ஃப்ரெஷ் காய்கறிகளா? மோசடியா? - காய்கறி சந்தையில் நடக்கும் 10 தந்திரங்கள்!

ஒரு சில காய்கறி வியாபாரிகள் தங்கள் லாபத்தை அதிகரிக்கவும், நஷ்டத்தைத் தவிர்க்கவும் சில தந்திரங்களையும் உண்மைகளையும் வாடிக்கையாளர்களிடம் மறைப்பது வழக்கம்.
தரமான காய்கறி -vegetable-shopping-guide
தரமான காய்கறி - vegetable-shopping-guideAI image
Updated on

மைத்த உணவு சுவையாக இருக்கவேண்டும் என்றால், வாங்கும் காய்கறிகள் நல்லதாக இருக்கவேண்டும். சிலருக்கு காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பது பிடிபடுவதில்லை. நமது அறியாமையை தெரிந்த கொள்ளும் ஒரு சில காய்கறி வியாபாரிகள் தங்கள் லாபத்தை அதிகரிக்கவும், நஷ்டத்தைத் தவிர்க்கவும் சில தந்திரங்களையும் உண்மைகளையும் வாடிக்கையாளர்களிடம் மறைப்பது வழக்கம். உங்களை ஏமாற்ற கடைக்காரர்கள் சொல்லாமம் மறைக்கும் 10 ரகசியங்கள் இதோ:

* வாடிய காய்கறிகள் மீது அடிக்கடி தண்ணீர் தெளித்து, அவற்றை அப்போது தான் பறித்தது (தரமான காய்கறி) போல வாடிக்கையாளர்களிடம் ஃபிரெஷாகக் (Fresh)காட்ட முயற்சிப்பார்கள். இதனால் அடிக்கடி காய்கறிகள் மீது தண்ணீர் தெளிப்பார்கள். இதனால் காய்கறிகளின் எடை கூடும்; நீங்கள் தண்ணீருக்கும் சேர்த்து காசு கொடுக்கிறீர்கள்.

* ஒரு சில வியாபாரிகள் காய்கறிகள் பளபளப்பாகவும், சீக்கிரம் கெட்டுப்போகாமலும் இருக்கவேண்டும் என்பதற்காக காய்கறிகள் மீது ரசாயனக் கலவை மற்றும் மெழுகு (Wax) பூசுவார்கள். குறிப்பாக கடைகளில் விற்கப்படும் கத்திரிக்காய், ஆப்பிள் மற்றும் தக்காளி போன்ற காய்கறி, பழங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்காக அவற்றின் மீது மெழுகு (Wax) அல்லது சில ரசாயனங்கள் பூசப்படுகின்றன. இயற்கையான காய்கறிகள் இவ்வளவு பளபளப்பாக இருக்காது. இதனால் மக்கள் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை பற்றி கவலைப்படுவதில்லை.

* தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றை அடுக்கம்போது, நல்ல பகுதியை மேலே காட்டி, அழுகிய அல்லது ஓட்டை விழுந்த பகுதியை நைஸாக அடியில் மறைத்து வைப்பார்கள். நல்ல புதிய காய்கறிகளை அடியில் மறைத்து வைத்திருப்பார்கள். ஏனெனில் வாடிக்கையாளர்களின் பார்வையில் முதலில் படுவதால் இவை சீக்கிரம் விற்றுவிடும்.

அழுகிய காய்கறிகள் அடியில் இருந்தால் எடை தாங்காமல் நசுங்கி, மற்ற நல்ல காய்கறிகளையும் சேர்த்து அழுகச் செய்துவிடும். இவை விற்காமல் போனால் வியாபாரிகளுக்கு முழு நஷ்டம் ஏற்படும். எனவே வாடிக்கையாளர்கள் கூடையின் மேல் இருக்கும் காய்கறிகளை மட்டுமே பார்த்து ஏமாறாமல், அடியில் இருக்கும் காய்கறிகளையும் சரிபார்த்து வாங்குவது நல்லது.

* ரசாயனம் (கார்பைடு) மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை "இயற்கையாக பழுத்தது" என்று பொய் கூறுவது. சீசனில் இல்லாத மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை 'கார்பைட்' கல் அல்லது கெமிக்கல் மூலம் பழுக்க வைப்பார்கள். இவை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சுவையும், சத்தும் இருக்காது.

மேலும் கார்பைடில் உள்ள ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் உடலுக்குள் சென்றால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். மாம்பழத்தை தண்ணீரில் போடும்போது, அது மிதந்தால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கினால் அது இயற்கையாக பழுத்தது. அதுமட்டுமின்றி ஒரு வியாபாரிகள் வாடிக்கை யாளர்களை ஏமாற்ற கடைகளில் பிரகாசமான மஞ்சள் அல்லது சிவப்பு நிற விளக்குகளைப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்வதால் வாடிய காய்கறிகளும், பழங்களும் புதுசு போல் பளபளப்பாகவும், நல்ல நிறமாகவும் தெரியும்.

* கீரைக் கட்டுகளின் நடுவே புற்களை வைப்பது, நல்ல காய்கறிகளுடன் பழைய வாடிய காய்கறிகளைக் கலந்து விற்பது போன்ற மோசடிகளிலும் வியாபாரிகள் ஈடுபடுவதுண்டு.

கீரையில் தண்ணீர் தெளிப்பது - தரமான காய்கறி
கீரையில் தண்ணீர் தெளிப்பது - தரமான காய்கறிAI Image

முந்தைய நாள் விற்காமல் மீதமான வாடிய காய்கறிகளை, புதிய காய்கறிகளுடன் கலந்து விற்பார்கள். தரமற்ற பொருட்களை நல்ல விலைக்கு விற்று நுகர்வோரை ஏமாற்றுகிறார்கள்.

* சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, அந்த விவரத்தைக் கூறாமல் பழைய அதிக விலைக்கே விற்பனை செய்வது. மார்க்கெட்டில் ஒரு பொருளின் விலை மிகக் குறைவாக இருக்கும்போது (அதாவது வரத்து அதிகமாக இருக்கும்போது) அதை வாங்கி, கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் லாபம் (Margin) வைத்து விற்கலாம். எனவே வாங்கும் பொருட்களுக்கு எப்போதும் அசல் பில் (Bill) கேளுங்கள். சந்தை நிலவரத்தை இணையம் அல்லது பிற கடைகள் மூலம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

* தராசின் கீழ் காந்தம் வைப்பது, எலக்ட்ரானிக் தராசில் எடையைக்கூட்டி வைப்பது அல்லது காய்கறிகளோடு சேர்த்து அதிக எடையுள்ள தடிமனான பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்துவது போன்ற வியாபாரிகள் செய்யும் மோசடிகள் நம் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும். இரும்புத்தட்டு கொண்ட தராசின் அடியில் காந்தத்தை வைக்கும்போது, அது தட்டை கீழ்நோக்கி இழுக்கும். இதனால் குறைவான பொருளை வைத்தாலும் எடை அதிகமாகக்காட்டும். டிஜிட்டல் தராசு எனில், அதன் ஆரம்ப எடையை (Zero) சரியாக வைக்காமல் ஏமாற்றலாம்.

இதையும் படியுங்கள்:
காய்கறி ஷாப்பிங்கில் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசிய ரகசியங்கள்!
தரமான காய்கறி -vegetable-shopping-guide

இந்த மோசடியை தடுக்க வாடிக்கையாளர்கள் பொருள் வைப்பதற்கு முன் திரை 0.00 காட்டுகிறதா என உறுதி செய்யவும். தராசின் தட்டைத் தூக்கினால் திரையில் மைனஸ் (-) குறியீட்டுடன் எடை காட்டினால், அங்கு 'Tare' தந்திரம் செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.

* சமைக்க எளிதாக இருக்கும் என விற்கப்படும் நறுக்கிய காய்கறிகள் (உதாரணமாக: பூசணிக்காய் துண்டுகள், கீரை) பெரும்பாலும் அழுகிய பகுதிகளை நீக்கிவிட்டு வெட்டப்பட்டவையாக இருக்கலாம். பாக்கெட்டுகளில் விற்கப்படும் நறுக்கிய காய்கறிகளில் (Pre-cut vegetables) இத்தகைய வணிக தந்திரங்கள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மொத்தமாக விற்க முடியாத, சற்று அழுகிய அல்லது நசுங்கிய காய்கறிகளின் நல்ல பகுதிகளை மட்டும் தனியாக வெட்டி பாக்கெட் செய்கிறார்கள். வெட்டப்பட்ட காய்கறிகளில் ஈரப்பதம் அதிகரிப்பதால் 'லிஸ்டீரியா' (Listeria), 'சால்மோனெல்லா' (Salmonella) போன்ற நச்சு பாக்டீரியாக்கள் எளிதில் பரவும்.

இதையும் படியுங்கள்:
15 நாளானாலும் காய்கறி அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்... இந்த 4 டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
தரமான காய்கறி -vegetable-shopping-guide

* வெண்டைக்காய், முருங்கைக்காய் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வைக்கும்போது வேர்வை நீர் தங்கி எடை அதிகரிக்கும். கவரில் தங்கும் இந்த வேர்வை நீர் காய்கறிகளை விரைவாக அழுகச் செய்யும். பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான்கள் உருவாக இது வழிவகுக்கும்.

* சாதாரண காய்கறிகளையே 'ஆர்கானிக்' (இயற்கை விவசாயம்) என்று கூறி அதிக விலைக்கு விற்க வாய்ப்பு உண்டு. முறையான சான்றிதழ் இல்லாமல் அதை நம்ப வேண்டாம். பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களில் இந்திய அரசின் 'Jaivik Bharat' (ஜெயவிக் பாரத்) அல்லது 'PGS-India' முத்திரை உள்ளதா என்று பாருங்கள்.

ஆர்கானிக் காய்கறிகள் அனைத்தும் ஒரே அளவில், பளபளப்பாக, கறை இல்லாமல் இருக்காது. அவை இயற்கையான வடிவிலும், சில குறைபாடுகளுடனும் (சிறு புள்ளிகள், வளைவுகள்) இருக்கும். மோசடியை தவிர்க்க சான்றிதழ் பெற்ற அங்கீகாரம் பெற்ற கடைகளில் மட்டும் வாங்குங்கள்.

- நீங்கள் அடுத்த முறை காய்கறி வாங்கச் செல்லும்போது இன்னும் விழிப்புடன் இருக்க, தெரிந்த, நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் உள்ளூர் கடைகளில் தொடர்ந்து வாங்குவது ஏமாறுவதைத் தவிர்க்கும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் காய்கறி வாங்கப்போறீங்களா? இந்த 5 காய்கறிகளில் பூச்சி இருக்கான்னு பார்த்து வாங்குங்க!
தரமான காய்கறி -vegetable-shopping-guide

வியாபாரிகள் மொத்தமாக அள்ளிக் கொடுப்பதை விட, நாமே ஒவ்வொன்றாக கைகளால் எடுத்துப் பார்த்து நல்ல காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. பளபளப்பான காய்கறிகளை விட, இயற்கையான நிறத்தில் உள்ளவற்றைத் தேர்வு செய்யவேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com