மசாலா பிரியாமல் மொறுமொறுப்பான காலிஃபிளவர் 65 செய்வது எப்படி? ரகசிய ரெசிபி!

வீடே மணக்கும் மொறுமொறு காலிஃபிளவர் 65 எளிய முறையில் செய்ய அருமையான வழிகாட்டி.
காலிஃபிளவர் 65
காலிஃபிளவர் 65Gemini image
Updated on

பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த காலிஃப்ளவரில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள முதல் 10 பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த காய்கறிகளில் ஒன்றாக திகழும் காலிஃப்ளவரில் குருமா, வறுவல் பக்கோடா, பிரை என பெரும்பாலான வீடுகளில் செய்வது வழக்கம்.

ஆனால் மொறுமொறுப்பாக இருக்கும் காலிப்ளவர் 65 தான் பெரியவர்கள் முறை சிறியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் சுவையான மசாலா பிரியாமல் காலிஃப்ளவர் 65 செய்யும் முறை குறித்து இப்பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் -1/2 கிலோ

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

மசாலா ஊறவைக்க தேவையானவை

கடலை மாவு - 11/2 டேபிள் ஸ்பூன்

மைதா மாவு -11/2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 11/2டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா -1 டேபிள்ஸ்பூன்

தனி மிளகாய் தூள் -1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாறு - சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவரை பெரிதாகவும் சிறிதாகவும் இல்லாமல் நடுத்தரமாக பிரித்து எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சுத்தம் செய்த காலிபிளவர், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து பாதி பதத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைத்து சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, தனி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் சிறிது அளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் ஆக்கி கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய சேர்த்தால் மசாலா பிரிய வாய்ப்பு உண்டு என்பதால் பக்குவமாக கலந்து வைத்துக்கொள்வது நல்லது.

காலிஃபிளவர் 65
காலிஃபிளவர் 65Gemini image

இந்த மசாலாவுடன் வேகவைத்த காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் மசாலா இறங்கும் வரை நன்கு ஊறவைக்க வேண்டும். பிறகு அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய காலிஃப்ளவர் துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக பொறித்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
காலிஃபிளவர் 65

இதனை தனியாக ஒரு தட்டில் வைத்து அதன் மேல் பெரிய வெங்காயம் சிறிதளவு எலுமிச்சை துண்டுகள் சேர்த்து பரிமாற சுவை அலாதியாக இருக்கும். மழை நேரங்களில் மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் சிறந்ததாக காலிஃப்ளவர் 65 உள்ளது. மொறுமொறுப்பாக இருக்கும் காலிஃப்ளவரை வீட்டிலேயே செய்யும்போது சுத்தமாக இருப்பதோடு உடலுக்கு ஆரோக்கியமாகவும் உள்ளது.

காலிஃப்ளவரில் இருக்கும் சத்துக்கள்

மூளையைப் போல இருக்கும் காலிஃப்ளவரில் மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் ஏ, பி,இ,கே சத்துக்கள் அதிகமாக இருப்பதோடு தினமும் 90 கிராம் அளவிற்கு வைட்டமின் சி யும் உடலுக்கு கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. புற்றுநோய் செல்களில் அடிப்படை வளர்ச்சியை அழிக்கும் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. மேலும் காலிஃப்ளவரில் கெட்ட கொழுப்பை கரைக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் சமையல் முடிக்கும் மேஜிக் இன்ஸ்டன்ட் மசாலா விழுதும் பொடியும்!
காலிஃபிளவர் 65

காலிஃப்ளவரில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைவருக்கும் விருப்பமான மொறுமொறுப்பான காலிபிளவர் 65 செய்து பரிமாறும் போது மகிழ்ச்சியாக விரும்பி உண்பர் என்பதை அவர்கள் சாப்பிடும்போது கண்கூடாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம், ஹோட்டல் சுவையில் மசாலா சிறிதும் பிரியாமல் மொறுமொறுப்பான காலிஃபிளவர் 65 வீட்டின் சமையலறையிலேயே செய்து அசத்தலாம். ஆரோக்கியமான முறையில் குடும்பத்தினருக்குச் சுவையான மாலை நேரச் சிற்றுண்டியை வழங்கி மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com