ஓட்ஸ் பிடிக்காதா? 4 சுவையான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி டிப்ஸ்!

ஒரே மாதிரியான உணவுக்குப் பதில் ஓட்ஸில் கிச்சடி, பொங்கல், இட்லி, தோசை செய்யும் எளிய முறைகள்.
ஓட்ஸ் ரெசிபி
ஓட்ஸ் ரெசிபிGemini image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

1. ஓட்ஸ் கிச்சடி

தேவை:

ஓட்ஸ் – 1 கப்

பச்சை பயறு – ½ கப்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

கேரட், பீன்ஸ், பட்டாணி – 1 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது)

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர் – 3 கப்

நெய் / எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயறைக் கழுவி சிறிது நேரம் வேகவிடவும். கடாயில் எண்ணெய்/நெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை வதக்கவும்.

கேரட், பீன்ஸ், பட்டாணி, தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

வேகவைத்த தால், ஓட்ஸ் சேர்த்து நன்றாக கிளறி, மூடி வைத்து சுண்டிய பின் இறக்கவும். சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார்.

2. ஓட்ஸ் பொங்கல்

தேவை:

ஓட்ஸ் - அரை கப்

பாசி பருப்பு - கால் கப்

முந்திரி - ஆறு

சீரகம், மிளகு - ஒரு ஸ்பூன்

நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசி பருப்பை 10 நிமிடம் ஊறவைத்து, மலர வேகவைத்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் ஓட்ஸை போட்டு 5 நொடி வதக்கவும். பின் கால் கப்புக்கு குறைவாக நீர் ஊற்றி ஓட்ஸை வேகவைக்கவும்.

ஓட்ஸ் குழைந்து வரும்போது, வேகவைத்த பாசி பருப்பு, உப்பு போட்டு சுருள கிளறவும்.நெய்யில் சீரகம், மிளகு, முந்திரி சேர்த்து பொரித்து சேர்க்கவும். சுவையான ஓட்ஸ் பொங்கல் தயார்.

3. ஓட்ஸ் இட்லி

தேவை:

ஓட்ஸ் - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - ஒரு கப்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை ஒருமணி நேரம் ஊறவைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸை 10 நிமிடம் ஊறவைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள். அள்ளும் சுவையில் ஓட்ஸ் இட்லி ரெடி.

இதையும் படியுங்கள்:
ஓட்ஸ் கஞ்சியா குடிச்சு போர் அடிக்குதா? சுகரை கட்டுப்படுத்தும் ஓட்ஸ் கிச்சடி ரெசிபி இதோ!
ஓட்ஸ் ரெசிபி

4. ஓட்ஸ் தோசை

தேவை:

ஓட்ஸ் - 3 கப்

தயிர் -2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

அரிசி மாவு - 2 ஸ்பூன்

சோள மாவு - 2 ஸ்பூன

வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

ஓட்ஸ் ரெசிபி
ஓட்ஸ் ரெசிபிGemini image

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு சிறிது வெந்நீர் ஊற்றி தயிரை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து இதில் அரிசி மாவு மற்றும் சோள மாவை கலந்து வைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ஒரே மாதிரியான கிச்சடியா? சுவை அதிகரிக்கும் 5 வித்தியாசமான ரெசிபி!
ஓட்ஸ் ரெசிபி

பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலக்கி மெல்லியதாக தோசை போல ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி வெகு பொருத்தம்.

ஒரே மாதிரியான ஓட்ஸ் ரெசிபி உணவுகளுக்குப் பதிலாக, தினமும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் காலை உணவை மிக விரைவாகச் செய்து அசத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com