ஒரே முருங்கைக்காயில் 4 அருமையான சமையல் ரெசிபிகள்!

அல்வா முதல் பொரிச்ச குழம்பு வரை அசத்தல் செய்முறைகள்.
முருங்கைக்காய்
முருங்கைக்காய்Gemini image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

1. முருங்கைக்காய் அல்வா

தேவை:

முருங்கைக்காய் - 20

சர்க்கரை - முருங்கைக் காய்களின் உட்புற சதைக்கு 2 மடங்கு

நெய் -1 கப்

ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

முந்திரி, பாதாம் - தலா 6

செய்முறை:

முருங்கைக் காய்களை நறுக்கி, முக்கால் பதம் வேக வைத்து, தோல், விதைகள் நீக்கவும். உட்புறத்தில் உள்ள சதைப் பகுதியை சுரண்டி எடுத்து மசிக்கவும். சர்க்கரையை கம்பி பதத்திற்கு காய்ச்சி, அதில் முருங்கை விழுதை கலந்து, நெய் விட்டுக் கிளறவும். பாதாம் பருப்பை ஊறவைத்து, தோல் நீக்கி, அதையும் முந்திரிப் பருப்பையும் நெய்யில் பொரித்து சேர்க்கவும். பின்னர் இதில் ஏலக்காய் தூள் தூவி, அல்வா இறுகி வரும்போது இறக்கி, தட்டில் கொட்டிப் பரப்பி வில்லைகள் போடவும். சுவையான, சத்தான முருங்கைக்காய் அல்வா தயார்.

2. முருங்கைக்காய் சட்னி:

முருங்கைக்காய் – 2

தேங்காய் – ½ கப்

பச்சை மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – 6

பூண்டு – 2 பல்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முருங்கைக்காயை வேகவைத்து உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் வதக்கி தேங்காய் சேர்க்கவும். முருங்கைக்காய் சதையுடன் சேர்த்து அரைத்து தாளித்து பரிமாறவும். சுவையான, சத்தான முருங்கைக்காய் சட்னி ரெடி. இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

3. முருங்கைக்காய் வடை

தேவையான பொருட்கள்:

முற்றிய முருங்கைக்காய் – 10

கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப்

சோம்புத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

நறுக்கிய பச்சை மிளகாய் – 2

இஞ்சி விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்

அரிசி மாவு, நறுக்கிய பூண்டு – தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முருங்கைக்காய் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும், சதையை வழித்தெடுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல், அரைக்கவும். கடலைப்பருப்பை ஊறவைத்து, மசால் வடை பதத்தில் அரைக்கவும்.

முருங்கைக்காய்
முருங்கைக்காய்Gemini image

இதனுடன் முருங்கை விழுது, (எண்ணெய் நீங்கலாக) மற்ற எல்லாவற்றையும் கலந்து சிறு வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடைகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சத்தான, மொறு மொறுப்பான முருங்கைக்காய் வடை ரெடி.

இதையும் படியுங்கள்:
அசைவ சுவையை மறக்கடிக்கும் முருங்கைக்கீரை ரெசிபிஸ்! – ஒருமுறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்!
முருங்கைக்காய்

4. முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 4

சின்ன வெங்காயம் - 15

தேங்காய் - ஒரு கப்

வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க :

கடுகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், உப்பு சேர்த்து முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு வேகவைக்கவும்.

மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த தேங்காய் விழுதை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்த முருங்கைக்காயுடன் ஊற்றி கொதிக்கவைத்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
முருங்கைக்கீரையை உணவில் சேர்க்க சாக்கு சொல்ல முடியாது! 4 சுவையான ரெசிபிகள்!
முருங்கைக்காய்

வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை குழம்பில் சேர்த்து கலக்கவும். சுவையான முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட இது அருமையாக இருக்கும்.

முருங்கைக்காயை வழக்கமான முறையில் சமைத்து சோர்வடைந்தவர்களுக்கு, வித்தியாசமான சுவையில் அல்வா, வடை, சட்னி மற்றும் குழம்பு தயாரித்து அசத்துவதற்கான முழு வழிகாட்டி.

logo
Kalki Online
kalkionline.com