வெறும் 10 நிமிடம் போதும்.. மைக்ரோவேவ் ஓவனில் செய்யக்கூடிய 5 சீக்ரெட் லட்டு ரெசிபிகள் இதோ!

உங்கள் வீட்டில் உள்ள மைக்ரோவேவ் ஓவனைப் பயன்படுத்தி வெறும் பத்து நிமிடங்களில் ஐந்து வகையான ஆரோக்கியமான மற்றும் சுவையான லட்டுகளைத் தயாரிக்கும் எளிய வழிமுறைகள்.
Instant ladoo recipe
Instant ladoo recipe
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

Instant Ladoo Recipe: திடீரென்று இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் அடிக்கடி வருவதுண்டு. அதற்காக நீண்ட நேரம் சமையலறையில் நின்று விறகு அடுப்பிலோ, கேஸ் ஸ்டவ்விலோ கஷ்டப்பட வேண்டிய அவசியமே இனி இல்லை. உங்கள் வீட்டில் ஒரு மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் போதும், வெறும் பத்து நிமிடங்களுக்குள் அசத்தலான சுவையில் பலவிதமான லட்டுகளைத் தயாரித்து விடலாம். 

இது நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், திடீர் விருந்தினர்கள் வரும்போது உடனடியாக ஸ்நாக்ஸ் கொடுக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட 5 அட்டகாசமான லட்டு வகைகளை எப்படி மிகச் சுலபமாகச் செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க.

1. கடலை மாவு லட்டு!

கடலை மாவு லட்டு செய்வதும் சுலபமான வேலைதான். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடலை மாவை அதன் பச்சை வாசனை போகும் வரை மிதமாக வறுக்க வேண்டும். பின்னர் அதனுடன் பொடி செய்த சர்க்கரை மற்றும் கொஞ்சம் ஏலக்காய்த் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இதையும் மைக்ரோவேவ் அவனில் ஐந்து நிமிடம் வைத்து எடுத்த பிறகு, பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். இது சாப்பிடுவதற்கு அருமையாக இருப்பதோடு, உடலுக்குத் தேவையான புரோட்டீன் சத்தையும் அள்ளித் தரும்.

2. வேர்க்கடலை லட்டு!

இதற்கு ஓவன் கூட பெரிதாகத் தேவைப்படாது. வறுத்த வேர்க்கடலையைத் தோல் நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பொடித்த சர்க்கரை மற்றும் வாசனைக்காக ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறுசிறு லட்டுகளாகப் பிடித்துக் கொள்ளவும். தினமும் மாலை நேரத்தில் காபி குடிக்கும்போது இதை ஒரு ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.

3. தேங்காய் லட்டு!

தேங்காய் லட்டுவின் சுவை பலருக்கும் மிகவும் பிடிக்கும். துருவிய தேங்காயை காய்ச்சிய பாலில் போட்டு முதலில் நன்றாக வேகவைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை மைக்ரோவேவ் ஓவனில் ஐந்து நிமிடம் வைத்து சமைத்து எடுத்தால், அருமையான பக்குவத்தில் தேங்காய் பூரணம் கிடைக்கும். மிதமான சூட்டில் லட்டுகளாகப் பிடித்தால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான தேங்காய் லட்டு தயார்.

இதையும் படியுங்கள்:
உங்க போன் மெமரி ஃபுல் ஆகி அடிக்கடி ஹேங் ஆகுதா.. அப்போ இந்த 5 ட்ரிக்ஸ உடனே ட்ரை பண்ணுங்க!
Instant ladoo recipe

4. ரவா லட்டு!

ரவையை வைத்து மிக எளிதாக இந்த லட்டை செய்ய முடியும். முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு ரவையை நல்ல பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மைக்ரோவேவ் செய்யக்கூடிய ஒரு பாத்திரத்தில் மாற்றி சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டும் உள்ளே வைத்து எடுக்கவும். லேசாக ஆறியதும் கைகளில் நெய் தடவி சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொண்டால் சுவையான ரவா லட்டு ரெடி. 

5. பாதாம் லட்டு

பாதாமை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொஞ்சம் பால் பவுடர் மற்றும் சர்க்கரைப் பொடியைச் சேர்த்து நெய்யில் லேசாக வறுக்க வேண்டும். பின் இதை ஓவனில் வைத்து ஐந்து நிமிடங்கள் சூடுபடுத்தி எடுத்தால், சத்தான பாதாம் லட்டுக்கான கலவை தயாராகிவிடும். இதை உருண்டைகளாகச் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
தேங்காய் இருந்தால் போதும்.. பேக்கரி இனிப்புகளை ஓரம்கட்டும் இந்த 3 ஸ்வீட்ஸ்களை உடனே செஞ்சு பாருங்க!
Instant ladoo recipe

இனிப்பு செய்ய வேண்டும் என்றாலே பெரிய வேலை என்று நினைப்பவர்களுக்கு இந்த மைக்ரோவேவ் ரெசிபிகள் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல், சமையலே தெரியாதவர்கள் கூட இந்த லட்டுகளை மிக சுலபமாகச் செய்துவிட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com