சுவிட்சர்லாந்து ஸ்பெஷல் காலை உணவு! வீட்டிலேயே இதை செய்வது இவ்வளவு சுலபமா?

குறைவான பொருட்களைக் கொண்டு, வெளிப்பக்கம் கரகரப்பாகவும் உள்பக்கம் மிருதுவாகவும் இருக்கும் சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்டி வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு ரோஸ்டி homemade rosti recipe
உருளைக்கிழங்கு ரோஸ்டி homemade rosti recipeChatGPT Image
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

உருளைக்கிழங்கு பயன்படுத்தி வழக்கமான பொரியல், வறுவல் என்று செய்வதைத் தாண்டி, சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற காலை உணவான ரோஸ்டியை நாம் நமது வீட்டிலேயே சுலபமாகச் செய்ய முடியும். எந்தவிதமான செயற்கை மாவும் இல்லாமல், உருளைக்கிழங்கின் அசல் சுவையோடு வெண்ணெய் மணம் கலந்து எளிதாக செய்யலாம். சரி வாங்க இதை எப்படிச் சுலபமாகச் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பெரிய உருளைக்கிழங்கு - 3

  • வெண்ணெய் - 2 ஸ்பூன்

  • சமையல் எண்ணெய் - 1 ஸ்பூன்

  • மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

  • கல் உப்பு - தேவையான அளவு

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - விருப்பப்பட்டால் 

செய்முறை! 

இந்த உணவு செய்வதற்கு, உருளைக்கிழங்கை சரியாகத் துருவி எடுப்பது மிகவும் அவசியமாகும். முதலில் உருளைக்கிழங்கின் தோலை முழுமையாக நீக்கிவிட்டு, அதனைக் கேரட் துருவும் கருவியைப் பயன்படுத்தி நீளவாக்கில் சீராகத் துருவிக்கொள்ள வேண்டும். 

உருளைக்கிழங்கு ரோஸ்டி homemade rosti recipe
உருளைக்கிழங்கு ரோஸ்டி homemade rosti recipeChatGPT Image

துருவிய உருளைக்கிழங்கில் இயற்கையாகவே அதிக அளவு தண்ணீர் இருக்கும். எனவே, அதனை ஒரு சுத்தமான பருத்தித் துணியில் வைத்து, சிறிதும் ஈரம் இல்லாதவாறு தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்க வேண்டும். ஈரம் முழுமையாகப் போனால்தான் உணவு நல்ல மொறுமொறுப்பாக வரும். 

தண்ணீர் பிழிந்த பின், அதனை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து உங்கள் கைகளால் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வரண்டுபோன உதடுகளுக்கு விடை கொடுங்கள்: ஜொலிக்கும் உதடுகளைப் பெற எளிய டிப்ஸ்!
உருளைக்கிழங்கு ரோஸ்டி homemade rosti recipe

அடுப்பில் ஒரு அகலமான தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவை வைத்து மிதமான தீயில் சூடாக்க வேண்டும். கல் மிதமாகச் சூடானதும், அதில் வெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெயைச் சேர்த்துப் பரப்பி விட வேண்டும். வெண்ணெய் உருகியதும், பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையைத் தவாவில் ஒரு வட்ட வடிவில் அடை போன்று தட்டையாகப் பரப்பி வைக்க வேண்டும். 

கரண்டியின் பின்பகுதியால் இதனை நன்றாக அழுத்தி விடுவது அவசியம், அப்போதுதான் உட்புறம் சீராக வேகும். மிதமான தீயில் சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை ஒரு புறம் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வேகவைக்க வேண்டும். 

அதன்பின், ஒரு தட்டின் உதவியோடு அதனை மெதுவாகத் திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிறிது வெண்ணெய் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
உருளைக்கிழங்கு ரோஸ்டி homemade rosti recipe

இருபுறமும் பொன்னிறமாகச் சிவந்து, சுற்றிலும் நல்ல கரகரப்பான பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடலாம். மிகவும் குறைவான பொருட்களைக் கொண்டு, குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய இந்த அற்புதமான உணவைச் செய்தால் வீடே வெண்ணெய் மணத்தில் கமகமக்கும். 

வெளிப்புறம் நல்ல கரகரப்புடனும், உட்புறம் மிருதுவாகவும் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ரோஸ்டி தக்காளி சாஸ் அல்லது மயோனைஸ் உடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இனி குழந்தைகளுக்கு வழக்கமான சிற்றுண்டிகளுக்குப் பதிலாக, ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்டி ரெசிபியை உங்கள் வீட்டிலும் செய்து அசத்துங்கள்.

logo
Kalki Online
kalkionline.com