

1. பீர்க்கங்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 2
சாதம் – 3 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – ¼ கப்
சீரகம் – ½ டீஸ்பூன்
செய்முறை;
பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கவும். ஒரு வாணலியில் வெங்காயம், மிளகாய், சீரகம் வதக்கி அதனுடன் பீர்க்கங்காயை சேர்க்கவும். நன்றாகக் குழைந்ததும், தேங்காய்த் துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஆறியதும் சாதத்துடன் கலந்துவிடவும். வித்தியாசமான சுவையில் பீர்க்கங்காய் சாதம் தயார்.
2. பீர்க்கங்காய் பச்சடி
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1 (தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த மிளகாய்
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நறுக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கரைத்து வைத்த புளியை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பச்சடி கெட்டியானதும், அடுப்பை அணைத்து பரிமாறவும். அள்ளும் சுவையில் பீர்க்கங்காய் பச்சடி தயார்.
3. பீர்க்கங்காய் பாயசம்
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 2
சர்க்கரை - முக்கால் கிலோ
பால் - 3 கப்
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு
ஆப்பிள் க்ரீன் ஃபுட் கலர் - சிறிதளவு,
கண்டென்ஸ்டு மில்க் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் (பொடித்தது) - ஒரு சிட்டிகை
செய்முறை:
கசப்பு சுவை இல்லாத பீர்க்கங்காயை தோல் சீவி, நன்கு கழுவி சிறுசிறு துண்டாக நறுக்கி பிறகு அதை குக்கரில் வேக வைத்து மைபோல் அரைத்து, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகுமளவு கொதிக்க வையுங்கள். பிறகு அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் ஃபுட் கலர் பவுடரையும் கலந்து விடுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்துப் போடுங்கள். ஏலக்காய் தூள் செய்ததையும் அதில் போடுங்கள். தேவையெனில் பிடித்தமான எஸன்ஸ் ஒரு சொட்டு விட்டு மிதமான சூட்டில் பரிமாறலாம். சுவையான பீர்க்கங்காய் பாயாசம் தயார்.
4. பீர்க்கங்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 2
கடலை மாவு - 1 கப்
சோள மாவு - 1 கப்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வதற்கு முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, பின் அதனை வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, சீரகப்பொடி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், வட்டமாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி.
வாசகர் தினமும் சமைக்கும் வழக்கமான உணவுகளுடன், ஒரு எதிர்பாராத சுவையான இனிப்பு வகையையும் தெரிந்து கொண்டு தமது சமையல் கலைத் திறனை விரிவுபடுத்திக் கொள்கிறார்.