சத்தான வாழைக்காய் டிக்கி… ஈஸியா செய்யலாம்!

Vazhakkai Tikki
Vazhakkai Tikki
Published on

நம்ம ஊர் சமையல்ல வாழைக்காய்க்கு ஒரு தனி இடம் உண்டு. பொரியல், கூட்டுனு விதவிதமா செய்வோம். ஆனா வாழைக்காய வச்சு ஒரு சூப்பரான, சத்தான ஸ்நாக்ஸ் செய்யலாம். அதுதான் வாழைக்காய் டிக்கி. உருளைக்கிழங்கு டிக்கி மாதிரி இதுவும் வெளிய மொறு மொறுன்னு உள்ள சாஃப்டா, காரசாரமா ரொம்ப நல்லா இருக்கும். ஈவினிங் டீ கூட சாப்பிட அருமையா இருக்கும். வாங்க, இந்த ஹெல்தியான வாழைக்காய் டிக்கி எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பச்சை வாழைக்காய் - 2

  • உருளைக்கிழங்கு - 1

  • வெங்காயம் - 1

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 1 

  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

  • மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

  • மல்லித்தூள் - அரை டீஸ்பூன்

  • கரம் மசாலா - கால் டீஸ்பூன்

  • சாட் மசாலா - கால் டீஸ்பூன்

  • பிரெட் தூள்/பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்

  • கொத்தமல்லி இலை - கொஞ்சம்

  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை முதல்ல நல்லா கழுவி, தோலோடவோ இல்ல தோலை உரிச்சிட்டோ குக்கர்ல போட்டு தேவையான அளவு தண்ணி, கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு ரெண்டு விசில் வர வரைக்கும் வேக வச்சுக்கோங்க. 

ரொம்ப குழைஞ்சுடக்கூடாது. வெந்ததும் ஆற வச்சு, தோலை உரிச்சு நல்லா மசிச்சுக்கோங்க. உருளைக்கிழங்கையும் வேக வச்சு மசிச்சு வாழைக்காயோட சேர்த்துக்கோங்க.

இப்போ ஒரு சின்ன கடாயில கொஞ்சமா எண்ணெய் ஊத்தி சூடானதும் பொடியா நறுக்கின வெங்காயத்த போட்டு கண்ணாடி பதம் வர்ற வரைக்கும் வதக்குங்க. வெங்காயம் வதங்கினதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் வதக்குங்க.

அடுத்ததா மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, ஆம்சூர் பவுடர் சேர்த்து அடுப்பை சிம்ல வச்சு ஒரு நிமிஷம் வதக்குங்க.

இந்த வதக்கின மசாலாவ மசிச்சு வச்ச வாழைக்காய் உருளைக்கிழங்கு கலவையில சேருங்க. கூடவே பிரெட் தூள் இல்லனா பொட்டுக்கடலை மாவு, தேவையான அளவு உப்பு, நறுக்கின கொத்தமல்லி இலை சேர்த்து எல்லாத்தையும் நல்லா பிசைஞ்சுக்கோங்க. மாவு கட்லெட் இல்லனா டிக்கி தட்டற பதத்துக்கு கெட்டியா இருக்கணும். தேவைப்பட்டா இன்னும் கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்துக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நாவூர வைக்கும் நெல்லிக்காய் சாதம் - பருப்பு உருண்டை குழம்பு ரெசிபிஸ்!
Vazhakkai Tikki

இப்போ இந்த கலவையில இருந்து சின்ன சின்ன உருண்டைகளா எடுத்து, உள்ளங்கையில வச்சு தட்டி டிக்கி ஷேப்ல செஞ்சுக்கோங்க.

அடுப்புல ஒரு தோசைக்கல் இல்லனா பேன வச்சு எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. எண்ணெய் சூடானதும் செஞ்சு வச்ச டிக்கிஸ போட்டு மிதமான தீயில ரெண்டு பக்கமும் பொன்னிறமா, மொறு மொறுப்பா ஆகுற வரைக்கும் பொரிச்சு எடுங்க. சத்தான, டேஸ்ட்டான வாழைக்காய் டிக்கி ரெடி.

இத டொமேட்டோ சாஸ், புதினா சட்னி கூட வச்சு சாப்பிட செம டேஸ்டா இருக்கும். வாழைக்காய் பிடிக்காதவங்க கூட இந்த டிக்கிய விரும்பி சாப்பிடுவாங்க. இன்னைக்கே முயற்சி செஞ்சு பார்த்து உங்களுடைய கருத்துக்களை எங்க கூட பகிர்ந்துக்கோங்க.

இதையும் படியுங்கள்:
புதினா, கொத்தமல்லி இலைகளை வாட விடாமல் காக்க சில எளிய வழிகள்!
Vazhakkai Tikki

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com