கார்ன்ஃப்ளேக்ஸ் மொறுமொறுப்பில் பன்னீர் குர்குரே: காரசாரமான புதினா சட்னியுடன் செய்வது எப்படி?

மாலை நேர தேநீருக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் மற்றும் அடர் பச்சை நிற புதினா சட்னி ரெசிபி.
பன்னீர் குர்குரே
பன்னீர் குர்குரேGemini image
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

மொறுமொறுப்பான பன்னீர் குர்குரே (Paneer Kurkure) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டி ஆகும். இதை செய்ய

தேவையான பொருட்கள்:

பன்னீர் _ 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது _ 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் _ 1 தேக்கரண்டி

கரம் மசாலா _ ½ தேக்கரண்டி

சீரகத் தூள் _ ½ தேக்கரண்டி

சாட் மசாலா _ ½ தேக்கரண்டி

எலுமிச்சை சாறு _ 1 தேக்கரண்டி

உப்பு _ தேவையான அளவு

மைதா மாவு _ 2 மேஜைக்கரண்டி

சோள மாவு (Corn Flour) _ 2 மேஜைக்கரண்டி

கார்ன்ஃப்ளேக்ஸ் (Cornflakes) _1 கப் (நன்றாக நொறுக்கியது)

எண்ணெய் _ பொரித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், சாட் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பன்னீரில் மசாலா நன்றாக ஒட்டுமாறு மெதுவாக கலந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸை ஒரு அகலமான தட்டில் பரப்பி வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த பன்னீர் துண்டை எடுத்து, முதலில் கரைத்து வைத்துள்ள மைதா கரைசலில் முக்க வேண்டும். பிறகு அதை நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸில் புரட்டி, அனைத்து பக்கங்களிலும் நன்றாக ஒட்டுமாறு அழுத்தவும்.

பன்னீர் குர்குரே
பன்னீர் குர்குரேGemini image

கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடாக்கவும். தயார் செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொரித்து எடுக்கவும்.

சூடான மற்றும் மொறு மொறுப்பான பன்னீர் குர்குரே தயார்! இதை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
பன்னீர் குர்குரே

புதினா சட்னி

பன்னீர் குர்குரே போன்ற மொறுமொறுப்பான சிற்றுண்டிகளுக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற சுவையான புதினா சட்னி (Green Chutney) செய்முறை .

தேவையான பொருட்கள்:

புதினா இலைகள் _1 கப் (கழுவி சுத்தம் செய்தது)

கொத்தமல்லி தழை _ ½ கப்

பச்சை மிளகாய் _ 2 (காரத்திற்கு ஏற்ப)

இஞ்சி _ ½ அங்குல துண்டு

பூண்டு _ 2 பல்

எலுமிச்சை சாறு _ 1 மேஜைக்கரண்டி

சீரகம் _ ½ தேக்கரண்டி

சாட் மசாலா _ ½ தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

உப்பு _தேவையான அளவு

சர்க்கரை _ ¼ தேக்கரண்டி (விருப்பப்பட்டால் – காரத்தை சமநிலைப்படுத்த)

ஜில் தண்ணீர் _ 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, சாட் மசாலா மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
மொறுமொறுப்பான கச்சோரி முதல் குளிர்ந்த தண்டாய் வரை: வீட்டிலேயே வடஇந்திய ஸ்நாக்ஸ் செய்யும் வழிமுறைகள்!
பன்னீர் குர்குரே

சட்னி அரைக்கும்போது அதனுடன் 1-2 ஐஸ் கட்டிகள் அல்லது சிறிதளவு ஜில் தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்துக்கொள்ளவும். (இது சட்னி அடர் பச்சை நிறமாகவே இருக்க உதவும்).

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாகக் கலந்து விடவும். காரசாரமான, புளிப்பும் நறுமணமும் நிறைந்த புதினா சட்னி தயார்! இதை மொறுமொறுப்பான பன்னீர் குர்குரேவுடன் தொட்டுச் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

மாலை நேர தேநீருக்குக் கடைகளில் வாங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே நொடியில் பஞ்சு போன்ற பன்னீரை கார்ன்ஃப்ளேக்ஸ் மொறுமொறுப்போடு காரசாரமாகச் செய்து அசத்தலாம்.