அப்பளம் இருக்கா? வெறும் 15 நிமிடத்தில் சுவையான பஜ்ஜி, சமோசா செஞ்சு அசத்துங்க!

அப்பளத்தை வைத்து எளிய முறையில் பதினைந்தே நிமிடத்தில் சூப்பரான இரண்டு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
Appalam Samosa and Appalam bajji
Appalam Samosa and Appalam bajjiAI Image
Updated on

அப்பளத்தை வைத்து செய்யும் இந்த இரண்டு ரெசிபிகளையும் செய்ய 15 நிமிடங்களே போதுமானது. மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இப்படி வித்தியாசமாக ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று அப்பளத்தை வைத்து எளிய முறையில் பதினைந்தே நிமிடத்தில் சூப்பரான இரண்டு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

அப்பள பஜ்ஜி

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1 டீஸ்பூன்

பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

அப்பளம் - 5

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

அப்பளத்தை இரண்டாக வெட்டி வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, பெருங்காய தூள், மிளகாய் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு அப்பளமாக எடுத்து கடலை மாவு கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
அப்பளம் இனி குழம்பிலும் ஆட்டம் போடும்… அப்பளக் குழம்பு ரெசிபி! 
Appalam Samosa and Appalam bajji

இப்போது சுவையான அப்பள பஜ்ஜி தயார்...சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். சூப்பராக இருக்கும்.

அப்பளம் சமோசா

தேவையான பொருட்கள்

பெரிய சைஸ் அப்பளம் - 5

வெங்காயம் - 1

வேக வைத்த உருளைக்கிழங்கு - 1

மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்

தனியா தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

மைதா - 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயத்தை போட்டு அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அப்பளத்தை தண்ணீரில் 20-ல் இருந்து 30 விநாடிகள் ஊறவைக்கவும். அப்படி செய்வதால் அப்பளம் மென்மையாக மாறிவிடும். அப்போதுதான் உங்களால் சமோசா மடிக்க முடியும். அதேபோல் அதிகநேரம் ஊறவைத்தால் அப்பளம் கிழிந்துவிடும்.

20 விநாடிகள் கழித்து அதை தண்ணீர் இருந்து எடுத்து தனியாக வைக்கவும்.

அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் மைதா மாவை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட் போல் கரைத்து கொள்ளவும்.

இப்போது ஒரு அப்பளத்தை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன் நடுவில் சிறிது செய்து வைத்த மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்து ஓரங்களில் மைதா பேஸ்ட்டை தடவி ஒட்ட வேண்டும். பொறுமையாக செய்ய வேண்டும். ஏனெனில் அப்பளம் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் அழுத்தி செய்யும் போது கிழிந்துவிட வாய்ப்புள்ளது. இவ்வாறு அனைத்து அப்பளத்தையும் செய்து தனியாக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த அப்பள சமோசாக்களை ஒவ்வென்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

அப்பளத்தில் செய்வதால் இந்த சமோசா வேக அதிக நேரம் ஆகாது. சீக்கிரமாகவே வெந்து விடும். பிரவுன் கலர் வந்தவுடன் சமோசாவை எடுத்துவிடவும்.

இதையும் படியுங்கள்:
டக்குனு செய்யக்கூடிய மசாலா அப்பளம் ரெசிபி!
Appalam Samosa and Appalam bajji

இப்போது சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் அப்பள சமோசா ரெடி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com