
குறிப்பிட்ட வயதானதும் பலருக்கும் தொப்பை போடுவது இயல்பு. இது பல்வேறு உடல் கஷ்டங்களைக் கொடுக்கும். தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வேலைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
1. வேகமான நடை: எந்தவொரு உடற்பயிற்சி சாதனங்களும் இல்லாமல், எங்கு வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு சிறந்த பயிற்சி வேகமான நடை. தினமும் அரை மணி நேரமாவது வேகமான நடை பழக. உடம்பில் இருக்கும் கொழுப்பை, குறிப்பாக தொப்பை கொழுப்பை கரைக்க உதவும். வேகமான நடை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் உதவும். வேகமான நடை வளர்சிதை மாற்றத்தை தூண்டி கலோரிகளை எரிக்க உதவும்.
2. எளிய வீட்டு வேலைகள்: தொப்பையை குறைக்க எளிய வீட்டு வேலைகள் மற்றும் பயிற்சிகளை செய்யலாம். சிறிய அளவில் காய்கறி தோட்டம் அமைப்பது, சூடான தண்ணீர் குடிப்பது, மாவு சத்துள்ள உணவுகளை குறைத்து புரத சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, வீட்டைப் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்துவது, வீட்டு வேலைகளை செய்வது, துணி துவைப்பது போன்றவற்றிற்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். இது நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதுடன், உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும்.
3. பிள்ளைகளுடன் விளையாடுவது: பிள்ளைகளுடன் விளையாடும்பொழுது நடப்பது, ஓடுவது போன்ற செயல்கள் உடலை இயங்க வைக்க உதவும். இதனால் தொப்பையை குறைக்க முடியும். குழந்தைகளுடன் நடை பயிற்சி செய்வது, ஓடுவது, பந்து விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற விளையாட்டுகள் சிறந்த உடற்பயிற்சியாகி தொப்பையை குறைக்க உதவும். பிள்ளைகளுடன் விளையாடுவதன் மூலம் மன அழுத்தம் குறைவதுடன், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே ஒரு நல்ல உறவும் கிடைக்கிறது.
4. படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது: படிக்கட்டுகளில் ஏறுவது, இறங்குவது தட்டையான இடத்தில் நடப்பதை விட மூன்று மடங்கு வேகமாக கலோரிகளை எரிக்க உதவும். கால்கள், தொடை, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தசைகளை வலுவடையச் செய்யும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சோர்வை குறைக்கும். இதயத்தை வலுவடையச் செய்யும். படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது தொப்பையை குறைக்க சிறந்த ஒரு வகையான கார்டியோ பயிற்சியாகும். கொழுப்பை கரைத்து, தசைகளை வலுப்படுத்தி, கலோரிகளை எரிக்க உதவும்.
5. தோட்ட வேலை: தோட்டவேலை செய்பவர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களை விட ஆரோக்கியமாக இருக்கலாம். தோட்டவேலை செய்யும் பொழுது சூரிய ஒளி உடம்பில் படுவதால் விட்டமின் D கிடைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தோட்டத்தில் களை எடுப்பது, நீர் விடுவது, மண்ணைக் கிளறி தோண்டுவது போன்றவை குனிந்து நிமிரும் இயக்கங்கள். இந்த செயல்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும்.
6. ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்: சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டுவது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதுடன். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது உடலின் அனைத்து பகுதிகளையும் பயிற்சி செய்ய உதவுவதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். வியர்வை சிந்த ஓடுவதும், வேகமான நடையும் கூட தொப்பை கொழுப்பை குறைக்கும் சிறந்த கார்டியோ பயிற்சியாகும்.
7. நீச்சல்: நீச்சல் என்பது ஒரு முழு உடற்பயிற்சியாகும். இது தசைகளை வலுப்படுத்தி, தொப்பை கொழுப்பை குறைத்து ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும். நீச்சல் பயிற்சி செய்வதால் கலோரி எரிப்பு, தசைகளை வலுவூட்டுதல், இதயத் துடிப்பை அதிகரித்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் போன்ற பலன்கள் ஏற்படும். வாரத்திற்கு மூன்று முறை 30 முதல் 45 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.
8. யோகா: யோகா என்பது உடல் செயல்பாடு, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் ஆகிய அனைத்தும் கலந்த சிறந்த உடற்பயிற்சியாகும். இது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மன அழுத்தத்தை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, தசைகளை வலுப்பெறச் செய்யும். படகு போஸ், கோப்ரா போஸ் போன்றவற்றை தினமும் செய்து வர தொப்பை கொழுப்பை எளிதாகக் குறைக்கலாம்.
9. ஆரோக்கியமான பழக்கங்கள்: சரிவிகித உணவு, போதுமான தூக்கம், தியானம், யோகா போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களைப் பயன்படுத்துவது, உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வது, நார்ச்சத்து அதிகமுள்ள பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் என ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வதும், உடற்பயிற்சி செய்வதும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு தேன் கலந்து பருகுவதும் சிறந்த பலனைத் தரும்.