கல்யாண வீட்டு மணத்தில் அன்னாசி, மாம்பழ கேசரி செய்வது எப்படி?

நாவில் கரையும் பக்குவத்தில் மூன்று சுவையான பழ கேசரி வகைகள்.
கேசரி
கேசரிGemini image
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

1. அன்னாசி கேசரி

தேவையான பொருட்கள்:

ரவை- 1 கப்

நெய் - கால் கப்

அன்னாசி நறுக்கியது - அரை கப்

பால் - 1/2 கப்

சர்க்கரை - 3 / 4 கப்

தண்ணீர் - 2 1/2 கப்

ஏலத்தூள் - 1 டீஸ்பூன்

முந்திரி - 10

திராட்சை - 10

செய்முறை:

மிக்ஸியில் அன்னாசி துண்டுகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். அடி கனமான வாணலியில் தண்ணீர், பால், அன்னாசி விழுது சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.

ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் ஒரு கப் ரவா சேர்த்து நன்கு வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.

அந்த வறுத்த ரவையில் கொதித்த நீர், பால், அன்னாசி விழுது சேர்த்த நீரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் தொடர்ந்து கிளறவும்.

வெந்ததும் மிதமான தீயில் சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் மீதி நெய் சேர்த்து வறுத்த முந்திரி கலந்து கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக்கவும். சுவையான அன்னாசி பழ கேசரி தயார்.

2. ஆப்பிள் கேசரி

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1

சேமியா - 1/2 கப்

ரவை - 1/2 கப்

நெய் -5 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

முந்திரி -10

திராட்சை -10

தண்ணீர் -3 டம்ளர்

ஃபுட் கலர் ஆரஞ்சு - சிறிது

ஏலத்தூள்-கால் டீஸ்பூன்

செய்முறை:

ஆப்பிளை தோலை சீவி கேரட் துருவியில் துருவி வைக்கவும். ஒரு நான் ஸ்டிக் பேனில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து துருவிய ஆப்பிளை இரண்டு நிமிடம் வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி 9 நாளுக்கும் 9 வகை சுண்டல்: நாவில் கரையும் கறிப் பொடி ரகசியம்!
கேசரி

பின்பு அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் ஏலத்தூள், புட்கலர் சேர்த்து கொதித்தவுடன் வறுத்த சேமியா, ரவையை கலந்து வேகவிடவும். வெந்தவுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறவும்.

நன்கு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் மீதி நெய் சேர்த்து வெந்தவுடன் வறுத்த, முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி பரிமாறவும். சுவையான ஆப்பிள் கேசரி தயார்.

3. மாம்பழ கேசரி

தேவையான பொருட்கள்:

பம்பாய் ரவை - அரைக்கப்

கல்கண்டு பொடி - முக்கால் கப்

மாம்பழம் -அரை கப்

முந்திரி பருப்பு -10

தண்ணீர் - ஒன்றரை கப்

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

ஏலத்தூள்- கால் டீஸ்பூன்

கேசரி
கேசரிGemini image

செய்முறை:

ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி பருப்பு வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் பம்பாய் ரவையை போட்டு வறுக்கவும்.

அதனுடன் மாம்பழக்கூழ் விட்டு கிளறவும். அதில் தேவையான கொதித்த தண்ணீர் விட்டு வேகவிடவும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு வெள்ளை பட்டாணி குருமா சுவை வீட்டிலும் வருமா? இதோ ரகசியம்!
கேசரி

வெந்ததும் கல்கண்டு பொடி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும். கெட்டியானவுடன் ஏலத்தூள், மீதிநெய் விட்டு கிளறி நெய் தடவிய தட்டில் ஊற்றவும். அதில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து பரிமாறவும். சுவையான மாம்பழக் கேசரி தயார்.

பாரம்பரிய விழாக்களின் உண்மையான, நெய் மணக்கும் நாவில் கரையும் சுவையை உங்கள் வீட்டுச் சமையலறையிலேயே மீண்டும் கொண்டு வாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com