸ் ஆகும்.

ஸ்பைசி பெருகு பச்சடி ரெசிபி.

தேவையான பொருட்கள்:

உரித்த பூண்டுப் பற்கள் 15

சிவப்பு மிளகாய் 5

கடுகு ⅓ டீஸ்பூன்

சீரகம் ½ டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

பெரிய வெங்காயம் 1(பொடிசா நறுக்கிக் கொள்ளவும்)

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

கெட்டித் தயிர் ½ கப்

ஃபிரஷ் மல்லி இலைகள் 15

எண்ணெய் 4 டீஸ்பூன்

கொழுக்கட்டை செய்முறை
கொழுக்கட்டை செய்முறைAI image

செய்முறை:

ஒரு, கை உரலில் (Mortar) பூண்டுப் பற்களையும் நான்கு சிவப்பு மிளகாய்களையும் உடைத்துப் போட்டு அரைகுறையாய் நசுக்கி இடித்தெடுத்துக் கொள்ளவும்.

தயிரை ஹேண்ட் பிளெண்டரால் நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு சீரகம் மற்றும் ஒரு மிளகாயை கிள்ளிப்போட்டு சிவக்கவிடவும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
கொழுக்கட்டை செய்முறை

பின் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டு-மிளகாய் கலவையை சேர்த்து அனைத்தும் ஒன்றோடொன்று நன்கு கலக்கும்படி சிறு தீயில் வைத்து கிண்டவும். பின் அடித்து வைத்துள்ள தயிரை ஊற்றி, கொத்தமல்லி இலைகளை தூவி, அடுப்பிலிருந்து இறக்கவும். சூப்பரான சுவையில் ஸ்பைசி பெருகு பச்சடி தயார். இதை சாதத்தில் ஊற்றிப் பிசைந்து, வடாம் தொட்டு சாப்பிடலாம்.

வழக்கமான சமையலில் இருந்து விடுபட்டு, குடும்பத்திற்குப் பிடித்த புதிய மற்றும் ஆரோக்கியமான காரசாரமான மாற்று உணவை வழங்குவதன் மூலம் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com