கொத்தமல்லியை சட்னியா அரைக்கிறீங்க? இந்த முறையில் துவையல் செஞ்சு பாருங்க!

குழம்புகளில் சேர்த்துப் பார்த்த கொத்தமல்லியை இப்படி பாரம்பரியமாக செய்து அசத்துங்கள்.
கொத்தமல்லி துவையல்
கொத்தமல்லி துவையல்Gemini image
ஆ.நர்மதா

ஆ.நர்மதா, வேதியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். விருதுநகர் அருகே பாளையம்பட்டி கிராமத்திலிருந்து எழுதி வருகிறார். பள்ளிப் பருவம் முதலே தமிழார்வம் கொண்ட இவர், சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு தேடும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படைத்து வருகிறார்.

Updated on: 

அனைத்து கீரை வகைகளையும் நாம் தனித்தனியாக தான் சமைத்து சாப்பிட்டுள்ளோம். ஆனால் அனைத்து குழம்பு மற்றும் கிரேவி வகைகளிலும் கொத்தமல்லியை நறுமணம் மற்றும் சுவைக்காக சேர்ப்பதுண்டு. இப்படிப்பட்ட கொத்தமல்லியில் சுவை மட்டுமல்லாது பல நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன. கொத்தமல்லி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தலை சுத்தல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் கண்பார்வையை பாதுகாக்கிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் இது சரும பாதுகாப்பு மற்றும் பளபளப்பிற்கு உதவுகிறது. இதில் இருக்கும் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், தாதுக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட கொத்தமல்லியில் பாரம்பரிய முறையில் கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி என்பதைத் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி - 500 கிராம்

உளுந்தம் பருப்பு - 100 கிராம்

முழு தனியா - 50 கிராம்

வத்தல் - 15

புளி - சிறிதளவு

பூண்டு - 15 பள்

பெருங்காயகட்டி - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காய கட்டியை நன்கு பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே எண்ணெயில் தேவையான அளவு உளுந்தம் பருப்பு, முழு தனியா, வர வத்தல், புளி, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இவை நன்கு ஆரிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி துவையல்
கொத்தமல்லி துவையல்Gemini image

வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சுத்தம் செய்த கொத்தமல்லியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இதை நன்கு சுருண்டு வரும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு பொடி போதும்... கல்யாண வீட்டு வத்தல் குழம்பு வீட்டிலேயே தயார்!
கொத்தமல்லி துவையல்

கொத்தமல்லி நன்கு ஆறியவுடன் நாம் அறைத்து வைத்திருந்த மசாலாவுடன் கொத்தமல்லி கலவையையும் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி துவையல் பக்குவத்தில் அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொரிந்த உடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொத்தமல்லி துவையல் உடன் சேர்த்து கிளறி கொடுக்க வேண்டும். சுவையான பாரம்பரியமிக்க கம கமக்கும் கொத்தமல்லி துவையல் தயார். கொத்தமல்லி துவையலில் நல்லெண்ணெய் சேர்ப்பது இதன் சுவையை மேலும் அதிகரித்துக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டுப் பாயாசம் மிஞ்சும் சுவையில் தேங்காய் மற்றும் பீட்ரூட் பாயாசம்!
கொத்தமல்லி துவையல்

இது சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் போது மிகுந்த சுவையுடையதாக இருக்கும். மேலும் இந்த கொத்தமல்லி துவையலை சாதத்துடன் நன்கு பிசைந்து வெரைட்டி ரைஸ் போலவும் குழந்தைகளுக்கு லஞ்ச் பேக் ரெசிபியாக கொடுத்து விடலாம். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான உணவு பொருளாகவும் இருக்கும்.

வாசகர்கள் தங்களின் அன்றாட சமையலில் பயன்படுத்தும் கொத்தமல்லியை, எவராலும் விரும்பத்தக்க வகையில் மிகச் சுவையான பாரம்பரியத் துவையலாக மாற்றும் தனித்துவமான முறையைக் கற்றுக்கொள்கிறார்கள்.