

குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்காமல் போகிறதா? பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்க இந்தப் பாட்டி கால வீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்!
மழைக்காலம் வந்துவிட்டாலே இல்லத்தரசிகளுக்கு சமையலறையில் சில சின்னச் சின்ன சவால்கள் ஏற்படும். அதில் முக்கியமான ஒன்று இட்லி மாவு புளிக்காமல் இருப்பது. வெயில் காலத்தில் நன்றாகப் பொங்கி வரும் இட்லி மாவு, மழை மற்றும் குளிர்காலத்தில் அப்படியே இறுகிப் போய் நிற்கும். இதனால் இட்லி ஊற்றும்போது மென்மையாக இல்லாமல் கெட்டியாகவும், சில நேரங்களில் சுவை குறைந்தும் இருக்கும்.
இட்லி மாவு நன்றாகப் புளிப்பதற்கு வெப்பநிலை மிகவும் அவசியம். குளிர்ந்த சூழலில் மாவில் இயற்கையாக நடைபெறும் நொதித்தல் செயல்முறை மெதுவாக நடைபெறும். இதற்காக மாவில் தேவையில்லாத பொருட்களைச் சேர்க்க வேண்டியதில்லை. வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு மாவை நன்றாகப் புளிக்க வைக்கலாம். அதற்கான நான்கு எளிய வழிகளைப் பார்ப்போம்.
வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்துங்கள்!
இட்லி அரிசி மற்றும் உளுந்தை ஊறவைக்கும்போது சாதாரண தண்ணீரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, லேசாக வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன் படுத்தலாம். அதேபோல் மாவு அரைக்கும்போதும் தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து அரைக்கலாம்.
தண்ணீர் அதிகச் சூடாக இருக்கக்கூடாது. வெதுவெதுப்பாக மட்டுமே இருக்கவேண்டும். அதிகச் சூடு மாவில் உள்ள நொதித்தலுக்குத் தேவையான நுண்ணுயிர்களைப் பாதிக்கலாம்.
அடுப்பின் அருகில் வைக்கலாம்!
மாவு அரைத்த பிறகு வழக்கமான பாத்திரத்தில் வைப்பதற்குப் பதிலாக, மூடியுள்ள பாத்திரத்தில் ஊற்றி சமையலறையில் வெதுவெதுப்பான இடத்தில் வைக்கலாம்.
குளிர் அதிகமாக இருக்கும் நாட்களில் அடுப்பின் அருகில் சிறிது நேரம் வைக்கலாம். ஆனால் அடுப்பின் நேரடி வெப்பம் மாவில் படக்கூடாது. மாவு பொங்கி வருவதற்கு போதுமான வெதுவெதுப்பான சூழல் இருந்தாலே போதும். அல்லது வெயில் அடிக்கும்பொழுது வெயிலில் மாவின் மேல் சூரிய வெளிச்சம் படும்படி சிறிது நேரம் வைத்து எடுத்து உள்ளே வைக்கலாம்.
ஓவனைப் பயன்படுத்தலாம்!
வீட்டில் ஓவன் இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓவனைச் சூடாக்க வேண்டிய அவசியமில்லை. ஓவனின் உள்ளே மாவுப் பாத்திரத்தை வைத்து கதவை மூடிவைக்கலாம்.
ஓவனில் விளக்கு வசதி இருந்தால் அதை மட்டும் எரியவிடலாம். அந்த லேசான வெப்பம் மாவு புளிப்பதற்கு உதவும். ஓவன் இல்லாதவர்கள் மைக்ரோவேவ் ஓவனுக்குள் மாவுப் பாத்திரத்தை வைத்து கதவை மூடி வைக்கலாம். ஆனால் அதை இயக்கக்கூடாது.
மாவைப் பிரித்து வையுங்கள்!
மாவை ஒரே பெரிய பாத்திரத்தில் அதிக அளவில் ஊற்றி வைப்பதற்குப் பதிலாக, இரண்டு பாத்திரங்களாகப் பிரித்து வைக்கலாம். இதனால் மாவு பொங்கி வருவதற்கு போதுமான இடம் கிடைக்கும்.
முக்கியமாக, மாவுப் பாத்திரத்தை முழுவதுமாக நிரப்பக்கூடாது. பாதியளவு அல்லது முக்கால் பங்கு மட்டுமே மாவை ஊற்றவேண்டும். மாவு பொங்கி மேலே வருவதற்கு இடம் இருக்கவேண்டும்.
கூடுதலாக இந்த விஷயங்களையும் கவனியுங்கள்!
* இட்லி அரிசி, உளுந்து இரண்டையும் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
* உளுந்தை நன்றாகப் பொங்கி வரும் பதத்தில் அரைக்க வேண்டும்.
* மாவில் தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்.
* குளிர்காலத்தில் மாவு புளிக்க 10 முதல் 16 மணி நேரம் வரை ஆகலாம். எனவே அவசரப்படாமல் காத்திருக்க வேண்டும்.
* மாவு நன்றாகப் புளித்த பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
* சமைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெளியே எடுத்துவைத்து மாவை நன்கு கரண்டியால் கலக்கிவிட்டு பிறகு உபயோகித்தால் இட்லி மென்மையாக இருக்கும்.
பாட்டி காலத்து சமையலில் பொறுமைக்கும் ஒரு தனி இடம் உண்டு. மழை, குளிர் என்று காலநிலை மாறினாலும், சரியான முறையில் மாவைத் தயாரித்து வைத்தால் மறுநாள் காலை பஞ்சு போன்ற
மென்மையான இட்லிகளைச் சுடச்சுடப் பரிமாறலாம். வீட்டில் உள்ளவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்!
இட்லி அரிசி மற்றும் உளுந்தை ஊறவைக்கும்போது சாதாரண தண்ணீரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, லேசாக வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன் படுத்தலாம். அதேபோல் மாவு அரைக்கும்போதும் தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து அரைக்கலாம்.
தண்ணீர் அதிகச் சூடாக இருக்கக்கூடாது. வெதுவெதுப்பாக மட்டுமே இருக்கவேண்டும். அதிகச் சூடு மாவில் உள்ள நொதித்தலுக்குத் தேவையான நுண்ணுயிர்களைப் பாதிக்கலாம்.
அடுப்பின் அருகில் வைக்கலாம்!
மாவு அரைத்த பிறகு வழக்கமான பாத்திரத்தில் வைப்பதற்குப் பதிலாக, மூடியுள்ள பாத்திரத்தில் ஊற்றி சமையலறையில் வெதுவெதுப்பான இடத்தில் வைக்கலாம்.
குளிர் அதிகமாக இருக்கும் நாட்களில் அடுப்பின் அருகில் சிறிது நேரம் வைக்கலாம். ஆனால் அடுப்பின் நேரடி வெப்பம் மாவில் படக்கூடாது. மாவு பொங்கி வருவதற்கு போதுமான வெதுவெதுப்பான சூழல் இருந்தாலே போதும். அல்லது வெயில் அடிக்கும் பொழுது வெயிலில் மாவின் மேல் சூரிய வெளிச்சம் படும்படி சிறிது நேரம் வைத்து எடுத்து உள்ளே வைக்கலாம்.
ஓவனைப் பயன்படுத்தலாம்!
வீட்டில் ஓவன் இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓவனைச் சூடாக்க வேண்டிய அவசியமில்லை. ஓவனின் உள்ளே மாவுப் பாத்திரத்தை வைத்து கதவை மூடி வைக்கலாம்.
ஓவனில் விளக்கு வசதி இருந்தால் அதை மட்டும் எரியவிடலாம். அந்த லேசான வெப்பம் மாவு புளிப்பதற்கு உதவும். ஓவன் இல்லாதவர்கள் மைக்ரோவேவ் ஓவனுக்குள் மாவுப் பாத்திரத்தை வைத்து கதவை மூடி வைக்கலாம். ஆனால் அதை இயக்கக்கூடாது.
மாவைப் பிரித்து வையுங்கள்!
மாவை ஒரே பெரிய பாத்திரத்தில் அதிக அளவில் ஊற்றி வைப்பதற்குப் பதிலாக, இரண்டு பாத்திரங்களாகப் பிரித்து வைக்கலாம். இதனால் மாவு பொங்கி வருவதற்கு போதுமான இடம் கிடைக்கும்.
முக்கியமாக, மாவுப் பாத்திரத்தை முழுவதுமாக நிரப்பக்கூடாது. பாதியளவு அல்லது முக்கால் பங்கு மட்டுமே மாவை ஊற்றவேண்டும். மாவு பொங்கி மேலே வருவதற்கு இடம் இருக்கவேண்டும்.
கூடுதலாக இந்த விஷயங்களையும் கவனியுங்கள்!
* இட்லி அரிசி, உளுந்து இரண்டையும் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
* உளுந்தை நன்றாகப் பொங்கி வரும் பதத்தில் அரைக்க வேண்டும்.
* மாவில் தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்.
* குளிர்காலத்தில் மாவு புளிக்க 10 முதல் 16 மணி நேரம் வரை ஆகலாம். எனவே அவசரப்படாமல் காத்திருக்க வேண்டும்.
* மாவு நன்றாகப் புளித்த பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
* சமைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெளியே எடுத்து வைத்து மாவை நன்கு கரண்டியால் கலக்கி விட்டு பிறகு உபயோகித்தால் இட்லி மென்மையாக இருக்கும்.
பாட்டி காலத்து சமையலில் பொறுமைக்கும் ஒரு தனி இடம் உண்டு. மழை, குளிர் என்று காலநிலை மாறினாலும், சரியான முறையில் மாவைத் தயாரித்து வைத்தால் மறுநாள் காலை பஞ்சு போன்ற மென்மையான இட்லிகளைச் சுடச்சுடப் பரிமாறலாம். வீட்டில் உள்ளவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்!