பாசிப்பயறில் இட்லி செய்து இப்படி ஒரு பன்னீர் பெப்பர் ஃப்ரை செஞ்சு பாருங்க!

ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த பாசிப்பயறு பன்னீர் கிரேவி மற்றும் பெப்பர் ஃப்ரை செய்முறை.
பாசிப்பயறு பன்னீர்
பாசிப்பயறு பன்னீர் Gemini image
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

1. பாசிப்பயறு பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு – 250 கிராம்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பூண்டு – 10 பல்

பச்சை மிளகாய் – 6

உப்பு – தேவைக்கேற்ப

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன்

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 2

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கசகசா – ½ டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 100 மில்லி

நெய் – 3 ஸ்பூன்

பிரிஞ்சி இலை – 2

அன்னாசிப்பூ – 1

தேங்காய் துருவல் – ஒரு கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை:

பாசிப்பயறை 8 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பாசிப்பயறுடன் 3 பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு, சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

அரைத்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக வேகவைத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
கிராமத்து சுவையில் மணமணக்கும் கொள்ளு பயறு 5 சூப்பர் ரெசிபிகள்!
பாசிப்பயறு பன்னீர்

இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகம், மிளகு, சோம்பு, கிராம்பு சேர்த்து நன்கு பொரிந்தவுடன், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் கசகசாவையும் சேர்த்து நன்கு மைய அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, நெய் ஊற்றி, நறுக்கிய இட்லி துண்டுகளை லேசாக பிரட்டி, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.

மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து, மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பாசிப்பயறு பன்னீர் கிரேவி தயார்! சப்பாத்தி, பூரி, தோசையுடன் பரிமாறலாம்.

பாசிப்பயறு பன்னீர்
பாசிப்பயறு பன்னீர் Gemini image

2. பாசிப் பயறு பன்னீர் பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

பன்னீர் துண்டுகள் (இட்லி துண்டுகள்) – 1 கப்

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு (பெப்பர்) – தேவைக்கேற்ப

நெய் – 3 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – தாளிப்பதற்கு தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
நவராத்திரி 9 நாளுக்கும் 9 வகை சுண்டல்: நாவில் கரையும் கறிப் பொடி ரகசியம்!
பாசிப்பயறு பன்னீர்

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி, நறுக்கிய இட்லி துண்டுகளை பொன்னிறமாக பிரட்டி எடுக்கவும். அதே வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியில், பொரித்த பன்னீர் (இட்லி) துண்டுகளை போட்டு, காரத்துக்கு தேவையான அளவு மிளகு சேர்த்து, வாணலியை மூடி 5 நிமிடங்கள் வைக்கவும். இறுதியாக, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பாசிப்பயறு பன்னீர் பெப்பர் ஃப்ரை தயார்!

குறிப்பு: பாசிப்பயறு இட்லி துண்டுகள் சதுர வடிவில் வெட்டினால் மிருதுவாக பன்னீர் போன்ற வடிவில் இருக்கும்.

கடைகளில் வாங்கும் பன்னீருக்கு மாற்றாக, வீட்டிலுள்ள பாசிப்பயறை வைத்தே அட்டகாசமான சுவையில் பன்னீர் போன்ற தோற்றத்தில் பெப்பர் ஃப்ரை மற்றும் கிரேவி செய்யும் எளிய சமையல் ரகசியங்களை வாசகர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com