மிளகாயும் தக்காளியும் இருக்கா? காரசாரமான மோமோஸ் சட்னி உடனே ரெடி!

தெருவோரக் கடைகளில் கிடைக்கும் அதே காரசாரமான மோமோஸ் சட்னி வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என தெரிந்துகொள்ளுங்கள்.
spicy momos chutney மோமோஸ் சட்னி
spicy momos chutney மோமோஸ் சட்னிAI Image
Updated on

மோமோஸ், அடிப்படையில் ஒரு திபெத்திய & நேபாளி உணவாக இருந்தாலும், இன்று இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் மிக அதிக அளவில் விரும்பப்படும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக மாறிவிட்டது. மாலையில் சுடச்சுட மோமோஸ் சாப்பிடுவது நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால், வெறும் மோமோஸை மட்டும் சாப்பிட்டால் அந்த திருப்தி கிடைக்காது. தெருவோரக் கடைகளில் விற்கும் அந்த காரசாரமான, சிவப்பான மோமோஸ் சட்னி தான் அதன் உண்மையான ரகசியம். 

கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சாஸ்களில், அவை கெட்டுப்போகாமல் இருக்க பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது நமது உடல்நலத்திற்கு அவ்வளவு நல்லதல்ல. ஆனால், அதே ரெஸ்டாரண்ட் சுவையில், சுலபமாக கிடைக்கும் தக்காளி மற்றும் மிளகாயை வைத்து நமது வீட்டிலேயே மிக எளிதாக இந்த காரமான சட்னியைத் தயாரிக்க முடியும். 

தேவையான பொருட்கள்:

  • தக்காளி - 3 

  • காஷ்மீரி காய்ந்த மிளகாய் - 5

  • சாதாரண காய்ந்த மிளகாய் - 5 

  • பூண்டு - 10 பற்கள்

  • இஞ்சி - 1 சிறிய துண்டு

  • சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

  • வினிகர் - 1 டீஸ்பூன்

  • சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

  • சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

இந்த ரெசிபியின் அடர்த்தியான சிவப்பு நிறம் மற்றும் சுவைக்கு மிளகாயைத் தயார் செய்யும் முறை மிகவும் முக்கியம். முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் காஷ்மீரி மிளகாய், கார மிளகாய் மற்றும் தக்காளியைச் சேர்த்து சுமார் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும். 

spicy momos chutney மோமோஸ் சட்னி
spicy momos chutney மோமோஸ் சட்னி

தக்காளி வெந்து அதன் தோல் உரியத் தொடங்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு அவற்றை நன்கு ஆறவிட வேண்டும். தக்காளி ஆறியதும் அதன் தோலை உரித்துவிட்டு, மிளகாயுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
கத்தரிக்காய் பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடும் சீக்ரெட் கத்தரிக்காய் சாதம்!
spicy momos chutney மோமோஸ் சட்னி

அடுத்ததாக, அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் துருவிய இஞ்சியைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும். பூண்டு லேசாக நிறம் மாறத் தொடங்கியதும், நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி மிளகாய் விழுதைக் கடாயில் சேர்க்கவும். 

எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாகக் கிளறிக் கொதிக்கவிட வேண்டும். இதில் சேர்க்கப்படும் பூண்டு மற்றும் இஞ்சி, அசல் சுவையைத் தருவதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இப்போது சுவையை மேம்படுத்த சோயா சாஸ், வினிகர், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வினிகர், சர்க்கரை சேர்ப்பதால் இந்த மோமோஸ் சட்னி கடைகளில் கிடைக்கும் அதே அசல் சுவையுடன் இருக்கும்; நீண்ட நாட்களுக்கும் கெடாது.

இதையும் படியுங்கள்:
பூண்டு, காய்ந்த மிளகாய் இருந்தா போதும்! ரெஸ்டாரண்ட் ஸ்டைல் செஸ்வான் சட்னி ரெடி!
spicy momos chutney மோமோஸ் சட்னி

சட்னி கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும் பதத்தில் வந்ததும் அடுப்பை அணைத்தால், நாவில் எச்சில் ஊறவைக்கும் அசல் தெருவோரக் கடை மோமோஸ் சட்னி ரெடி. இதை மோமோஸ் மட்டுமல்லாமல், ஸ்பிரிங் ரோல், கட்லெட், சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால், இரண்டு வாரங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com