'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' - வைட்டமின் டி மாத்திரைகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

vitamin d supplements
vitamin d supplements
Updated on

றக்குறைய எல்லா வயதினருமே எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு சப்ளிமென்ட்டாக இந்த வைட்டமின் டி ஆகிவிட்டது. உடலின் எலும்புகளை வலுப்படுத்து வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், மனநிலையை மேம்படுத்துவதற்கும், மற்றும் அழற்சியைக் குறைப்பதற்கும் இந்த வைட்டமின் டி மிகவும் இன்றியமையாததாக திகழ்கிறது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே இந்த வைட்டமின் டி அளவு கணிசமாகக் குறைந்து வருவதை புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்த வைட்டமின் குறைபாடு குறிப்பாக தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை வீட்டிற்குள் செலவிடும் மக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.

பருவ வயதினரிடமும் இந்த குறைபாடு அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வாறு குறைபாடு இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் அதற்கான சப்ளிமென்ட்டை பரிந்துரைப்பது வழக்கம். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளாமல் தானாகவே அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல.

அதிகப்படியான வைட்டமின் டி  உங்களுக்கு வேறு விதமான பிரச்சனைகளையும் உண்டாக்கும். இந்த வைடடமின் டி யானது மற்ற வைட்டமின்களை போல் கிடையாது. ஏறவும் கூடாது, இறங்கவும் கூடாது. விளக்கமாக பாரக்கலாம்..

பொதுவாக, போதுமான அளவு வைட்டமின் சி கிடைத்தவுடன் நம்முடைய உடல் அவற்றை எளிதாக வெளியேற்றிவிடும். ஆனால் இந்த வைட்டமின் டி ஆனது கொழுப்பில் கரையக்கூடியது. அதாவது, அது எளிதில் வெளியேறாமல் நம்முடைய உடலின் திசுக்களில் குவிந்து, காலப்போக்கில் அபாயகரமான அளவை எட்டிவிடும். வைட்டமின் டி உள்ள உணவுகளில் குறைந்த அளவிலேயே அது இருப்பதால், உங்கள் உணவில் இருந்து அதிகப்படியான அளவைப் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

மேலும், சூரிய ஒளியிலிருந்து உங்கள் சருமம் உற்பத்தி செய்யும் வைட்டமின் டி-யும் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதில்லை. இந்தப் பிரச்னை பெரும்பாலும் நாம் எடுத்து கொள்கிற சப்ளிமென்ட் மாத்திரைகளை  அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும்போதுதான் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் 'பாசிப்பருப்பு உருண்டை': இளமையைத் தக்கவைக்கும் அற்புத உணவு!
vitamin d supplements

பெரும்பாலான பெரியவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் தினசரி உட்கொள்ளும் அளவானது  600 முதல் 800 IU வரை இருக்கும். மேலும் ஆரோக்கியமான நபர்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 4,000 IU  வரை பரிந்துரைக்கப் படுகிறது. இருப்பினும், மருந்துச்சீட்டு இல்லாமல் கடைகளில் விற்கப்படும் பல துணை மாத்திரைகள் 5,000 அல்லது 10,000 IU அளவுகளில் வருகின்றன. ஆகவே, ஒரு சிலர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரே நேரத்தில் அதிக அளவை  எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே உள்ளுறுப்புகள் மெது மெதுவாக சீரழியத் தொடங்கிவிடும். அதன் விளைவை முழுமையாக பாதித்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும்.

 அதிகப்படியான வைட்டமின் டி, இரத்தத்தில் கால்சியத்தின் அளவை இயல்புக்கு மாறாக உயர்த்துகிறது. இந்த நிலை ஹைபர்கால்சீமியா என்று அழைக்கப்படுகிறது. இது காலப்போக்கில் சிறுநீரகங்கள், மென்மையான திசுக்கள் மற்றும் எலும்புகளைக் கடுமையாகச் சேதப்படுத்தும். வைட்டமின் டி உடலிலுள்ள கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.  அது அதிகமாகும்போது, ​​உங்கள் இரத்த ஓட்டத்தில் உடலால் கையாள முடியாத அளவுக்கு கால்சியம் நிரம்பி வழியலாம்.

இதனால் வயிற்றுக் கோளாறு, பசியின்மை மற்றும் சாப்பிட்ட பிறகு குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். தொடர்ந்து தாகமாக உணர்வதும், வழக்கத்தைவிட அதிகமாக சிறுநீர் கழிப்பதும் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில், உடல் சிறுநீரகங்கள் வழியாக அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்ற முயற்சிக்கிறது. இதைத் தொடர்ந்து அசாதாரணமான சோர்வு, தசை பலவீனம் மற்றும் காரணமின்றி உடல் எடை குறைதல் போன்றவைகளும் ஏற்படலாம்.

சில நேரங்களில் கோமா நிலைக்கும் தள்ளப்படலாம் மேலும் சிறுநீரகப் பாதிப்பை கவனிக்கப்படாமல் விட்டால், அது நிரந்தரமாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
எள்ளில் மறைந்திருக்கும் சக்தி! அப்படி என்ன இருக்கு இந்த தம்மாத்தூண்டு பொருளுல?
vitamin d supplements

ஆகவே, சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் அதற்கான பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஒரு எளிய இரத்தப் பரிசோதனை உங்கள் உடலில் வைட்டமின் டி அளவு எந்த நிலையில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கூறிவிடும். நீங்கள் ஏற்கனவே சப்ளிமென்ட் எடுத்துக் கொண்டிருந்தால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு பொருளையும் சரிபார்க்கவும்.

பல கூட்டு வைட்டமின் சப்ளிமென்ட்களில் வைட்டமின் டி உள்ளது, எனவே நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக அதன் அளவு கூடிவிடும். வைட்டமின் டி உண்மையிலேயே முக்கியமானது. ஆனால் அதே சமயம் உங்கள் உடலுக்குத் தேவையான சரியான அளவைதான் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com