வாழைத்தண்டு பேல் பூரி மற்றும் அரைத்துவிட்ட பருப்பு குழம்பு: வீடே மணக்கும் அசத்தல் ரெசிபிகள்!

ஆரோக்கியமும் சுவையும் இணைந்த இந்த 2 சிறப்பு உணவுகளை மிக எளிதாக வீட்டிலேயே செய்யலாம்!
பருப்பு குழம்பு - Bhel Puri Recipe
பருப்பு குழம்பு - Bhel Puri Recipe
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

தேவையான பொருட்கள்:

1. மிக மெல்லிசா நறுக்கிய வாழைத் தண்டின் நடுப் பகுதி ½ கப்

2. மெல்லிசா நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகள் ½ கப்

3. மெல்லிசா நறுக்கிய வெங்காயம் 1

4. மெல்லிசா நறுக்கிய தக்காளி 1

5. மெல்லிசா நறுக்கிய பச்சை மிளகாய் 1

6. ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் 20

7. வறுத்த வேர்க்கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

8. சேவ் (Sev) ½ கப்

9. வேக வைத்து நறுக்கிய உருளைக் கிழங்கு 1

10. எலுமிச்சை ஜூஸ் 1-2 டேபிள் ஸ்பூன்

11. சாட் மசாலா ½ டீஸ்பூன்

12. சிவப்பு மிளகாய் தூள் ¼ டீஸ்பூன்

13. அரிசிப் பொரி 3 கப்

14. வறுத்து பொடித்த சீரக தூள் ½ டீஸ்பூன்

கிரீன் சட்னி தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

1. கொத்தமல்லி இலைகள் ½ கப்

2. புதினா இலைகள் ¼ கப்

3. பச்சை மிளகாய் 1-2

4. தோல் சீவி துருவிய இஞ்சி 1 டீஸ்பூன்

5. எலுமிச்சை ஜூஸ் 1 டீஸ்பூன்

6. உப்பு தேவையான அளவு

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, ரவா தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இனிப்பு-புளிப்பு சட்னி தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

1. திக்கான புளிக் கரைசல் 1 டேபிள் ஸ்பூன்

2. பொடித்த வெல்லம் 1½ டேபிள் ஸ்பூன்

3. சிவப்பு மிளகாய் தூள் ஒரு சிட்டிகை அளவு

4. சீரக தூள் ¼ டீஸ்பூன்

5. உப்பு தூள் ஒரு சிட்டிகை அளவு

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சிறு தீயில் கொதிக்கவிடவும். கொதிக்கவைத்த கரைசல் நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் கீழே இறக்கிவைத்து ஆறவிடவும்.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
பருப்பு குழம்பு - Bhel Puri Recipe

பேல் பூரி செய்முறை:

நறுக்கி வைத்த வாழைத்தண்டு துண்டுகளை நார் நீக்கி, நீர்ச்சத்து இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். பின்பு அதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், அரிசிப் பொரி, வறுத்த வேர்க்கடலை பருப்பு, உருளைக் கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பின், தேவையான அளவு இனிப்பு-புளிப்பு சட்னி மற்றும் கிரீன் சட்னி சேர்க்கவும்.

அதன் பின் உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து, ஒரு கரண்டியால் மிருதுவாக அதேசமயம் வேகமாக கலந்துவிடவும். கடைசியாக சேவ் சேர்த்து மேலும் கீழுமாக குலுக்கவும்.

பேல் பூரி தயாரானதும் உடனடியாக பரிமாறவும். ஃபிரஷ் பேல் பூரி மட்டுமே கிரஞ்சினஸ் கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் தாமதித்து சாப்பிடுவோமானால் 'சொத சொத' ன்றாகி டேஸ்ட் இல்லாமலும் சாப்பிடவே பிடிக்காமலும் போய்விடும்.

பருப்பு குழம்பு - Bhel Puri Recipe
பருப்பு குழம்பு - Bhel Puri Recipe

காய்கறி இல்லாமல் அரைத்துவிட்ட பருப்பு குழம்பு ரெசிபி:

தேவையான பொருட்கள்:

1. துவரம் பருப்பு 1 கப்

2. துருவிய தேங்காய் பூ ¾ கப்

3. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

4. உரித்த பூண்டுப் பல் 12

5. காய்ந்த சிவப்பு மிளகாய் 10

6. கறிவேப்பிலை 2 இணுக்கு

7. மிளகு ¾ டீஸ்பூன்

8. சீரகம் ½ டீஸ்பூன்

9. தனியா 1½ டீஸ்பூன்

10. புளி சிறிய எலுமிச்சம் பழம் அளவு

11. கடுகு 1 டீஸ்பூன்

12. உரித்த சின்ன வெங்காயம் 12

13. உப்பு தேவையான அளவு

14. தண்ணீர் 4 டம்ளர்

15. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து, கரைத்து வடி கட்டி வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பை கழுவி ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் எட்டு மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் ஊறிய பொருட்களை மிக்ஸியில் போடவும். அதனுடன் பூண்டுப் பற்கள், தேங்காய் பூ, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முற்றிலும் மசியாமல், கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, இரண்டு சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல்: வீடே மணக்கும் ரகசிய மசாலா செய்முறை!
பருப்பு குழம்பு - Bhel Puri Recipe

அதில் அரைத்து வைத்த விழுது, புளி கரைசல், உப்பு மற்றும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரண்டியால் நன்கு கலந்துவிட்டு கொதிக்க விடவும். துவரம் பருப்பு கெட்டியாகி அடியில் தங்கி தீய்ந்து விடாமலிருக்க, மிதமான தீயில் வைத்து, அடிக்கடி கிளறிவிட்டு, பச்சை வாசனை போனதும் இறக்கி விடவும். இதை சுடு சாதத்தில் அல்லது ராகி களியுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட செம டேஸ்டா இருக்கும்.

வாழைத்தண்டு பேல் பூரி மற்றும் காய்கறி இல்லாத அரைத்துவிட்ட பருப்பு குழம்பு மிக எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
சுண்டைக்காய் கசப்பே தெரியாமல் பாட்டி ஸ்டைல் வத்தல் குழம்பு செய்யும் ரகசியம்!
பருப்பு குழம்பு - Bhel Puri Recipe
logo
Kalki Online
kalkionline.com