இட்லி, தோசைக்கு முட்டைகோஸ் சட்னியா? ஒருமுறை செஞ்சா அப்புறம் தேங்காய் சட்னியே கேட்க மாட்டாங்க!

வழக்கமான தேங்காய், தக்காளி சட்னிக்கு மாற்றாக முட்டைகோஸ் மற்றும் மொறுமொறு பீன்ஸ் பஜ்ஜி செய்யும் எளிய முறை.
முட்டைகோஸ் சட்னி
முட்டைகோஸ் சட்னிGemini image
Updated on

முட்டைகோஸ் சட்னி

இட்லி தோசை என்றாலே நாம் அன்றாட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இதுபோல்தான் சமைத்து வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக ஒரு புதுவிதமான சுவையில் முட்டைகோஸ் கொண்டு சட்னி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் - 100 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - தேவையான அளவு

சிறுஞ்சீரகம் - தேவையான அளவு

புளி - தேவையான அளவு

கடுகு - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

வத்தல் - தேவையான அளவு

செய்முறை :

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறுஞ்சீரகம், பச்சை மிளகாய், புளி, உப்பு, நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கிக்கொள்ள வேண்டும். இவை நன்கு ஆரிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொரிந்து வந்த உடன் கருவேப்பிலை, வத்தல் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்திருந்த முட்டைக்கோஸ் கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சுவையான முட்டைக்கோஸ் சட்னி தயார். இது சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு சிறந்த காம்மினேஷன் ஆக அமையும். சூடான சாதத்தில் இந்த முட்டைகோஸ் சட்னி மற்றும் மேலே சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவது அலாதி சுவையுடையதாக இருக்கும்.

பீன்ஸ் பஜ்ஜி

பஜ்ஜி ரெசிபிஸ் என்றாலே வாழைக்காய், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் இதுபோல்தான் செய்து சாப்பிட்டு வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக பீன்ஸ் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இது ஒரு புதுவிதமான சுவையில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பொருளாக இருக்கும்.

முட்டைகோஸ் சட்னி
முட்டைகோஸ் சட்னிGemini image

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 20

கடலை மாவு - தேவையான அளவு

கரம் மசாலா - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

அரிசி மாவு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
செட் தோசைக்கு ஹோட்டல் ஸ்டைல் வடை கறி வீட்லயே செய்வது இவ்வளவு ஈசியா?
முட்டைகோஸ் சட்னி

செய்முறை:

முழு பீன்சை நன்கு கழுவி ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி மேலே இட்லி அடுக்கை வைத்து அதன் மேல் பீன்ஸை வைத்து வேகவைக்க வேண்டும். பீன்ஸ் நன்கு வெந்து வந்தவுடன் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், அரிசி மாவு, கடலை மாவு, கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி நன்கு பஜ்ஜி பதத்திற்கு கலந்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் தேங்காய் இல்லையா? 5 நிமிடத்தில் கமகமக்கும் வேர்க்கடலை சட்னி தயார் செய்வது எப்படி!
முட்டைகோஸ் சட்னி

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடாக இருக்கும்போது பீன்ஸ்ஸை சேர்த்து இரண்டு புறமும் நன்கு சிவந்து வரும்படி பொரித்தெடுக்க வேண்டும். சுவையான புது விதமான டேஸ்ட்டில் பீன்ஸ் பஜ்ஜி தயார். இவ்வாறு பீன்ஸில் பஜ்ஜி செய்து கொடுப்பதன் மூலம் பீன்ஸை விரும்பி உண்ணாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். மேலும் பஜ்ஜியில் அரிசி மாவு சேர்ப்பது மொறு மொறுப்பான சுவையைத் அதிகரித்துத்தரும்.

தினமும் ஒரே மாதிரியான சட்னி சாப்பிட்டு சலித்தவர்களுக்கு, காய்கறி வாசனையே தெரியாமல் மிகச் சுவையான சட்னி மற்றும் மாலை நேர மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்யும் ரகசியம் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com