நாவூறும் மொறுமொறு பருப்பு அடைக்கு இந்த ஒரு சட்னிதான் பெஸ்ட் காம்பினேஷன்!

Healthy Adai Recipe
Healthy Adai Recipe
Updated on

மொறு மொறு பருப்பு அடை & சின்ன வெங்காய கார சட்னி.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 கப்

கடலைப்பருப்பு – 1 கப்

பாசிப்பருப்பு – ½ கப்

வெள்ளை ரவை – 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்

பொடியாக நறுக்கிய கேரட் – 1 கப்

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – ½ கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ½ கப்

இஞ்சி விழுது – 2 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

வெள்ளை எள் – 2 ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பருப்புகளை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ரவையை லேசாக வறுத்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகளை சேர்த்து நன்கு பிசறிவிடவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி விழுது, மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள், வெள்ளை எள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின்னர் அரைத்த பருப்பு விழுதையும் சேர்க்கவும். ஊறிய ரவையில் நீர் இருந்தால் வடித்து விட்டு, அந்த கலவையுடன் சேர்த்து நன்கு பிசையவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மிதமான தீயில் சிறிய, மெல்லிய அடைகளாக தட்டி, எண்ணெய் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். பருப்புகள் சேர்த்திருப்பதால் அடையை மிதமான தீயில் வைத்து சுடவேண்டும்.

சின்ன வெங்காய கார சட்னி

தேவையான பொருட்கள்:

உரித்த சின்ன வெங்காயம் – 1 கப்

வரமிளகாய் – 3 No

பூண்டு – 4 பல்

புளி – ஒரு நெல்லிக்காய் அளவு

சீரகம் – ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு – 1 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு மிக்சியில் வரமிளகாய், பூண்டு, சீரகம், புளி மற்றும் பாதி அளவு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு, ரத்தச்சோகைக்கு மருந்தாகும் ‘அதலைக்காய்’: கசப்பே தெரியாத வதக்கல் -புளிக்குழம்பு ரெசிபிகள்!
Healthy Adai Recipe

அவை பொரிந்ததும் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இறுதியாக அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். இந்த சட்னி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். அடையுடன் இந்த சின்ன வெங்காய சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக பருப்பு அடையின் சுவைக்கு, காரமும் நறுமணமும் நிறைந்த இந்த சட்னி நல்ல காம்பினேஷன்.

logo
Kalki Online
kalkionline.com