புரதச்சத்து வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!

Need protein?
healthy recipes in tamil!
Published on

புரதச்சத்து அதிகம் மிகுந்த முட்டை இப்போது அதிகமாக அனைவராலும் விரும்பப்படுகிறது. தினம் ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் உடல் நலம் சீராக இருக்கும் என்கிறது மருத்துவம்.  முட்டையை விதவிதமாக செய்து தந்தால் முட்டை விரும்பாதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இதோ இங்கு சில ரெசிபிகள்...
முட்டை கட்லட்
தேவை:

வேகவைத்த முட்டைகள் -4 உருளைக்கிழங்கு -2
பெரிய வெங்காயம் -2
முட்டை - 1
ரஸ்க் தூள் 2  ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் – பொரிக்க

செய்முறை:
வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ளவும். நான்கு பாகமாக உருளைக்கிழங்கு மசியலை பிரித்துக் கொள்ளவும். வேகவைத்த முட்டையின் மீது உருளைக்கிழங்கு மசியலால் ஒரு கோட்டிங் வரும்வரை மூடவும். பின் அடித்து வைத்திருக்கும் முட்டையில் புரட்டி ரஸ்க் தூள் தடவி சுட வைத்த எண்ணெயில் மிதமான தீயில் பொறித்து எடுக்கவும். அதை நான்காக கட் செய்து நடுவில் மிளகுத்தூள் தூவி சாஸ் உடன் சாப்பிடலாம். இந்த முட்டை கட்லெட் முழுதாக எண்ணெயில் பொரித்து எடுப்பதால் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி விரும்புவார்கள்.

முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு
தேவை;

முட்டை - 3
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல்-  5
இஞ்சி - சிறிது
பூண்டு- 4 பற்கள்
மிளகு- 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு மஞ்சள் தூள் - தேவைக்கு

இதையும் படியுங்கள்:
சுவையும் மணமும் தரும் தேங்காய்ப் பால் ரசம் எவ்வாறு செய்வது?
Need protein?

செய்முறை;
முட்டையை உப்பு போட்டு நன்றாக அடித்து தோசை கல்லில் ஒரு கரண்டி எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி சிவந்ததும் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு ஆம்லெட் தயாரிக்கவும். இதை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலுடன் அரைத்த மசாலா சேர்த்து தேவையான உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதித்து வைத்து சிறிது கெட்டியாகி இறக்கும்போது தயாராக வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளை போட்டு இறக்கவும். இந்த முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

முட்டை குழம்பு
தேவை;

முட்டை -  6
சின்ன வெங்காயம் - 10
நல்லெண்ணெய்-  இரண்டு ஸ்பூன்
உப்பு ,மஞ்சள் தூள் -  தேவைக்கு
மிளகாய் வற்றல் - 5
மிளகு- 1/2 டீஸ்பூன்
சீரகம் -  1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
பச்சைப் பட்டாணி மசாலா சாதமும் - உருளைக்கிழங்கு பொடி வறுவலும் செய்வோமா?
Need protein?

செய்முறை:
முட்டையை அவித்து உரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு நன்றாக வதங்கியதும் தேங்காய் பாலில் வறுத்த சீரகம் தனியா மிளகாய் வற்றல் அரைத்த மசாலா கலந்து தேவையான உப்பு மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்கவிடவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும்போது வெட்டி வைத்திருக்கும் முட்டைகளின் மேல் குழம்பை ஊற்றி மல்லி இலைகளை தூவி மூடிவைக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com