

கல்யாணம் என்பது ஒருவரின் வாழ்வில் மிகவும் முக்கியமான விஷயம். வாழ்நாள் முழுவதும் இருக்கும் உறவின் துவக்கம்.
இரு மனம் சேர்ந்து ஓர் உயிராக வாழும் பந்தத்தை ஏற்படுத்துவது கல்யாணம் தான். ஆம்!
கல்யாணம் என்றால் எது சிறப்பு? காதல் கல்யாணாமா..? நிச்சயம் செய்யப்பட்ட கல்யாணமா…? இது மில்லியன் டாலர் கேள்வி.
எடுத்த எடுப்பிலேயே முடிவு செய்ய முடியாது. பெரியோர்களால் நன்கு விசாரித்து செய்யப்படுவது நிச்சய கல்யாணம். இதில் தவறு ஒன்றும் இல்லை. அடுத்து இருவரும் மனம் விட்டு பேசி விருப்ப பட்டு கல்யாணம் செய்து கொள்வது காதல் கல்யாணம்.
இங்கு ஒன்று சொல்லியே ஆக வேண்டும். நிச்சயம் செய்யப்பட்ட கல்யாணத்தில் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம் இல்லை. ஆனால், காதல் கல்யாணம் அப்படி இல்லை. நன்கு பேசி… ஒருவரையொருவர் மனமார விரும்பி காதல் செய்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
தெரியாத ஒருவரை விட நன்கு தெரிந்த நபரை கல்யாணம் செய்து கொள்வது தானே சிறப்பு…?
ஆம்! எப்படி பார்த்தாலும் காதல் கல்யாணம் மிகவும் சிறந்ததே…!
இங்கு சிலர் காதல் கல்யாணம் தோல்வியில் முடிவதில்லையா…? எனக் கேட்கின்றனர்.
இப்போதெல்லாம் நிச்சயம் செய்த கல்யாணம் தான் அதிக விவாகரத்து என்று செல்கிறது என்பது மறுப்பதற்கில்லை. விவாகரத்து செய்ய முடியாமலும் நொந்து நூலாகி விருப்பம் இன்றி மணவாழ்க்கை வாழ்பவர்கள் அதிகம்.
காதல் கல்யாணம் பெரும்பாலும் தோல்வி அடைவதில்லை. ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்து இருப்பதால் விட்டு கொடுத்து வாழ்கின்றனர்.
தம் காதல் மூலம் இன்பமாக வாழ்கிறார்கள். இதை விட என்ன வேண்டும்… ?
நான் காதல் கல்யாணம் தோல்வியே அடைவது இல்லை என்று சொல்லவில்லை. எண்ணிக்கை பார்த்தால் காதல் கல்யாணம் செய்பவர்கள் விவாகரத்து வாங்க செல்வதுகுறைவு. இது தான் யதார்த்தம்.
காதல் தமிழருக்கு புதியது இல்லை. சங்க காலம் முதலே காதல் கல்யாணம் இருந்தது. முருகன் செய்த கந்தர்வ கல்யாணம் காதல் கல்யாணமே…! திருக்குறளில் காமத்து பால் முழுக்க முழுக்க காதலை மையமாக உள்ளது.
நமது இதிகாசம் மற்றும் புராணங்களில் காதல் கல்யாணம் சிறந்த இடம் பெறுகிறது. சிலம்பில் காதல் சுவை அதிகம்.
கம்பர் ராமர் சீதா காதல்… அதாவது “கண்ட உடன் காதல்“ என்று சொல்லுகிறார். ஆம்! “அண்ணலும் நோக்கிணான்.. அவளும் நோக்கினாள்..“ என்று காதலை தூக்கி பிடிக்கிறார்.
மேலும் காதல் கல்யாணம் சாதி மற்றும் மத பேதங்களை அழிக்கிறது. இது மிகவும் சிறப்பான விஷயம் அல்லவா? அது மட்டுமல்ல. பெண்ணடிமை தனத்தையும் ஒழிக்கிறது. வரதட்சிணை கொடுமை இல்லை.
ஸ்ரீ கிருஷ்ணர் காதல் மன்னன். பாமா ருக்மணி மற்றும் பிற கோபியர்களுடன் காதல் விள்ளையாட்டு விளையாடுவதை வியாசர் ஸ்ரீ மத் பாகவதம் நூலில் காதல் சுவை நிரம்ப எழுதினார்.
ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். காதல் இல்லாமல் சினிமா கூட வருவதில்லை. காதல் நமது ரத்தத்தில் உள்ளது.
எனவே…
இளைஞர்களே… !
நன்கு காதலியுங்கள்..!
கல்யாணம் செய்யுங்கள்..!
காதலுக்கு ஜே!