ஆரோக்கியம் தரும் மொறுமொறு கம்பு தோசை... தொட்டுக்க காரசாரமான கத்திரிக்காய் சட்னி ரெசிபி!

உடலுக்கு வலு சேர்க்கும் கம்பு தோசையும், அதற்கு ஏற்ற கொங்குநாடு ஸ்பெஷல் கத்திரிக்காய் சட்னியும் சுலபமாக செய்யும் முறை.
கம்பு தோசை
கம்பு தோசைGemini image
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on

1. கம்பு தோசை ரெசிபி

கம்பு ஒரு சிறந்த பாரம்பரியமான சிறுதானிய உணவுப் பொருளாகும். இன்றைய நவீன உலகில் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும் பாரம்பரியமான சிறுதானிய உணவுப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. கம்பில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளன. சாதாரணமாக செய்யும் தோசையை காட்டிலும் கம்பில் தோசை செய்வது மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு விருப்பமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

கம்பு - ஒரு கப்

இட்லி அரிசி - அரை கப்

உளுந்தம் பருப்பு - ஒரு கப்

செய்முறை:

கம்பு, இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு மூன்றையும் நன்கு கழுவி எட்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இவை நன்கு ஊறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இதனை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். கம்பு மாவு நன்கு புளித்த வந்த உடன் தோசை கல்லில் சேர்த்து தோசை சுட்டு எடுக்கவும். சுவையான மொறு மொறுப்பான கம்பு தோசை தயார்.

2. கத்திரிக்காய் சட்னி ரெசிபி

சாதாரணமாக செய்யும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி காட்டிலும் இந்த கத்தரிக்காய் சட்னி மிகுந்த சுவையுடையதாக இருக்கும். கத்தரிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கொங்கு நாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் சட்னி ரெசிபி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 10

சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 3

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

மல்லித்தழை - தேவையான அளவு

கம்பு தோசை
கம்பு தோசைGemini image

செய்முறை:

குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் தரும் கம்பு: வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய 8 சுவையான உணவுகள்!
கம்பு தோசை

இதனுடன் நாம் நறுக்கி வைத்திருந்த கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும்.

குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் குக்கரில் இருக்கும் நீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு மத்தை பயன்படுத்தி கத்தரிக்காய் நன்கு மசிந்து வரும்படி கடைந்துகொள்ள வேண்டும். இறுதியாக நாம் வடித்து வைத்திருந்த தண்ணீர் தேவையான அளவு நறுக்கிய மல்லித்தழை சேர்த்து நன்கு கரண்டியை பயன்படுத்தி கிளறிக் கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோய் மற்றும் உடல் எடையைக் கட்டுப்படுத்தும் 3 சத்தான ராகி உணவுகள்!
கம்பு தோசை

சுவையான காரசாரமான கொங்குநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் சட்னி தயார். இது கம்பு தோசைக்கு சிறந்த சைடு டிஷ் ஆக அமையும். இந்தக் கத்தரிக்காய் சட்னி தோசை மட்டுமல்லாமல் இட்லி, சப்பாத்தி, பூரி மற்றும் சூடான சாதத்தில் கலந்து சாப்பிடுவதற்கு ஒரு சிறந்த ருசியான சைடிஷ் ஆக அமையும்.

பாரம்பரிய சிறுதானிய உணவான கம்பைப் பயன்படுத்தி மொறுமொறுப்பான தோசையும், அதற்குப் பொருத்தமான காரசாரமான கொங்கு கத்திரிக்காய் சட்னியும் செய்து குடும்பத்தினருக்கு ஆரோக்கிய விருந்தளிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com