திருவனந்தபுரம் ஸ்டைல் நெய் மணக்கும் பருப்பு போலி... தொட்டுச் சாப்பிட சுடச்சுட பால் பாயாசம்!

கேரளா பாரம்பரிய சுவையில் நாவில் நீர் ஊறும் மென்மையான பருப்பு போலி மற்றும் கெட்டிப் பால் பாயாசம் செய்யும் எளிய முறை.
பருப்பு போலி
பருப்பு போலிGemini image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

திருவனந்தபுரம் ஸ்டைலில் நெய் மணக்கும் பருப்பு போலி மற்றும் அதனுடன் சேர்த்து சாப்பிட உன்னதமான பால் பாயாசம் செய்முறைகளை பார்க்கலாம்.

1. பருப்பு போலி

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

மஞ்சள்தூள் - ¼ ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

பூரணத்துக்கு

கடலைப்பருப்பு - ½ கப்

வெல்லம் - ¾ கப் (துருவியது)

ஏலக்காய்த்தூள் - ½ ஸ்பூன்

சுக்குத்தூள் - ¼ ஸ்பூன்

நெய் - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மிகத் தளர்வாக (சாஃப்டாக) பிசையவும். பிசைந்த மாவின் மேல் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, மாவு நெய்யில் நன்கு ஊறும்படி 2 முதல் 3 மணி நேரம் மூடி வைக்கவும்.

பின்னர் கடலைப்பருப்பை நன்கு கழுவி, குக்கரில் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3-4 விசில்கள் விட்டு வேக வைக்கவும். வெந்த பருப்பில் உள்ள தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, ஆற வைக்கவும். ஒரு கடாயில் துருவிய வெல்லம் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை சூடாக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

ஆறவைத்த பருப்பை மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் அரைத்த பருப்பு, வடிகட்டிய வெல்லப் பாகு சேர்த்து மிதமான தீயில் கிளறவும். கலவை கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது ஏலக்காய்த்தூள், சுக்குத் தூள் மற்றும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கி ஆறவைக்கவும். ஆறின பின் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

போலி தட்டுதல்: பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து பூரண உருண்டையை விட சற்று சிறிய அளவு மாவை எடுக்கவும். வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிதளவு நெய் தடவி, மேல் மாவை லேசாக பரப்பி, நடுவில் பூரண உருண்டையை வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
கடையில் வாங்குவதை விட... 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற மென்மையான பன்னீர்!
பருப்பு போலி

மேல் மாவை கொண்டு பூரணத்தை முழுமையாக மூடி, ஓரங்களை ஒன்றிணைத்து உருட்டவும். கைகளில் நெய் தொட்டுக் கொண்டு, மாவின் மேல் லேசாக அழுத்தி மெல்லிய வட்டமாக (போலியாக) தட்டவும். தோசைக் கல்லை சூடாக்கி, தட்டிய போலியைப் போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றி மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

2. கேரளா பால் பாயாசம்

தேவையான பொருட்கள்:

சிகப்பு பச்சரிசி - 4 டேபிள் ஸ்பூன்

கட்டிப் பால் - 1 லிட்டர்

சர்க்கரை - ½ கப்

நெய் - 1 டீஸ்பூன்

பருப்பு போலி
பருப்பு போலிGemini image

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி, 15 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து வடித்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் 1 டீஸ்பூன் நெய் விட்டு, ஊறிய அரிசியை சேர்த்து 1 நிமிடம் லேசாக வதக்கவும். வதக்கிய அரிசியுடன் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு கலக்கி கொதிக்கவிடவும். பால் கொதித்ததும் தீயை மிகக் குறைவாக வைத்து, பால் சுண்டி ¾ பங்காக குறையும் வரை அடிக்கடி கிளறிவிடவும்.

இதையும் படியுங்கள்:
பிள்ளையார்பட்டி ஸ்பெஷல்... பஞ்சு போல மென்மையான மோதகம் ரகசியம்!
பருப்பு போலி

அரிசி பாலில் நன்கு வெந்து, பாலின் நிறம் லேசான இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும் வரை மிதமான தீயிலேயே கொதிக்கவிட வேண்டும். அரிசி முழுமையாக வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

பாரம்பரிய கேரளா பால் பாயாசத்திற்கு முந்திரி, திராட்சை வறுத்துப் போடவோ, ஏலக்காய் சேர்க்கவோ தேவையில்லை.

சூடான பருப்பு போலியை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மிதமான சூடான பால் பாயாசத்தை ஊற்றிப் பரிமாறவும். போலியை பாயாசத்தில் தொட்டு சாப்பிடுவது திருவனந்தபுரத்தின் அசல் சுவையான அனுபவத்தைத் தரும்.

திருவனந்தபுரம் திருமண வீடுகளின் அசல் சுவையில் நெய் மணக்கும் பருப்பு போலியையும், அதற்கேற்ற கெட்டியான பால் பாயாசத்தையும் வீடே மணக்க சுலபமாகச் செய்து அசத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com