எந்த பரபரப்பான வாழ்க்கை முறைக்கும் பொருந்தக்கூடிய 8 ஒழுக்க பழக்க வழக்கங்கள்!

Moral habits
Moral habits
Published on

ம்மில் பல பேர் விரும்பும் அனைத்தையும் சாதிக்க ஒரு நாளில் போதுமான நேரம் கிடைப்பது இல்லை என்று எப்போதும் புலம்பி கொண்டிருப்பார்கள். உங்களுக்கு குடும்ப வேலை, அலுவலக வேலைக்கான காலக்கெடு, குழந்தைகளுக்கான நேரம் மற்றும் எதிர்பாராத சில தவிர்க்க முடியாத வேலை என இத்தனை வேலைகளுக்கு மத்தியில் ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்க வழக்கங்களுக்கு என நேரத்தை ஒதுக்குவது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். இதற்கு தீர்வு, உங்கள் அட்டவணையை முழுமையாக மாற்றாமல், சுய ஒழுக்கத்தை மட்டும் மாற்றி வளர்த்துக்கொள்ள முயற்சித்தாலே போதுமானது.

சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க நிறைய நேரத்தை அர்ப்பணிக்கவோ அல்லது வழக்கமான வாழ்க்கை முறையை மாற்றவோ அவசியமில்லை. ஒருசில சிறிய நிலையான மாற்றங்களை நம் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டாலே போதும். கீழ்க்காணும் எட்டு எளிய பழக்கங்கள் மிகவும் பரபரப்பான அட்டவணைகளில் கூட எல்லோருக்கும் பொருந்தக்கூடும். இவை சிறந்த ஆரோக்கியம் மற்றும் அதிகரித்த மகிழ்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன.

1. ஐந்து நிமிட காலை நோக்க அமைப்பு: உங்கள் நோக்கங்களை அமைக்க தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் ஒதுக்குவது உங்கள் நாளையே மாற்றும். இது நீண்ட தியானம் அல்லது நாட்குறிப்பை எழுதுவதைப் பற்றியோ அல்ல. இன்று உண்மையிலேயே என்ன முக்கியம், எதை முதலில் முடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக ஒதுக்கப்படும் நேரம். காலையில் எழுந்தவுடன் கைபேசியையோ அல்லது வேறு ஏதாவது விஷயத்தை பார்ப்பதற்கு / கேட்பதற்கு முன்னால் 5 நிமிடம் நேரத்தை ஒதுக்கி உங்களது நோக்கத்தை அமைக்கவும். மிகவும் ஒழுக்கமான மக்கள் தங்கள் பரபரப்பான நாட்களில் கூட, இந்த சிறிய இடத்தை தங்களுக்காக உருவாக்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நீண்ட தொலைவு கார் பயணத்தின்போது உடன் எடுத்துச் செல்லக்கூடாத 10 பொருட்கள்!
Moral habits

2. நுண்ணிய உடற்பயிற்சி இடைவெளிகள்: ஜிம்மில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்காக நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை. நாள் முழுவதும் 5 முதல் 10 நிமிடங்கள் மைக்ரோ - உடற்பயிற்சி இடைவெளிகள் உங்கள் உடல் நலம், ஆற்றல் மற்றும் கவனத்தை வியத்தகு முறையில் மேம்படுத்தும். இந்த குறுகிய இயக்க இடைவெளிகள் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தடுக்கின்றன. அதேநேரத்தில் உங்கள் மூளைக்கு மதிப்புமிக்க மீட்பு நேரத்தை வழங்குகின்றன. வேலைகளுக்கு இடையில் அவ்வப்போது எழுந்து சிறிது நடைப்பயிற்சி செய்யவும். மதிய உணவுக்குப் பிறகும் சிறிது நடக்கவும். 10 நிமிட மதிய உணவு நேர நடைப்பயிற்சி கூட உங்கள் மனநிலையையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும். தினமும் இவ்வாறு செய்தாலே போதும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

3. தினமும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க முயற்சிக்கவும்: தினமும் சீரான ஒரே நேரத்தில் விழித்தெழுவதால் நேரத்தைப் பராமரிக்க எளிமையாக இருக்கும். இதுதான் மிகவும் சக்தி வாய்ந்த ஒழுக்கப் பழக்கமாகும். இது உங்களுடைய தூக்கத்தின் தரம், ஆற்றல் நிலைகள் மற்றும் மனத் தெளிவை மேம்படுத்துகிறது. வார இறுதி நாட்களில் கூட இதை கடைபிடிக்க முயற்சிக்கவும். இந்த சிறந்த ஒற்றைப் பழக்கம், பசி, ஆற்றல் மற்றும் விழிப்புணர்வு முறைகளை ஒழுங்குபடுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
தொழில்நுட்ப உலகில் டிரெண்டாகும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் - மாணவர்களே இது உங்களுக்கு!
Moral habits

4. ஒரு நிமிட மன அமைதி: மன அமைதிக்கு மணிக்கணக்கில் தியானம் தேவையில்லை. சுவாசிப்பதில் கவனம் செலுத்தி, உங்கள் தற்போதைய தருணத்தைப் பற்றி அறிந்துகொள்ள வெறும் 60 வினாடிகள் எடுத்துக்கொண்டாலே போதும். லிஃப்டுக்காகக் காத்திருக்கும்போதோ அல்லது வீட்டிற்குள் நுழைவதற்கு முன்போ அல்லது காரில் அமர்ந்திருக்கும்போதோ மூன்று முறை ஆழ்ந்த மூச்சை எடுக்க முயற்சிக்கவும். இந்த சுருக்கமான நினைவாற்றல் பயிற்சி தன்னியக்க முறையில் செயல்படுவதற்குப் பதிலாக மன அழுத்த முறைகளை குறுக்கிட்டு உங்கள் செயல்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றன. காலப்போக்கில் இந்த விழிப்புணர்வு அதிக சுய ஒழுக்கத்திற்கான அடித்தளமாகிறது.

5. புதிய பழக்கத்தை பழைய பழக்கத்தோடு இணைக்கவும்: உங்களுடைய பரபரப்பான அட்டவணையில் கூடுதல் நேரத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள பழக்கங்களுடன் புதிய பழக்கங்களை இணைக்கவும். உதாரணத்திற்கு, மாலையில் 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால், ஒரு மாற்றத்திற்கு 10 நிமிடம் நடைப்பயிற்சியும் 5 நிமிடத்திற்கு ஜாகிங் பயிற்சியையும் செய்யலாம். இந்த முறையானது தனக்குத்தானே புதிய புதிய முயற்சிகளை கிடைத்த நேரத்தில் கையாள உதவும்.

6. சுற்றுச்சூழல் வடிவமைப்பு: ஒழுக்கத்தின் மிகவும் கவனிக்கப்படாத அம்சங்களில் ஒன்று சுற்றுச்சூழல் வடிவமைப்பு. நல்ல தேர்வுகளைச் செய்வதற்கும் குறைந்தபட்ச எதிர்ப்பின் பாதையைப் பின்பற்றுவதற்கும் சுற்றுச்சுழல் மிக முக்கியமான ஒன்றாகும். வேலை செய்யும்போது உங்கள் தொலைபேசியை வேறொரு அறையில் வைக்கவும். உங்கள் குளிர்சாதன பெட்டியில் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் வைக்கவும். உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருளை அடிக்கடி வைத்தால் நமக்கு எடுத்து சாப்பிடத் தோன்றும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு 10 நிமிடத்திற்கு நேரத்தை ஒதுக்கி உங்கள் சூழலை வரவிருக்கும் வாரத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்துங்கள். உங்கள் சுற்றுப்புறம் உங்கள் இலக்குகளை நாசமாக்குவதற்குப் பதிலாக ஆதரிக்க உதவுமாறு இருந்தால்தான் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

7. இரண்டு நிமிட விதி: ஏதாவது ஒரு காரியத்தை முடிக்க இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே நேரம் எடுக்கும் என்றால், அத்தகைய காரியத்தை தள்ளிப்போடுவதற்கு பதிலாக உடனடியாகச் செய்யுங்கள். இந்த எளிய விதியின் மூலமாக மிகப்பெரிய நிலுவையில் பணிகள் குவிவதைத் தடுக்கலாம். ஒரு மின்னஞ்சலுக்கு பதிலளிப்பது, உங்கள் காபி குவளையைக் கழுவுவது அல்லது ஒரு ஆவணத்தை இப்போது தாக்கல் செய்வது என ஏதாவது சிறிய காரியத்தை உடனே செய்வதால், பின்னர் ஏற்படும் அதிகமான பணிச் சுமையிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நமது நிரந்தரமான வாழ்க்கைத் துணை யார் தெரியுமா?
Moral habits

இரண்டு நிமிட விதி சிறிய வெற்றிகள் மூலம் ஒழுக்கத்தையும் உருவாக்குகிறது. நீங்கள் முடிக்கும் ஒவ்வொரு சிறிய பணியும், அதைச் செய்பவர் என்ற உங்கள் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. காலப்போக்கில், இந்தப் பழக்கம் உத்வேகத்தை உருவாக்குகிறது. இதனால் பெரிய திட்டங்களைக் கூட மிகவும் எளிதாக சமாளிக்கலாம்.

8. உறங்குவதற்கு முன்னால் அன்றைய தினத்தில் நடந்தை சிந்தித்தல்: படுக்கைக்குச் செல்வதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள், உங்கள் ஒழுக்கம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அன்றைய தினம் பெற்ற வெற்றிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இந்த எளிய பயிற்சி உங்கள் முயற்சிகளை அங்கீகரிப்பதன் மூலம் நேர்மறையான நடத்தைகளை வலுப்படுத்துகிறது. நமது மூளை அங்கீகாரத்திற்கு சக்தி வாய்ந்த முறையில் பதிலளிக்கிறது. ஒரு நடத்தைக்கு வெகுமதி அளிக்கப்படும்போது அது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

எளிதாக செயல்படுத்த இந்த சிந்தனையை உங்கள் தற்போதைய படுக்கை நேர வழக்கத்துடன் இணைக்கவும். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், ‘இன்று என்ன நன்றாக நடந்தது? மற்றும் நாளை நான் மேம்படுத்தக்கூடிய ஒரு விஷயம் என்ன?’ இது ஒழுக்கத்திற்கான நேர்மறையான பின்னூட்ட வளையத்தை உருவாக்குகிறது. அதே நேரத்தில் அன்றைய தினம் உங்கள் மூளைக்கு மூடுதலை அளிக்கிறது. காலப்போக்கில், இந்த சிறிய பழக்கம் சுய விழிப்புணர்வையும் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் உருவாக்குகிறது.

இந்த எட்டு ஒழுக்கமான பழக்கத்தை தினமும் கடைபிடிக்கும்போது உங்களால் உங்கள் இலக்கை அடைய எளிதாக இருக்கும். மேலும், நீங்கள் விரும்பிய எல்லா காரியங்களையும் தினமும் செவ்வென செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com