ஹோட்டல் ஸ்டைல் சாஃப்ட் குலாப் ஜாமூன் ரகசியம்! மாவில் இதை மட்டும் சேர்த்தால் போதும்!

நீங்கள் வீட்டில் குலாப் ஜாமூன் செய்யும் போது வெடிக்காமல், உள்ளே கெட்டியாகாமல் மிருதுவாக வர மாவில் இந்த ஒரே பொருளை சேர்க்க வேண்டும்.
குலாப் ஜாமுன்
குலாப் ஜாமுன்AI Image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தீபாவளி, ரம்ஜான் (ஈத்), ஹோலி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற இந்தியாவின் பெரும்பாலான பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் கொண்டாட்டங்களின் குலாப் ஜாமுன் (Gulab Jamun) இனிப்பிற்கு தனி இடம் உண்டு. அதன் தனித்துவமான சுவையும், எளிதில் தயாரிக்கக்கூடிய தன்மையும் இதனை அனைவருக்கும் பிடித்தமான இனிப்பாக மாற்றியுள்ளது. குறிப்பாக குலாப் ஜாமுன் திருமணங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத, அனைவராலும் விரும்பப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பாகும்.

அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் குலாப் ஜாமுன் மிகவும் பிடித்த இனிப்பாகும். இதன் மென்மையான அமைப்பும், ஏலக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் மணம் கமழும் இனிப்புப் பாகும் இதற்குக் கூடுதல் சுவையைத் தருகின்றன.

குலாப் ஜாமுனை கடைகளில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீடுகளில் எளிய முறையில் பத்தே நிமிடங்களில் இந்த இனிப்பை செய்து விடலாம்.

ஆனால் கடைகளில் கிடைக்கும் குலாப் ஜாமுனை போல் மென்மையாகவும், வெடிக்காமலும், உள்ளே கெட்டியாகாமலும் பஞ்சு போல மிருதுவாக வர, ஒரு பொருளை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அப்போது தான் நாம் செய்யும் குலாப் ஜாமுன் கடைகளில் கிடைப்பதை போல் சுவையாகவும், மிருதுவாகவும் வரும்.

குலாப் ஜாமூன் வெடிக்காமல் மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்...

* குலாப் ஜாமூன் வெடிக்காமலும், உள்ளே கெட்டியாகாமலும் பஞ்சு போல மிருதுவாக வர, மாவு பிசையும்போது நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது மிகவும் அவசியம். அதாவது மாவில் நெய் (அல்லது வெண்ணெய்) சேர்க்கும் போது அது மாவு காய்ந்து போவதைத் தடுத்து, உருண்டைகளில் விரிசல் விழாமல் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி எண்ணெயில் பொரிக்கும்போது உட்புறம் இறுக்கமாகாமல் (கெட்டியாகாமல்), சர்க்கரைப் பாகை நன்கு உறிஞ்சும் தன்மையைத் தரும்.

* 1 கப் குலாப் ஜாமூன் மாவிற்கு 1 முதல் 1.5 டீஸ்பூன் உருக்கிய நெய் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள வெண்ணெய் சேர்க்க வேண்டும். முதலில் மாவுடன் நெய்யைச் சேர்த்து உதிரி உதிரியாக (bread crumbs போல) நன்கு கலந்த பிறகே, பால் அல்லது தண்ணீர் தெளித்து அழுத்தம் கொடுக்காமல் மென்மையாகப் பிசைய வேண்டும்.

* குறிப்பாக குலாப் ஜாமூனில் நெய் சேர்க்கும் போது அதில் உள்ள கொழுப்புச் சத்து, மாவில் உள்ள பசைத்தன்மையைக் (Gluten) கட்டுப்படுத்தி, ஜாமூன் உள்ளே கெட்டியாகாமல் பஞ்சு போல வர உதவுகிறது.

* மேலும் மாவு வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க நெய் உதவுவதால், எண்ணெயில் பொரிக்கும்போது விரிசல் விழுவது தடுக்கப்படுகிறது.

gulab jamun
gulab jamunAI image

* அதுமட்டுமின்றி குலாப் ஜாமூன் செய்ய மாவைப் பிசையும்போது அழுத்தாமல் மென்மையாகக் கையாள்வதும், சரியான பதத்தில் ஊற வைப்பதும் மிக அவசியம். இந்த வழிமுறை ஜாமூன் விரிசல் இல்லாமல் மிருதுவாக வர உதவும்.

* சப்பாத்தி மாவு போல அழுத்திப் பிசையாமல், விரல் நுனிகளால் மென்மையாக ஒன்று சேர்க்க வேண்டும். அதிகம் அழுத்தினால் ஜாமூன் உள்ளே கடினமாகிவிடும்.

* மாவைத் தொட்டுப் பார்க்கும்போது அது லேசான ஈரப்பதத்துடன், கையில் ஒட்டாதவாறு மிருதுவாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு வெதுவெதுப்பான பால் தெளித்துப் பிசையலாம்.

* மாவைப் பிசைந்த பிறகு, ஈரத்துணியால் மூடி 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்தால் மாவு நன்கு செட் ஆகும். அதாவது, மாவை 5 முதல் 10 நிமிடங்கள் வரை மூடி வைப்பதால், மாவு திரவத்தை (பால் அல்லது தண்ணீர்) நன்றாக உறிஞ்சி உருண்டை பிடிக்க ஏதுவாக மாறும்.

* மாவு காய்ந்து போனால் உருண்டை பிடிக்கும்போதே விரிசல் விழும்.

இதையும் படியுங்கள்:
சம்மருக்கு கூலா குலாப் ஜாமூன் மில்க் ஷேக் மற்றும் நுங்கு மோர் செய்யலாம் வாங்க!
குலாப் ஜாமுன்

* ஒருவேளை 5 நிமிடங்களுக்குப் பிறகு மாவு சற்று காய்ந்தது போல் தோன்றினால், ஓரிரு துளிகள் பால் தெளித்து மீண்டும் மென்மையாக ஒன்று சேர்க்கலாம்.

* உருண்டைகளை உருட்டும்போது உள்ளங்கையில் சிறிது நெய் தடவி, விரிசல்கள் இல்லாமல் வழவழப்பாக உருட்ட வேண்டும். விரிசல் இருந்தால் எண்ணெயில் பொரிக்கும்போது வெடித்துவிடும்.

* உருண்டைகளை எண்ணெயில் போடும்போது தீ மிகவும் குறைவாக (Low-to-medium flame) இருக்க வேண்டும். அதிக தீயில் பொரித்தால் வெளிப்புறம் விரைவில் சிவந்து, உள்ளே வேகாமல் கெட்டியாகிவிடும்.

* அதேசமயம் நீங்கள் கோவா / பால் பவுடர் கொண்டு வீட்டிலேயே மாவு தயாரிக்கிறீர்கள் என்றால், அதனுடன் சிறிதளவு சமையல் சோடா (Baking Soda) சேர்ப்பதும் உள்ளே கெட்டியாகாமல் இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
'உடல் எடை கூடாமல் தீபாவளி கொண்டாடணுமா?' சக்கரவள்ளி கிழங்கில் செய்த 'ஹெல்தி' குலாப் ஜாமூன் ரெசிபி!
குலாப் ஜாமுன்

* குலாப் ஜாமூன் பொரிக்கும் போது எண்ணெயை அதிகம் சூடாக்காமல், மிதமான தீயில் (Low-Medium flame) பொறுமையாகப் பொரித்தெடுத்தால் மட்டுமே உள்ளேயும் நன்றாக வெந்து மிருதுவாக இருக்கும்.