குழந்தைங்க பரங்கிக்காயை ஒதுக்குறாங்களா? இப்படி பருப்பு சேர்த்துக் கொடுங்க... தட்டே காலியாகும்!

குழந்தைகள் விரும்பாத பரங்கிக்காயை பாசிப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து சுவையாகவும் சத்தாகவும் மாற்றுவது எப்படி?
பரங்கிக்காய்
பரங்கிக்காய்Gemini image
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on

ரங்கிக்காயில் பல நன்மைகள் இருந்த போதிலும் இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பருப்பு போன்ற உணவுகளுடன் மசித்து கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். மேலும் பரங்கிக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய கோடைகால காய்கறி ஆகும்.

இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பரங்கிக்காய் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது. உடலின் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்னையைத் தடுக்கிறது. இதில் விட்டமின் ஏ மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.

பரங்கிக்காய் உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது மற்றும் அல்சரை குணப்படுத்தும் காய்கறியாகும். பாசிப்பருப்பில் விட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகிய பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இது எளிதில் செரிமானம் ஆகும். இதில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. துவரம் பருப்பில் நார்ச்சத்து, மினரல்ஸ், புரதச்சத்து, கால்சியம், சோடியம், விட்டமின் பி, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சிகப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் தலையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் புது முடி வளர உதவுகிறது. இதில் இருக்கும் கார் செடி எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு மற்றும் மற்ற இதயநோய் பிரச்னைகளில் இருந்து தடுக்கிறது.

சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிகமான நன்மைகளை தருகிறது. இவ்வாறு உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய பொருட்களைக் கொண்டு பரங்கிக்காய் பருப்பு ரெசிபி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 50 கிராம்

பாசிப்பருப்பு - 50

பரங்கிக்காய் - 80 கிராம்

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

கடுகு - தேவையான அளவு

சிறுஞ்சீரகம் - தேவையான அளவு

வரமிளகாய் - 3

எண்ணெய் - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

மல்லித்தழை - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு கொடுங்க: சுவையான கீரை தொக்கு செய்முறை!
பரங்கிக்காய்

செய்முறை:

பரங்கிக்காயை நான்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் தேவையான அளவு பாசிப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து நன்கு கழுவி இதனுடன் நறுக்கி வைத்திருந்த பரங்கிக்காய் தோல் உரித்த முழு சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

பரங்கிக்காய்
பரங்கிக்காய்Gemini image

குக்கரின் பிரஷர் அடங்கியவுடன் இதனை நன்கு ஒரு மத்தை கொண்டு மசித்து கொடுக்க வேண்டும். தாளிப்பிற்காக ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொறிந்த உடன் கருவேப்பிலை, பெருங்காயத்தூள், வர வத்தல் சேர்த்து தாளித்து பரங்கிக்காய் பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக மல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
பரங்கிக்காய்

சுவையான கமகமக்கும் பரங்கிக்காய் பருப்பு கூட்டு தயார். இது சுடு சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கு மிகுந்த சுவையுடையதாக இருக்கும். எந்த ஒரு காய்கறியையும் உணவுப் பொருளையும் குழந்தைகளுக்குப் பிடிக்காவிட்டாலும் அதனுடைய பயன்களை நாம் கூறுவதன் மூலம் அவற்றை அவர்கள் அந்த காய்கறியின் பயன்களுக்காகவே உண்டு விடுவார்கள்.

குழந்தைகள் பரங்கிக்காயை ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி, கண் ஆரோக்கியம் மற்றும் சிறந்த செரிமானத்தைப் பெற இந்த பரங்கிக்காய் பருப்பு கூட்டு சிறந்த உணவாக அமையும்.

logo
Kalki Online
kalkionline.com