உப்புமா முதல் சாம்பார் வரை சலிப்பை விரட்டும் சுவை ரகசியம் என்ன? வீட்டுச் சமையல் டிப்ஸ்!

சாதாரண வீட்டுச் சாப்பாட்டையும் எல்லாரும் விரும்பிச் சாப்பிட வைக்கும் எளிய சமையல் மாற்றங்கள் இதோ.
சமையல் ரகசியம் - South Indian cooking
சமையல் ரகசியம் - South Indian cooking
A.N.ராகுல்

A.N.ராகுல், பொறியியல் பட்டதாரி. கல்கி ஆன்லைன் அறிமுகப்படுத்திய வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் எழுத்துத் துறையில் இணைந்த இவர், பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவு சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தாய்மொழியில் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Updated on: 

"இன்னைக்கு டிபன் உப்புமாவா?", "மறுபடியும் சுரைக்காய் கூட்டா?", "லஞ்சுக்கு தயிர் சாதமா?" - நம்ம வீடுகள்லயோ, ஹாஸ்டல் மெஸ்லயோ, இல்ல ஆஃபீஸ் லஞ்ச் டைம்லயோ இந்த வார்த்தைகளை நாம தினமும் சுத்திச் சுத்திக் கேட்டுட்டே இருப்போம்.

நம்ம வீடுகள்ல சாம்பார், ரசம், உப்புமா, வெண்பொங்கல், கிச்சடி, தயிர் சாதம், லெமன் ரைஸ், கீரை கூட்டு, காய்கறி பொரியல்னு இதெல்லாம் ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய, சத்தான, பட்ஜெட்டுக்குள்ள அடங்குற டெய்லி சாப்பாடு.

ஆனா, ஏன் நிறைய பேருக்கு இதைக் கேட்டாலே பிடிக்க மாட்டேங்குது? உண்மைய சொல்லப்போனா, அந்த உணவுகள்ல எந்தத் தப்பும் இல்ல; அதை நாம சமைக்கிற விதத்துலயும், பக்குவத்துலயும் நடக்குற சின்னச் சின்னத் தவறுகள்தான் காரணம்!

'உப்புமா' முதல் 'சாம்பார்' வரை: பக்குவம் மாறினால் (சமையல் ரகசியம்) சுவையும் மாறும்!

அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர்கள் சொல்ற ஒரு முக்கியமான விஷயம்: "மக்கள் எந்த உணவையும் வெறுக்கிறதில்ல; அந்த உணவைத் தப்பா சமைக்கிற ஸ்டைலைத்தான் வெறுக்கிறாங்க.”

உதாரணத்திற்கு, நம்ம ஊர்ல அதிகம் ட்ரோல் செய்யப்படுற உணவு உப்புமா! ரவை ரொம்ப வறண்டு போனாலோ, இல்ல களி மாதிரி கொழகொழன்னு ஆனாலோ யாருக்கும் பிடிக்காது.

ஆனா, அதே உப்புமாவுல கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து, நெய்யில வறுத்த முந்திரியையும் போட்டு சுடச்சுடக் கொடுத்துப் பாருங்க, வேண்டாம்னு சொல்றவங்க கூட ரெண்டு கரண்டி எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க.

வெண் பொங்கலும் அப்படித்தான்! வெறும் பருப்பையும் அரிசியையும் வேக வச்சா சப்புனு இருக்கும். ஆனா, சுத்தமான நெய்யில தட்டிப் போட்ட மிளகு, சீரகம், இஞ்சி, பச்சைக் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கும்போது வர்ற அந்த வாசனையே சாப்பிடத் தூண்டும்.

சாம்பார் வைக்கும்போதும் வெறும் சமையல் குறிப்பை (Recipe) மட்டும் பார்க்காம, புளிப்பு, உப்பு, காரம், தாளிப்பு இந்த நாலும் சரியான அளவுல இருக்கானு பார்க்குறதுதான் சமையல்ல கைதேர்ந்தவங்களோட சீக்ரெட்.

சமையல் ரகசியம் - South Indian cooking
சமையல் ரகசியம் - South Indian cooking

ரசம் வைக்கும்போதும் அப்படித்தான், புளியும் தக்காளியும் சரியான அளவுல கரைச்சு, கொதி வர்றதுக்கு முன்னாடி கொத்தமல்லி தழையைத் தூவி இறக்குற விதத்துலதான் மொத்த சுவையும் இருக்கு.

ஒரே மாதிரி இல்லாம, கொஞ்சம் 'மொறுமொறுப்பா' மாத்திப் பாருங்க!

தயிர் சாதம், கிச்சடி, பீட்ரூட் பொரியல், முட்டைக்கோஸ் பொரியல், சுரைக்காய் கூட்டு இதெல்லாம் ஒரே மாதிரி சாஃப்ட்டா  (Soft texture) இருந்தா சீக்கிரம் சலிப்பு தட்டிடும். ஒரே டேஸ்ட்ல சப்புனு இருக்குற சாப்பாட்டைவிட, சாப்பிடும்போது அங்கங்க மொறுமொறுன்னு (Crunchiness) கடிபடுற மாதிரி இருக்குற உணவுகளைத்தான் மனுஷங்க மூளை அதிகம் விரும்பும்னு உணவு நிபுணர்கள் சொல்றாங்க.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது? தெரிந்து கொள்ளுங்கள்!
சமையல் ரகசியம் - South Indian cooking

தயிர் சாதத்துல மாதுளம்பழம், வறுத்த முந்திரி, தாளிச்ச உளுத்தம் பருப்பு சேர்க்கிறதும்; பொரியல்ல வறுத்த வேர்க்கடலை அல்லது தேங்காய்த் துருவல் சேர்க்கிறதும் இதுக்காகத்தான். லெமன் ரைஸ்ல கூட எலுமிச்சை சாறை அடுப்பை அணைச்ச பிறகு ஊத்தி, வறுத்த வேர்க்கடலை சேர்க்கும்போதுதான் கசப்பு இல்லாம சூப்பரா இருக்கும்.

அப்புறம், அதிக மசாலா போடுறதை விட, கடைசியா சேர்க்கிற தாளிப்பு வாசனையும், சாப்பிட்டு முடிச்சதும் நாக்குல தங்குற அந்த இறுதிச் சுவையும்தான் (Aftertaste) ஒரு உணவைப் பத்தின முழு அபிப்பிராயத்தையே மாத்தும். அதுக்கு ஏத்த மாதிரி ஒரு சுள்ளுனு ஊறுகாயோ, மொறுமொறு அப்பளமோ, இல்ல காரசாரமான துவையலோ தொட்டுக்க வச்சா போதும், சாதாரண சாப்பாடு கூட கல்யாண விருந்து மாதிரி அட்டகாசமா மாறிடும்.

சமையலின் உண்மையான மாயாஜாலம்!

பாரம்பரியச் சமையல் கலைஞர்களும், உணவு ஆராய்ச்சியாளர்களும் சொல்ற ஒரே விஷயம் என்னன்னா, சிறந்த சமையல்ங்கிறது ஏதோ புதுசா ஒரு டிஷ் கண்டுபிடிக்கிறது இல்ல. தினமும் சாப்பிடுற சாதாரண சாம்பார், ரசம், உப்புமா, லெமன் ரைஸ், பொரியலைக் கூட, சரியான வாசனை, பக்குவம், உப்பு, காரம், புளிப்புனு எல்லா டேஸ்ட்டும் சரியான அளவுல இருக்குற மாதிரி  (Flavor Balance) சமைச்சு, எல்லாரும் ஆசையா எதிர்பார்க்குற விருந்தா மாத்துறதுதான் உண்மையான சமையல் திறமை!

இனிமே இந்த உணவுகளைப் பார்த்தா யாரும் வெறுக்காத மாதிரி, கொஞ்சம் வித்தியாசமா சமைச்சு வீட்டுல எல்லாரையும் அசத்துங்க!

இதையும் படியுங்கள்:
மதியம் வரை தயிர் சாதம் புளிக்கக் கூடாதா? தயிருடன் இந்த 1 பொருளைச் சேர்த்துப் பாருங்க!
சமையல் ரகசியம் - South Indian cooking