பிஸ்கட்டுகளில் உள்ள துளையின் ரகசியம் தெரியுமா?

சில பிஸ்கட்டுகளில் துளைகள் இருப்பதை பார்த்திருப்போம். அதற்கு பின்னால் ஒரு குறிப்பிடத்தக்க காரணமும் இருக்கிறது.
Biscuit
Biscuit
Published on

பிஸ்கட் என்ற பெயரை கேட்டாலே குழந்தைகள் முகத்தில் சந்தோஷம் வந்து விடும். அந்தளவிற்கு குழந்தைகளுக்கு பிஸ்கட் பிடிக்கும். இன்றைய காலக்கட்டத்தில் தாயார்மார்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பதால் அவர்களின் பசியை போக்குவதற்காக பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பிஸ்கட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. குழந்தைகள், பெரியோர்கள், டயட்டில் உள்ளவர்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டுகளும் தற்போது விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமின்றி தற்போது சிறுதானியங்கள், கேழ்வரகு போன்ற சத்தான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகளும் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.

பிஸ்கட் என்பது சுடப்பட்ட மாவை கொண்டு செய்யப்பட்ட ஒரு உணவுப் பண்டம் ஆகும். இது பெரும்பாலும் இனிப்பு அல்லது கார சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.

கோதுமை மாவு, அரிசி மாவு, கம்பு மாவு போன்ற பலவகை மாவு கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் இனிப்பு சுவை, கார சுவை, தேங்காய் சுவை, சாக்லேட் சுவை என பல சுவைகளில் கிடைக்கின்றன. அதேபோல் பிஸ்கட்கள் தட்டையான, வட்டமான, சதுரமான என பல வடிவங்களில் கிடைக்கின்றன.

பிஸ்கட்டில் பலவிதமான மாற்றங்களும், சுவையுமான சேர்க்கைகளும் உள்ளன. சில பிஸ்கட்களில், மைதா மாவு, சர்க்கரை, நெய், பால், முட்டை போன்றவை சேர்க்கப்படுகின்றன. சில பிஸ்கட்கள் முட்டை சேர்க்காமல், சர்க்கரை, நெய், கோதுமை மாவு, பால் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்படுகின்றன.

அந்த வகையில் சில பிஸ்கட்டுகளில் துளைகள் இருப்பதை பார்த்திருப்போம். இவை அலங்காரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு பின்னால் ஒரு குறிப்பிடத்தக்க காரணமும் இருக்கிறது.

பிஸ்கட்டுகளில் உள்ள சிறிய துளைகள், பெரும்பாலும் "டாக்கிங்" அல்லது "டாக்கர் ஹோல்ஸ்" என்று குறிப்பிடப்படுகின்றன. மாவில் நிறைய காற்று குமிழ்கள் இருக்கும். அதை அடுப்பில் சூடாக்கும்போது, இந்த காற்றுப் குமிழ்கள் விரிவடையும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைகள் அடிக்கடி பிஸ்கட் சாப்பிடுகிறார்களா? பெற்றோரே உஷார்!
Biscuit

இந்த குமிழ்கள் விரிவடைந்து வெடிப்பதைத் தடுக்க, மாவில் துளைகளை இட்டு காற்று வெளியேற அனுமதிக்கிறது. இதனால் பிஸ்கட்டை சரியாக சுட முடியும். மேலும் இவை பேக்கிங் (backing) செய்யும்போது உருவாகும் நீராவி வெளியேற அனுமதிக்கின்றன.

பிஸ்கட்டுகளில் உள்ள துளைகள் சமமான தூரத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள் மிகவும் கடினமாகவோ அல்லது மிகவும் மென்மையாகவோ இருக்கும். துளைகளை நெருக்கமாக வைத்தால் மெல்வதற்கு கடினமாக இருக்கும். மேலும் துளைகள் மிக தொலைவில் இருந்தால், பிஸ்கட் உடைந்து விடும்.

சரியான எண்ணிக்கையிலான துளைகள் இருக்க வேண்டும். இதன் விளைவாக தட்டையான, மொறுமொறுப்பான பிஸ்கட்டை உருவாக்க முடியும்.

பிஸ்கட்டில் உள்ள துளைகள் அடுப்பிலிருந்து வரும் வெப்பம் பிஸ்கட்டில் சமமாக ஊடுருவி, முழு பிஸ்கட்டும் ஒரே விகிதத்தில் சுடப்படுவதையும், விரும்பிய அளவிலான மிருதுவான தன்மையை அடைவதையும் உறுதி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
மாலை வேளையில் அவ்வப்போது கொறிக்க இனிப்பு, கார பிஸ்கட் வகைகள்!
Biscuit

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com