
தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் தோன்றிய செட்டிநாடு சமையல் அதன் தனித்துவமான சுவை காரணமாக உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இந்த முறையைப் பின்பற்றி செய்யப்படும் உணவு வகைகள் அனைத்துமே முற்றிலும் வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும். இந்தப் பதிவில் செட்டிநாடு ஸ்டைலில் கத்திரிக்காய் வறுவல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். காரசாரமான மசாலாக்கள் நிறைந்த இந்த வருவல், சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சின்ன கத்திரிக்காய் - 8
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா பொடிக்கு:
தேங்காய் - 1/4 கப்
கடலைப் பருப்பு - 3 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
எள் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
புளி - சிறிது
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை நன்கு அலசி காம்பை வெட்டி நீளமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, மிளகு, தனியா, சீரகம், எள், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து பொடித்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர், கத்திரிக்காயை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், தூவி நன்றாக வதக்கவும். கத்தரிக்காய் வெந்த பிறகு மசாலா பொடி அதில் சேர்த்து நன்றாக கிளறி மொறுமொறுவென வரும் வரை வதக்கினால் செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் வறுவல் தயார்.
இந்த வறுவல் செய்வது மிகவும் எளிது. கொஞ்சம் நேரம் எடுத்து பொறுமையாக செய்யும் போது ஹோட்டலில் கிடைக்கும் சுவையை விட சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.