நாவில் கரையும் சுவையில் வித்தியாசமான ரசம் வகைகள்: மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!

தினமும் ஒரே மாதிரியான ரசம் செஞ்சு வெறுப்பா இருக்கா. வாங்க இன்னைக்கு முருங்கைக்காய், மாங்காய் வைத்து சூப்பரா ரசம் செய்வது எப்படினு பார்க்கலாம்.
two type of rasam|ரசம் ரெசிபி
two type of rasam|ரசம் ரெசிபிAI Image
Updated on

முருங்கைக்காய், மாங்காய் ஆகியவற்றை வைத்து இரண்டு விதமாக ரசம் செய்வது பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. முருங்கைக்காயின் மருந்து குணங்களைச் சுட்டிக்காட்டி, துவரம் பருப்பு, பூண்டு, மிளகு, புளி சேர்த்து சுவைமிகு ரசம் செய்வது கூறப்படுகிறது. அதேபோல் கல்லா மாங்காயை வேகவைத்து மசித்து, மசாலா விழுது, தாளிப்பு சேர்த்து சூப் போல குடிக்கலாம் என கூறுகிறது.

முருங்கைக்காய் ரசம் ரெசிபி:

முருங்கைக்காயில் ஏகப்பட்ட மருந்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அந்த முருங்கைக்காயை வைத்து சிம்பிளா, டேஸ்டியா முறையில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி

முருங்கைக்காய் - 3

தக்காளி - 3

ப.மிளகாய் - 3

புளி - நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

பூண்டு - 15 பல்

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

தாளிக்க:

கடுகு, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊறவைத்து திக்காக இல்லாமல் தண்ணீயாக கரைத்துக்கொள்ளவும்.

ஒரு மிக்சிஜாரில் பூண்டு, மிளகு, சீரகம் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

துவரம் பருப்பை நன்றாகக் கழுவி 30 மணிநேரம் ஊறவைக்கவும்.

முருங்கைக்காய்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் நறுக்கிய தக்காளி, ப.மிளகாய், மஞ்சள் தூள், ஊறவைத்த துவரம் பருப்பு, முருங்கைக்காய் 5 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும்.

விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து முருங்கைக்காய் சதையுடன் சேர்த்து நன்றாக பிசைந்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து தனியாக வைக்கவும்.

வடிகட்டிய முருங்கைக்காய் கலவையுடன், புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கரைசல் திக்காக இருக்கக்கூடாது. சற்று தண்ணீராக இருக்க வேண்டும்.

பிறகு அதனுடன் இடித்து வைத்த மிளகு, பூண்டு விழுது, கொத்தமல்லி, உப்பு சேர்த்து மூடிபோட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து முருங்கைக்காய் கலவையில் கொட்டிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தட்டு போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்.

இப்போது சூப்பரான முருங்கைக்காய் ரசம் ரெடி.

கண்டிப்பா இந்த ரசத்தை ஒருமுறை உங்கள் வீட்டில் செஞ்சி பாருங்க. அப்புறம் முருங்கைக்காய் பிடிக்காதவர்கள் கூட இத விரும்பி சாப்பிடுவாங்க. விட மாட்டாங்க..

இது சூடான சாதத்துடன் சாப்பிட மிகச் சிறப்பாக இருக்கும்; அல்லது ஒரு இதமான சூப் போலவும் இதை அருந்தலாம்.

mango rasam|ரசம் ரெசிபி
mango rasam|ரசம் ரெசிபிAI Image

மாங்காய் ரசம் :

தினமும் ஒரே மாதிரியான ரசம் செஞ்சி போர் அடிச்சிடுச்சா. வாங்க இன்னைக்கு மாங்காய் வைத்து டேஸ்டியா ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கல்லா மாங்காய் - 1

தனியா - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - டீஸ்பூன்

ப.மிளகாய் - 1

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - சுவைக்கு

தாளிக்க :

கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கல்லா மாங்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு இடி உரலில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, இஞ்சி போட்டு கொரகொரப்பாக இடித்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் ரசம் கூட தோத்துடும்… வீட்ல புதினா இருந்தா இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க!
two type of rasam|ரசம் ரெசிபி

ஒரு பாத்திரத்தில் வெட்டிய மாங்காயை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.

மாங்காய் நன்றாக வெந்ததும் அதை மசித்து விடவும்.

பின்னர் அதில் கொரகொரப்பாக இடித்த மிளகு சீரக விழுது, ஒரு கப் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கொதிக்கும் மாங்காய் கலவையில் சேர்க்கவும்.

கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
சளி, இருமலை விரட்டும் கொள்ளுத் துவையல் மற்றும் ரசம் செய்வது எப்படி?
two type of rasam|ரசம் ரெசிபி

அவ்வளவு தான் இப்போது சூப்பரான மாங்காய் ரசம் ரெடி. இதை சூப் போல் குடிக்கவும் சூப்பராக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com