ருசிக்கு ஒரு சவால்: நாவில் நீரூற்றும் கோவைக்காய் தொக்கு, முருங்கைக்கீரை சட்னி!

இட்லி, தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பரான கோவக்காய் தொக்கு, முருங்கை கீரை சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
kovakkai thokku and murungai keerai chutney
kovakkai thokku and murungai keerai chutneyImage credit-AI image
Updated on

கோவக்காய் தொக்கு

தேவையான பொருட்கள்

கோவைக்காய் - 15

பெரிய ப.மிளகாய் - 3

இஞ்சி - விரல் நீளம்

பூண்டு - 6 பல்

தயிர் - 3 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

சின்ன வெங்காயம் - 10

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

தக்காளி - 1 (விழுதாக அரைத்தது)

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சீரகம் - - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ரோட்டுக் கடை பரோட்டா சால்னா & தக்காளி பஜ்ஜி – வீட்டிலேயே செய்வது எப்படி?
kovakkai thokku and murungai keerai chutney

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டிவைத்த கோவைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.

மூடிபோட்டு வேகவைத்தால் 5 நிமிடத்தில் வெந்துவிடும். வெந்த கோவைக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு இடி உரல் அல்லது மிக்சிஜாரில் ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, வதக்கிய கோவைக்காய் சேர்த்து நன்றாக இடித்து கொள்ளவும். எல்லாமும் நன்றாக இடித்து மசித்து வரவேண்டும். மிக்சிஜாரில் போடுவதாக இருந்தால் பல்ஸ் மோடில் போடவேண்டும்.

அடுத்து அதில் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அடுத்து அதில், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், அரைத்த தக்காளி விழுது, கொத்தமல்லி தழை, மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக இடித்து கொள்ளவும். அனைத்து சேர்ந்து நன்றாக சட்னி பதத்திற்கு வந்ததும், கடாயில் நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிச்சி இந்த கலவையில் கொட்டவும்.

இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடுன்னு எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிட சூப்பராக இருக்கும்.

இந்த தொக்கை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க, அப்புறம் திரும்ப, திரும்ப வேணும்னு கேப்பீங்க...

முருங்கை கீரை சட்னி

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை - 2 கைப்பிடி

ப.மிளகாய் - 3

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

வேர்க்கடலை -2 டீஸ்பூன்

பூண்டு - 10 பல்

தக்காளி - 1

புளி - நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

தேங்காய் துருவல் - 2 பத்தை (துருவிக்கொள்ளவும்)

எண்ணெய் - 5 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடுகு, உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்-3

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முருங்கை கீரையை நன்றாக கழுவி வைக்கவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, வேர்க் கடலையை நன்றாக வறுத்து கொள்ளவும்.

அடுத்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சற்று வதங்கியதும், அதனுடன் கழுவி வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் ப.மிளகாய், புளி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய அனைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துகொள்ளவும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி கலந்து பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
சத்தான காய்கறிகளின் சுவையான விருந்து!
kovakkai thokku and murungai keerai chutney

இந்த முருங்கை கீரை சட்னி இட்லி, தோசை, சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com