

தினமும் காலை மாலை டிபனுக்கு என்ன சட்னி செய்வது என்று குழம்புவது இல்லதரசிகளின் அன்றாட வாடிக்கை, அதுவும் வீட்டில் அனைவரும் விரும்பும். ஹோட்டல்களில் பரிமாறப்படும் அந்த காரச் சட்னிக்கு எப்போதுமே தனியான வரவேற்பு உண்டு. வீட்டில் அதே சுவையில் அரைத்தாலும் சில நேரங்களில் நிறம் மாறிவிடும்; காரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. சில எளிய ரகசியங்களைக் கடைப்பிடித்தால் வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் சிவப்புக் காரச் சட்னியை அசத்தலாகத் தயாரிக்கலாம்.
1. சட்னிக்கு சிவப்பு நிற மிளகாய் வகை தேர்வு
சட்னியின் நிறத்துக்கும், காரத்துக்கும் முக்கியக் காரணம் நாம் தேர்ந்தெடுக்கும் மிளகாய்தான். எனவே நிறத்திற்கு நல்ல சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் காஷ்மீரி அல்லது பைடகி மிளகாயைப் பயன்படுத்தலாம். அதனுடன் காரத்துக்காக தேவைக்கு ஏற்ப காரமுள்ள சாதாரண காய்ந்த மிளகாய்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் இப்படி இரண்டு வகை மிளகாய்களையும் சேர்ப்பதால் சட்னி நிறமாகவும் காரமாகவும் இருக்கும்.
2. மிளகாயை ஊற வைக்கவும்
சாதாரணமாக நம் சட்னி அரைக்கும் பொழுது வரமிளகாயை ஊற வைக்காமல் அப்படியே சேர்த்துக் கொள்வோம். ஆனால் இந்த சட்னிக்கு ஊறவைத்து அரைத்தால் சுவையும் அதன் தன்மையும் நன்றாக இருக்கும்.காய்ந்த மிளகாய் 15 அல்லது 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு அரைத்தால் நல்ல சிவப்பு நிறத்தை கொடுக்கும்.
3. சின்ன வெங்காயம், பூண்டின் அளவு
இந்த சட்னிக்கு இரண்டு அல்லது மூன்று சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதிக சின்ன வெங்காயம் சேர்த்துக் கொண்டால் சட்னி இனிப்பாக இருக்கும்.எனவே என் நாம் சேர்த்துக் கொள்ளும் மிளகாய் அளவிற்கு ஏற்ப இந்த சின்ன வெங்காயத்தையும் பூண்டின் அளவையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
4. எண்ணெயில் வதக்கும் நேரம்
ஊற வைத்த மிளகாய், வெங்காயம், பூண்டு மூன்றையும் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் கருகாமல் பச்சை வாசனை போகும் வரை மட்டும் வதக்கினால் போதும், முதலில் பூண்டு சின்ன வெங்காயத்தை வதக்கி பிறகு மிளகாய் சேர்க்க வேண்டும் மிளகாய் கருகி நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. புளி, உப்பு, எண்ணெய் – சரியான விகிதம்
இந்த சிவப்பு சட்னிக்கு புளியும் உப்பும் தான் சுவை கூட்டும் ரகசியம். எனவே, புளியை அளவாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சட்னியின் சுவை புளிப்பு சுவையைக் கொடுத்து விடும். அதிகமாகப் புளி சேர்த்தால் மிளகாயின் காரம் குறைவாகத் தெரியும். அதேபோல் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். வாங்க வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சிவப்பு நிற சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஹோட்டல் ஸ்டைல் சிவப்புக் காரச் சட்னி செய்முறை!
தேவையான பொருட்கள்:
காய்ந்த சிவப்பு மிளகாய் – 8
காஷ்மீரி மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – 15
பூண்டு – 4 பல்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் காய்ந்த மிளகாய் இரண்டையும் வெந்நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் ஊறவைத்த மிளகாயைச் சேர்த்து கருகாமல் வதக்கி ஒரு தட்டில் ஆறவிடவும்.
ஆறியபின் மிக்ஸியில் வதக்கிய பொருட்கள், புளி, தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.அவ்வளவு தாங்க! ஹோட்டல் ஸ்டைல் காரசாரமான சிவப்பு நிற சட்னி தயார்!
இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசகர், காஷ்மீரி மிளகாயின் சரியான அளவு, ஊறவைக்கும் முறைகள் மற்றும் வெங்காயம்-பூண்டு விகிதம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு, நிறம் மாறாமல் ஹோட்டல் தரத்திலான சிவப்புச் சட்னியை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக் கற்றுக்கொள்வார்.