எண்ணெயில் பொரிக்க வேண்டாம்… உடல் எடையை குறைக்க உதவும் சுவையான 'பேன் ஃப்ரைடு பன்னீர்'!

Pan Fried Paneer
Pan Fried Paneer
Published on

டல் எடையைக் குறைக்கும் இலக்கை அடையத் தீவிரமாக முயற்சிக்கும்போது, எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, போண்டா போன்றவற்றைத் தொட்டுக்கூடப் பார்க்கக் கூடாது. அப்படிப்பட்ட நேரங்களில் நாக்குக்கு ருசியாகவும், அதே சமயம் உடலுக்குத் தேவையான முழுமையான புரதச்சத்தையும் தரக்கூடிய ஒரு அருமையான உணவுதான் இந்த "பேன் ஃப்ரைடு பன்னீர் (Pan Fried Paneer)". 

இதைச் செய்ய அதிக நேரம் ஆகாது. நிறைய எண்ணெய் ஊற்றிப் பொரிக்காமல், வெறும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லது எண்ணெயில், தோசைக்கல்லிலேயே இதை மிக எளிதாகச் செய்துவிடலாம். வாருங்கள், அந்த சிம்பிளான ரெசிபியைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பன்னீர் - 200 கிராம்

  • கெட்டித் தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

  • கரம் மசாலா - ½ டீஸ்பூன்

  • மிளகுத் தூள் - ½ டீஸ்பூன்

  • இஞ்சி பூண்டு விழுது - ½ டீஸ்பூன்

  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் அல்லது வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்துள்ள கெட்டித் தயிர், காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவேண்டும். மசாலா பேஸ்ட் மிகவும் தண்ணியாக இல்லாமல், சற்று கெட்டியாக இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெங்காயத்தை நறுக்கி வீட்டு அறையின் மத்தியில் வைத்தால் என்ன ஆகும்?
Pan Fried Paneer

இப்போது நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை இந்த மசாலாவில் சேர்க்கவும். பன்னீர் மிகவும் மென்மையானது என்பதால், கரண்டியை வைத்து வேகமாகத் திருப்பக் கூடாது. கைகளால் மெதுவாக மசாலா எல்லாத் துண்டுகளிலும் படும்படி பிரட்டி விடவேண்டும். இந்த மசாலாவில் பன்னீர் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வேண்டும். அப்போதுதான் காரமும் உப்பும் பன்னீரின் உள்ளே முழுமையாக இறங்கும்.

இப்போது அடுப்பில் ஒரு இரும்புத் தோசைக்கல் அல்லது பேனை  வைத்து சூடாக்கவும். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஊறிய பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கல்லில் வைக்கவேண்டும். 

இதையும் படியுங்கள்:
மூக்குத்தி ரகசியம்: இடது பக்கம் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் 'மேஜிக்' மாற்றங்கள்!
Pan Fried Paneer

ஒரு பக்கம் வெந்து பொன்னிறமானதும், மெதுவாகத் திருப்பிப் போட்டு மறுபக்கமும் சிவக்க விட வேண்டும். பன்னீரை அதிக நேரம் கல்லில் வைத்தால் ரப்பர் போலக் கடினமாகிவிடும், எனவே இரண்டு பக்கமும் லேசான க்ரிஸ்பி பதம் வந்ததும் எடுத்துவிட வேண்டும்.

அவ்வளவுதான், வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே ஜூஸியாகவும் இருக்கும் "பேன் ஃப்ரைடு பன்னீர்" தயார். இதன் மேலே லேசாக சாட் மசாலா தூவி, தக்காளி கெட்சப் அல்லது புதினா சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். இன்றே இதை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com