பூண்டு, காய்ந்த மிளகாய் இருந்தா போதும்! ரெஸ்டாரண்ட் ஸ்டைல் செஸ்வான் சட்னி ரெடி!

மோமோஸ் மற்றும் ஃப்ரைடு ரைஸின் சுவையை 10 மடங்கு அதிகரிக்கும் காரசாரமான அசல் செஸ்வான் சட்னி வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
schezwan chutney செஸ்வான் சட்னி
schezwan chutney செஸ்வான் சட்னி
Updated on

இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவாக இண்டோ-சைனீஸ் (Indo-Chinese) உணவுகள் மாறிவிட்டன. அதிலும் குறிப்பாக ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், மோமோஸ், மற்றும் ஸ்பிரிங் ரோல் போன்ற உணவுகளைச் சாப்பிடும்போது, அதற்குத் தொட்டுக்கொள்ள காரசாரமான செஸ்வான் சட்னி இருந்தால் அதன் சுவையே தனி தான். 

கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சாஸ்களில், அவை கெட்டுப்போகாமல் இருக்க பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது நமது உடல்நலத்திற்கு அவ்வளவு நல்லதல்ல. ஆனால், அதே ரெஸ்டாரண்ட் சுவையில், சுலபமாக கிடைக்கும் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு மட்டுமே வைத்து, நமது வீட்டிலேயே மிக எளிதாக இந்த காரமான சாஸைத் தயாரிக்க முடியும். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • காஷ்மீரி காய்ந்த மிளகாய் - 15

  • சாதாரண காய்ந்த மிளகாய் - 10 

  • பூண்டு - 1/2 கப்

  • இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்

  • சமையல் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

  • சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

  • வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

  • சர்க்கரை - 1 டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

  • தண்ணீர் - மிளகாய் ஊறவைக்க தேவையான அளவு

schezwan chutney செஸ்வான் சட்னி
schezwan chutney செஸ்வான் சட்னி

செய்முறை! 

இந்த ரெசிபியின் அடர்த்தியான சிவப்பு நிறம் மற்றும் சுவைக்கு மிளகாயைத் தயார் செய்யும் முறை மிகவும் முக்கியம். முதலில் காஷ்மீரி மிளகாய் மற்றும் காரமான மிளகாய் இரண்டையும் காம்புகளை நீக்கிவிட்டு, ஒரு கிண்ணத்தில் போட்டு, நன்கு கொதிக்கும் சுடுநீரை ஊற்றி சுமார் 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். 

மிளகாய் நன்றாக ஊறி மென்மையானதும், தண்ணீரை முழுமையாக வடிகட்டிவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் சிறிதளவு தண்ணீர் மட்டும் தெளித்து, ரொம்பவும் மைய அரைக்காமல், லேசான கொரகொரப்புடன் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இடுப்பு வலி காணாமல் போகும்! 10 நிமிடத்தில் உதிரியான உளுந்து சாதம்!
schezwan chutney செஸ்வான் சட்னி

இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான அகன்ற கடாயை வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ச்சவும். சற்று தாராளமாக எண்ணெய் ஊற்றினால் தான் இது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். எண்ணெய் காய்ந்ததும், பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து, மிதமான தீயில் அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். 

பூண்டு லேசான பொன்னிறமாக மாறியதும், நாம் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை அதனுடன் சேர்த்துக் கிளறுங்கள். மிளகாயின் காரடி அடங்கி, எண்ணெய் தனியாகப் பிரிந்து மேலே மிதந்து வரும் வரை சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் இந்த சரியான பக்குவத்தில், சோயா சாஸ், வினிகர், மிளகுத் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். வினிகர் சேர்ப்பதால் இந்த செஸ்வான் சட்னி நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும்; அதேசமயம் சர்க்கரை சேர்ப்பது இதன் காரத்தைச் சமநிலைப்படுத்தி ஒரு அருமையான சுவையைக் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
தேங்காய் வறுத்து அரைத்த கேரளா சாம்பார்... கல்யாண வீட்டு டேஸ்ட் கேரண்டி!
schezwan chutney செஸ்வான் சட்னி

அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, மீண்டும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால், அசல் ரெஸ்டாரண்ட் சுவையில் கமகமக்கும் காரசாரமான செஸ்வான் சட்னி தயார். இதை முழுமையாக ஆறவைத்து, ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால், ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

இதை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com