

மிளகு தட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு வறுத்தது- ஒரு கப்
வறுத்து அரைத்த உளுந்து மாவு- இரண்டு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன்
உடைத்த மிளகு- ஒரு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் -அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு மற்றுமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகப் போட்டு காய்ந்த எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவை கெட்டியாகப் பிசையவும். இந்த கலவையில் இருந்து சிறிது மாவை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து தட்டையாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு நன்றாக வேகவிட்டு சடசடப்பு அடங்கியதும் எடுக்கவும். காரசாரமான மிளகு தட்டை ரெடி.
மிளகு வடை
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து- ஒரு கப்
உடைத்த மிளகு பொடி, சீரகப் பொடி- தலா- ஒரு டீஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு -தேவையான அளவு
உப்பு -ருசிக்கேற்ப
செய்முறை:
கருப்பு உளுந்தை நன்றாக ஊறவைத்து அரைத்து எடுத்து, அதனுடன் மிளகு, சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து மாவை நன்றாக கலந்து பிசைந்து வடைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். காரசாரமான மிளகுவடை தயார்.
மிளகு போகா
தேவையான பொருட்கள்:
கெட்டியான வெள்ளை அல்லது சிவப்பு அவல்- ரெண்டு கப்
புளி- பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
வெல்லம்- ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய்- நாலு டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க:
மிளகு -ரெண்டு டேபிள் ஸ்பூன்
வெந்தயம்- ஒரு டீஸ்பூன்
கருப்பு எள்- ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு ,உளுத்தம் பருப்பு தலா- ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
கடுகு- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை- ஒரு ஆர்க்கு
வேர்க்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அவலை சுத்தம் செய்து நன்றாக ஊறவைத்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து புளியை கெட்டியாகக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வறுத்து பொடித்தவற்றையும், வெல்லத்தையும் சேர்த்துக்கிளறி இடை இடையே நல்லெண்ணெய் விடவும். நல்ல கெட்டியாக வந்து எண்ணெய் பிரியும்பொழுது அவலை சேர்த்துக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். நல்ல கமகம வாசனை உடன் மிளகு போகா சாப்பிடத் தூண்டும். வித்தியாசமான ருசியில் அசத்தும்.